மேககணினியில் தரவை எவ்வாறு சேமித்துநிர்வகிப்பது 

தனிநபர்களும் நிறுவனங்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏறாளமான அளவில் தரவுகளை உருவாக்குகின்றனர். சமூக ஊடகங்கள்,எண்மபரிமாற்றங்கள், பல்பொருள்இணையம்(IoT) , நிறுவனங்களின் தரவுத்தளங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட இந்தவளாகத்தின் தரவு மிகவும் சிக்கலானது, வளாகத்தில் உள்ள தரவு சேமிப்பக தீர்வு போதுமானதாக இல்லை. இதன் விளைவாக, நிறுவனங்கள் மேககணினி அடிப்படையிலான சேமிப்பகத்திற்கு மாறுகின்றன. இந்தக் கட்டுரை மேககணினி தரவு மேலாண்மை , அதன் நன்மைகள் , மேகக்கணியில் தரவை எவ்வாறு கையாள்வது என்பதை விரைவாக ஒருபறவைபார்வையில் காணஉதவுகிறது.

மேககணினியின் தரவு மேலாண்மை என்பது ஒரு நிறுவனத்தின் தரவை மேககணினியில் சேமித்து செயலாக்குவதற்கான ஒரு வழிமுறையாகும். மேககணினியின் இயங்குதளங்கள் வழியாக தரவு மேலாண்மையானது விரைவான பேரழிவு மீட்பு, திறமையான பிற்காப்பு , எந்த இடத்தில் இருந்து அணுகல் உறுதி ஆகிய வசதிவாய்ப்புகளை கொண்டுள்ளது. மேலும், அளவிடுதல் , நெகிழ்ச்சித் தன்மை ஆகிய வசதிகளால் மேககணினியின் தரவு மேலாண்மையை கொண்டு வளங்களை எளிதாகக் கையாள முடியும்.

மேககணினியில் தரவை நிர்வகிப்பது என்பதுபாரம்பரிய அணுகுமுறையிலிருந்து வேறுபட்டது. ஒரு பாரம்பரிய தரவுக் கிடங்கு அமைப்பு வளாகத்தில் உள்ள தரவு மையங்களுக்கு நன்றாக செயல்படுகிறது. இருப்பினும், இதற்காக எந்தவொரு நிறுவனமும் இதற்கு தேவையான வன்பொருட்களையும், சேவையகங்களையும் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது, மேலும் வலைபின்னல் நிபுணர்களை நியமிக்க வேண்டியுள்ளது. எனவே, இந்நாட்களில் மேககணினி அடிப்படையிலான இயங்குதளங்களைப் பயன்படுத்தி தரவு சேமிப்பகம் பாரம்பரிய வளாகத்தின் அணுகுமுறையை விட பிரபலமடைந்து வருகிறது.மேககணினி இயங்குதளங்களில் தரவு சேமிப்பகம் பின்வரும் வழிகளில் பாரம்பரிய வளாகத்தின் அமைப்புகளிலிருந்து வேறுபட்டது.

அளவிடுமுறை: ஒரு மேககணினியின்தரவு மையம் ஒரு பெரிய சேமிப்பிட இடத்தையும் சேவையக வளங்களையும் வழங்குகிறது. எனவே, ஒரு வாடிக்கையாளரானவர் தான் சேமிக்க விரும்பும் தரவைப் பொறுத்து, மேககணினியி சேவையகங்கள் எளிதாக மேலே அல்லது கீழே அளவிட முடியும். இது தவறு சகிப்புத்தன்மையை செயல்படுத்துகிறது , பணியில்லா நேரத்தை தவிர்க்கிறது.

மீள்தன்மை: மேககணினியின் சேவையாளரில் சேமிக்கப்பட்ட தரவு அனைத்து சேவையகங்களிலும் சமமாக விநியோகிக்கப்படுகிறது, இதனால் அவை அச்சுறுத்தல்களுக்கு அதிக மீள்திறன் கொண்டவை. பாரம்பரிய தரவு மேலாண்மை அமைப்புகள் மீள்தன்மை கொண்டவை அல்ல , அவற்றில் சேவையக செயல்திறன் குறைவாகவே உள்ளது.

குறைக்கப்பட்ட சேமிப்பக செலவு: மேககணினியின் தரவு சேமிப்பக சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இறுதிப் பயனாளர் தான்பயன்படுத்தப்படும் சேமிப்பக ஆதாரங்களுக்கு மட்டுமே பணம் செலுத்துகிறார். ஆனால், ஒரு பாரம்பரிய தரவு மேலாண்மை அமைப்பில்,  சேவையாளர்களை வாங்க வேண்டும்.

மேககணினியின் தரவு நிர்வாகத்தின் முக்கிய நன்மைகள்

மேககணினிதரவு நிர்வாகத்தின் சில குறிப்பிடத்தக்க நன்மைகள் பின்வருமாறு.

அ) பாதுகாப்பு: நவீன மேககணினியின் தரவுமையங்கள் வளாகத்தின் தீர்வுகளுடன் ஒப்பிடும்போது உயர் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. மேககணினியின் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், தரவு இழப்பு, வன்பொருள் செயலிழப்பு ஆபத்து குறைக்கப்படுகிறது. பாரம்பரிய வளாகத்தின் அணுகுமுறைக்கு மாறாக, மேககணினியின் புவலர்நிறுவனங்கள் மறையாக்கம், அங்கீகாரத்தின் மேம்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.

ஆ) அளவிடுதலும் சேமிப்பும்: மேககணினியின் இயங்குதளங்கள் பாரம்பரிய வளாகத்தின் அணுகுமுறையுடன் ஒப்பிடும்போது மேம்பட்ட அளவிலான அளவிடுகின்றல் திறனை வழங்குகின்றன. அவை இயக்கநேரத்திலேயே சேர்த்தல்  சேமிப்பக இடத்தின் வெளியீட்டுடன் உச்ச சுமைகளின் போது கணினி ஆற்றலை வழங்குகின்றன. பாரம்பரிய அணுகுமுறையில், கணினி வளங்களின் பற்றாக்குறை இருந்தால், உடனடியாக பயனாளர் வன்பொருள் உள்கட்டமைப்பை வாங்கி நிறுவுகைசெய்திட வேண்டும்.

இ) ஆளப்படும் அணுகல்: மேககணினியில், தரவு ஆளுகை நடைமுறையானது இரகசியத் தரவுகளுக்கான ஒழுங்குபடுத்தப்பட்ட , கண்காணிக்கப்படும் அணுகலை உறுதி செய்கிறது. இந்த அம்சம் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் தரவை அணுகுவதை ஆதரிக்கிறது. மேககணினி தரவுத்தள அமைப்பில் தரவு ஆளுமை நெறிமுறைகளை (அங்கீகாரங்கள், கொள்கைகள், மீப்பெரும் தரவு போன்றவை) செயல்படுத்துவதன் மூலம் இது அடையப்படுகிறது. எனவே, தரவுகள் , ஆதாரங்கள் ஆகியவற்றின் தேவைக்கேற்ப அணுகலைப் பயன்படுத்துவதன் மூலம், மேககணினியானது வணிகங்களுக்கு குறிப்பிடத்தக்க செலவுச் சேமிப்பை வழங்குகிறது.

ஈ) தானியங்கு காப்புப்பிரதிகளும் பேரழிவு மீட்பும்: பாரம்பரிய அணுகுமுறையில், பேரழிவு மீட்பு அமைப்புக்கு நிலையான பராமரிப்பும் ஆதரவும் தேவைப்படுகிறது. மேககணினியில் பேரழிவு மீட்பு என்பது முக்கியமான தரவுகளை  பயன்பாடுகளை மேககணினி சேமிப்பபகத்தில் சேமித்து வைப்பதும், பேரழிவு ஏற்பட்டால் இரண்டாம் தளத்தில் தோல்வியுற்றதும் ஆகும்.

மேகக்கணியில் தரவுகளுக்கான மேலாண்மை உத்தியை உருவாக்குதல்

தகவல் தொழில்நுட்பத் துறையில், பெருநிறுவன இலக்குகளை அடைவதற்கு மேககணினி தரவு மேலாண்மை உத்திகள் முக்கியமானவை. மேககணினியின் தரவுகளின் சேவையாளரில் தரவுகளை எவ்வாறு கையாள்வது என்பதற்கான படிமுறைகள் பின்வருமாறு.

அ) சரியான திட்டமிடல் பொறிமுறையை உறுதி செய்தல்:செயல்திட்ட மேலாண்மையின் வெற்றிக்கு திட்டமிடல் முக்கியமானது. மேககணினியின் தரவு நிர்வாகத்தில்,மேககணினியின் சூழலில் தரவை வெற்றிகரமாக ஒன்றாக குவிப் பதற்கு, பயனாளர் பின்வரும் சிக்கல்களை கவனித்துக் கொள்ள வேண்டும்:i) முழு மையான தரவுகளை மேககணினியில் ஏற்றப்படுவதை உறுதி செய்தல்,ii) திறமை யான தரவு அணுகலுக்கான முறையான வழிமுறைகளை செயல்படுத்துதல், iii)  மேகக்கணி சேவையகத்தில் தரவு செயலாக்கம் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என தீர்மானித்தல்.

ஆ) தரவுகளின் நிலைத்தன்மையைப் பேணுதல்: தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்ட தகவல் துல்லியமானது என்பதையும், தரவுகளில் மிகுதியாக்கம் எதுவுமில்லை என்பதையும் தரவு நிலைத்தன்மையும் உறுதி செய்கிறது.

இ) சேமிக்கப்பட்ட தரவின் காப்புப்பிரதியை வைத்திருத்தல்:  மேகக்கணிசேவை வழங்குநர்கள் வழக்கமான காப்புப்பிரதியின் நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள். மேகக்கணி தரவுமையங்களில், தொலைதூரஇடங்களின்சேவையாளருக்கு தரவை நகலெடுப்பதன் மூலம் வழக்கமான காப்புப்பிரதி செய்யப்படுகிறது.

ஈ) தரவு நிர்வாகத்தை உறுதிப்படுத்துதல்: தரவுகளுக்கான ஒழுங்குபடுத்தப்பட்டதும் கண்காணிக்கப்படுவதுமான அணுகலை உறுதி செய்வதற்காக ஆளுகை நெறிமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன.

முசிவாக தரவுத்தளங்களின் அளவுகளின் வளர்ச்சியுடன், இன்றைய தரவு மேலாளர்களுக்கு எந்த இடத்திலிருந்தும் அணுகல், திறமையான தரவை நிர்வகிக்கக்கூடிய ஒரு அமைப்பு தேவை. இந்த நோக்கத்தை அடைய, மேகக்கணி தரவு மேலாண்மை உத்திகள் பல தொழில்களில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்பதே உண்மையான களநிலவரமாகும்.

%d bloggers like this: