மூடுபனி கணினி(fog computing)

மூடுபனி கணினி( fog computing) என்றால் என்ன? என்ற கேள்வி நம்மனைவர் மனதிலும் எழும் நிற்க.ஆரம்ப நாட்களில், கணினிகள் மிகப்பெரியதாகவும் அதிகவிலை உயர்ந்ததாகவும் இருந்தன. அதனால் நாம் வாழும் இவ்வுலகில் ஒரு சிலரே அவற்றினை பயன்படுத்தி கொண்டிருந்தனர், மேலும் அவர்கள் அவ்வாறானதொரு கணினியை செயல்படுத்திடு வதற்காக வென அதிக நேரத்தை ஒதுக்கி துளையிடப்பட்ட அட்டைகளை( punch cards) பயன்படுத்த வேண்டியிருந்தது (நேரடியாக காண்பிக்க வேண்டியிருந்தது). இதுவே mainframes எனஅழைக்கப்பட்டது. இவ்வமைப்புகள் பல்வேறு கண்டுபிடிப்புகளைச் செய்தன மேலும் முனைமங்களில் (மேசைக்கணினிகள் போன்றவை, ஆனால் அவைகளில் சொந்த CPU இல்லாமல்) நேரத்தைப் பகிர்ந்துகொள்கின்ற பணிகளை செயல்படுத்தின. அதனை தொடர்ந்து பல்வேறுஆராய்ச்சிகளின் பயனாக மேம்படுத்தபட்டு தற்போது சக்திவாய்ந்த கணினியானது மிகவும் மலிவாகவும், கடனட்டையை விட பெரியதாக இல்லாத வாறும் முன்னேற்றங்கண்டு பயன்பாட்டிலுள்ளது, அதிலும் தற்போதைய நம்முடைய நவீன வாழ்க்கையில் அனைத்து தரவுகளையும் சேகரித்து செயலாக்குகின்றவாறும் நாம் பயன்படுத்துகின்ற மிகச் சிறிய சாதனங்களையும் செயல்படுத்துகின்றவாறும் மாறிவிட்டன. என்பவையே இந்த கணினிகளின் தொகுப்பைப் பற்றிய தற்போதைய நிலையாகும், மேலும் இந்த சாதனங்கள் அனைத்தும் கடற்கரையிலுள்ள மணல் துகள்கள் போன்றவை அல்லது வானத்திலுள்ள கருமேகத்தின் தண்ணீர்துளிகள் போன்றவை என கற்பனை செய்துகொள்ளலாம்.
“மேககணினி(cloud computing)” என்ற சொல் ஏற்கனவே ஆக்கிரமித்துவிட்டது, எனவே பொருட்களுக்கான இணையம் (Internet of Things (IoT))என்பதற்கும் முடிவுசெய்கின்ற திறனுடையதாக அமைந்துள்ள பிற சேவையகங்களை உள்ளடக்கிய பிணையத்திற்கும் ஒரு தனித்துவமான பெயர் இருக்க வேண்டும் அல்லவா. தவிர, தரவுகளின் மையங்களின் முனைமங்களைக் குறிப்பதற்காக ஏற்கனவே மேககணினி என ஒன்று இருப்பதால், அந்த மேககணினிக்கு வெளியே பொதுமக்களை ஒன்றிணைக்கின்ற முனைமங்களில் தனித்துவமான ஒன்று இருக்கிறது அதுவே மூடுபணிகணினியாகும்( fog computing).
மூடுபனி கணினியின் ( fog computing)வருகை
மேககணினியானது இணையத்திற்கான சேவைகளை வழங்குகிறது. ஆனால் மேககணினியை உருவாக்குகின்ற தரவுகளின் மையங்கள் அவற்றின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகப்பெரியவை களாகவும் ஒப்பீட்டளவில் மிகவும்குறைவாகவும் உள்ளன. மேகக்கணிக்கும் அதனுடைய பல்வேறு பயனாளர் களுக்கும் இடையில் தரவுகள் முன்னும் பின்னுமாக அதற்கான பாதைகளில் அனுப்பப்படும் போது அவைஒரு குறுகிய பாதைவழியாக செல்வதால் தரவுகளின் போக்குவரத்தில் தடைகளை (சிக்கல்களை)உருவாக்குகின்றன. இதற்கு மாறாக மூடுபணி கணினியானது,அதன் வாடிக்கையாளர்களுடனான தரவுகளின் போக்குவரத்திற்கான பாதையானது குறுகிய பாதையாக இல்லாமல் தரவுகளின் போக்குவரத்தில் எந்ததடைகளையும் (சிக்கல்களையும்) ஏற்டுத்தாமல் எந்தவொரு இடையூறுக்கும் ஆளாகாமல் செயல்படுகின்றது, ஏனெனில் இதில் பயன்படுத்தி கொள்ளப்படும் சாதனங்களே தரவுகளின் சேகரிப்பினை அல்லது கணக்கீட்டின் பெரும்பகுதியைச் செய்கின்றன. இவ்வாறான மேககணினியின் வெளிப்புற “விளிம்புநிலை(edge)”, ஆனது வானத்திலுள்ள கருமேகமானது தரையை தொடுகின்றபகுதி (அடிவானம்)போன்று விளங்குகின்றது.
மூடுபனிகணினியும் ( fog computing)விளிம்புநிலை கணினியும் (edge computing)
மூடுபனி கணினி , விளிம்புநிலை நிலைகணினி ஆகிய இரண்டும் அடிப்படையில் ஒத்தவைகளாகும். இவ்விரண்டும் மேககணினி, பொருட்களுக்கான இணையம்(IoT) ஆகிய இரண்டிலும் வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளன மேலும் இவை ஒரே கட்டமைப்பு அனுமானங்களை உருவாக்குகின்றன:
இவை தங்களுடைய பணியைச் செய்யும் CPU உடன் நெருக்கமாக இருப்பதால், தரவுகளின் பரிமாற்றமானது மிகவிரைவாக இருக்கின்றன.
லினக்ஸைப் போலவே, சிறிய, அதே நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட கணினிகளைக் கொண்டிருப்பதற்கு ஒரு வலுவான நன்மை இருக்கிறது, அது “ஒரேயொரு செயலை செய் அதையும் சிறப்பாகச் செய்.” (நிச்சயமாக, இந்த சாதனங்கள் உண்மையில் குறிப்பிட்ட ஒருசெயலைவிட அதிகமாகவே செய்கின்றன, ஆனால் ஒரு உயர் மட்ட பார்வையில், நம்முடைய உடல்ஆரோக்கியத்தை கண்காணிக்க நாம் வாங்கி நம்முடைய கையில் கட்டி பயன்படுத்திகொள்கின்ற திறன்கடிகாரமானது அடிப்படையில் “ஒரேயொரு” செயலை மட்டுமே செய்கிறது.)
பொதுவாக இவை செயல்படும்போது இணையத்துடன் இணைப்பில்லாமல் இருப்பது தவிர்க்க முடியாத நிலையாகும், ஆனால் ஒரு நல்ல சாதனம் இணைய இணைப்பில்லாத இடைக்காலத்திலும்கூட திறம்பட செயல்படுகின்றது, பின்னர் மீண்டும் இணையத்துடன் இணையும்போது தரவுகளை நிகழ்நிலை படுத்தி கொள்வதற்காக ஒத்திசைவாக செயல்படுகின்றது. பெரியஅளவிலான தரவுகளின் மையங்களை விட வளாக சாதனங்கள் எளிமையாகவும் மலிவாகவும் இருக்கின்றன
விளிம்பு நிலைகணினியில் வலைபின்னல்
மூடுபனி கணினியானது மேககணினியிலிருந்து முற்றிலும் தனித்து செயல்படுமாறு தூண்டுகிறது, ஆனால் அவை மொத்தத்தில் இரண்டு பகுதிகளே. பொது மேககணினி வழங்குநர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்களுடைய சொந்த சேவைகளை இயக்குகின்ற சிறப்பு நிறுவனங்கள் உட்பட எண்ணிம(digital ) நிறுவனத்தின் உள்கட்டமைப்பு ஆனது மேகக்கணிக்கு தேவையாகும். மேககணினி யின்உள்ளகத்திற்கும்(core ) அதனுடைய மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கும் இடையில் வழித்தடங்களை வழங்க உள்ளூர்மயமாக்கப்பட்ட சேவைகள் மிக முக்கியமாகும். பொதுவாக மூடுபனி கணினியானது, மேககணினியின் விளிம்பில் அமைந்துள்ளது, ஆயினும் இது வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் ஒன்றிணைக்கிறது. ஒருசில நேரங்களில், இதுநம்முடைய சொந்த வீடு அல்லது மகிழ்வுந்து வண்டி போன்ற நுகர்வோர் அமைப்பாகவும் திகழ்கின்றது, மற்ற நேரங்களில், இது ஒரு சில்லறை விற்பனை கடையில் விலை கண்காணிப்பு சாதனங்கள் அல்லது ஒரு தொழிற்சாலையில் உள்ள முக்கிய பாதுகாப்பு உணர்விகள்(sensors) போன்ற வணிக செயல்பாடாகவும் அமைந்துள்ளன.
மூடுபனி கணினி நம்மை சுற்றி உள்ளது
நடைமுறையில் மூடுபனி கணினி என்பது நம்முடைய வாழ்வில் இணைக்கப்பட்ட அனைத்து சாதனங்களாலும் கட்டமைக்கப் பட்டுள்ளது: drones, கைபேசிகள், கைக்கடிகாரங்கள், உடற்பயிற்சி கண்காணிப்பாளர்கள், பாதுகாப்பு கண்காணிப் பாளர்கள், வீட்டு தானியங்கி கருவிகள், கையடக்க விளையாட்டு சாதனங்கள், வீட்டுதோட்டங்களில் பயன்படுத்தி கொள்ளப்படும் தானியங்கி சாதனங்கள், வானிலைஉணர்விகள், காற்று-தர கண்காணிப்பான்கள் போன்ற பல்வேறு சாதனங்கள் இந்த மூடுபனி கணினியின் அடிப்படையிலேயே செயல்படக் கூடியவைகளாகும். , இது வழங்குகின்ற தரவுகள் சிறந்த, தகவலறிந்த எதிர்காலத்தை உருவாக்க உதவுகின்றன. உடல்நலனையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்காக அல்லது நம்முடைய வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக்குவதற்கு ஏராளமான வகையில் பெரியபெரிய திறமூல செயல்திட்டங்கள் இந்த மூடுபணியின் வாயிலாக செயல்படுவதற்கு தயாராக உள்ளன – இவையனைத்தும் இந்த மூடுபனிகணினி, மேககணினி ஆகியவற்றிற்கு நன்றி செலுத்த கடமைபட்டுள்ளன. எது எவ்வாறாயினும், இவை திறமூல(கட்டற்ற) நிலையில் இருப்பதை உறுதி செய்கின்றன என்பதே இதன்சிறப்பாகும்.

%d bloggers like this: