பைதான் எனும் கணினிமொழியில் மறைந்துள்ள வசதிவாய்ப்புகள்

 

நிரலாக்க உலகில் பைத்தான் எனும் கணினி மொழியானது தனக்கு என ஒரு சிறப்பான இடத்தினை தக்கவைத்து கொண்டுள்ளது, ஏனெனில் இந்த கணினிமொழியை கற்றுக்கொள்வது  எளிது,. துவக்க நிலையாளர்களுக்கு அதாவது கணினிமொழி பற்றியே அறியாத புதியவர்களும் இதனை கற்றுக்கொள்ள ஒரு எளிய மொழியாகக் காணப்படுகிறது, ஏனெனில் இதில் பொதுவாக நிரலாளர் சார்பாக தரவு வகைகள் போன்ற சிக்கலான கருத்துக்களை எளிதாக தீர்வுசெய்திட முடியும். இது படிக்க எளிதானது என்று கருதப்படுகிறது, ஏனெனில் இதனுடைய தொடரியல் எளிமையானது, இது யூகிக்கக்கூடிய வடிவமைப்பை செயல்படுத்துகிறது. இதில் பிழைத்திருத்தம் செய்வது எளிதானது, ஏனெனில் பல பிழைகளை  சொந்தமாகப் தேடிபிடிப்பது மட்டுமல்லாமல், இது குனு(GNU) பிழைத்திருத்தம் (gdb.) போன்ற மேம்பட்ட கருவிகளுடன் ஒருங்கிணைக்கிறது, மேலும் இது அதன் நற்பெயருடன் பிரபலமாக இருந்துவருகின்றது. நம்முடைய வாழ்க்கையின் அனைத்து செயல்முறைகளையும் போலவே, நிரலாக்க மொழிகளுக்கும் மாற்றம் தவிர்க்க முடியாதது. கணினிகள் என்றென்றும் மேம்படுத்தி கொண்டே வந்துகொண்டிருப்பதால் பைதான் எனும் கணினிமொழியும் புதிய சூழலில் செயல்படுவதற்கேற்ப மேம்படுத்தி கொண்டே வருகின்றது, மேலும் பைதான் எனும் ஒரு “எளிய” நிரலாக்க மொழி தங்களுக்கு என்ன செய்யமுடியும் என்ற மக்களின் எதிர்பார்ப்புகளும் காலப்போக்கில் மாறிகொண்டே இருக்கின்றன. கூடுதலாக, பிற கணினி மொழிகள் சில நேரங்களில் பைத்தானுக்கு ஏற்றவாறு நல்ல ஆலோசனைகளைக் கொண்டு வருகின்றன. அதனடிப்படையில் பைதான் 2.x மிகவும் பிரபலமாக இருந்தது, எனவே பைதான் 3 ஆனது அடிவானத்தில் காணத் தொடங்கிய போது, ​​உற்சாகமான வரவேற்புகளுடன்  அதனால் என்னென்ன பாதிப்புகள் வருமோ என்றவாறு அனைவரும் எண்ணத்தக்கவாறு கணிசமான அளவு கவலையையும் தன்னுடன் கொண்டுவந்தது. பைத்தான்3 எவ்வாறு சிறப்பானதாக இருக்கும் என்பதை அறிய அனைவரும் விரும்பினர், ஆனால் அவ்வாறான கட்டாயமான மாற்றத்தினால், மேம்படுத்தப்படாத முக்கியமான நூலகங்களின் இழப்பு ஏதேனும் ஏற்படுமோ என்ற பயமும்கூடவே கொண்டுவந்தது , ஏற்கனவே உள்ள குறிமுறைவரிகளின் தளங்களை மாற்றியமைக்க புதிய பணிச்சுமை உருவாக்க்கூடும் என்பதில் நிச்சயமற்ற தன்மையும் இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, பைதான் 3 உறுதியாக நிறுவப்பட்ட நிலையில், மாற்றம் நன்றாக நடந்தது என்று சொல்வது பாதுகாப்பானது. மேலும், பைதான் 3 தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே வருகிறது, அதுமட்டுமல்லாது கணினிமொழியின் முந்தைய மறுகட்டமைப்புகளின் நோக்கங்களை விட மிக அதிகமான மேம்பாடுகளைக் கொண்டுவருகின்றது. பைதான் 3 இல் உள்ள அனைத்து மாற்றங்களையும்புதிய வசதிகளையும் ஒரு கட்டுரையில் குறிப்பிடமுடியாது இருந்தபோதிலும்  ஐந்து வசதிகளை மட்டும் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1.முக்கிய சொல் (Keyword) மட்டுமே தருமதிப்பாகும்

பைதான் 3.0 இல், முக்கிய சொற்கள் குறிப்பிடத்தக்கவை. ஒப்பீட்டளவிலான ஆலோசனை எளிதானது: நம்மிடம் தொடர்ச்சியான தருமதிப்புகள் இருந்தால், அவற்றில் சில விருப்பத்தேர்வாக இருந்தால், ஒவ்வொரு தருமதிப்பு அடுக்கிற்கும் ஏதேனும் ஒன்றை  அனுப்ப வேண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக,  generate_widget(position, shape, color),  என வரையறுக்கப்பட்ட ஒரு செயலியைக் கொண்டிருப்பதாகக் கொள்வோம், ஆனால் இதில் வடிவமைப்பின் (shape) தருமதிப்பானது விருப்பத் தேர்வாகும். பைத்தானின் முந்தைய பதிப்புகளில், தேவையில்லை என்றாலும் நாம் வடிவமைப்பைத் தவிர்க்க முடியாது தாண்டிச் செல்லமுடியாது:

generate_widget(10, None, ‘Blue’)

இருப்பினும், பைதான் 3.0 ஐப் பொறுத்தவரை, நாம் தருமதிப்புகளை None எனக் குறிப்பிடலாம், இதனால் வழங்கப்படாத எந்த தருமதிப்புகள் எதுவும் இல்லை என்பதாகும்:

generate_widget(10, None, ‘Blue’)

இது மிகவும் எளிமையான முன்னேற்றம், ஆனால் இது பைத்தானை மற்ற கணினி மொழிகளைப் போலவே உணரவைத்தது இது நல்லதொரு புதிய வழியில். 15இற்குமேற்பட்ட விருப்பத் தேர்வுகளின் தருமதிப்புகளுடன் நாம் ஒரு செயலியைப் பயன்படுத்தும் தருணமாகும், இந்த மாற்றத்தை பாராட்டி  மிக விரைவாக கற்றுக்கொள்க.

2.நட்புடன் வடிவமைத்தல்

பைதான் 3.1 இல் ஆயிரக்கணக்கான வடிவமைக்கும் வசதிகளை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன (பெரும்பாலும் முக்கியமற்றது). சுருக்கமாக:

>>> print(“1024 becomes {:,d}”.format(1024)).

இதில் 1024 எனும் வடிவமைப்பானது 1,024 எனும் வடிவமைப்பாகிறது இது விளையாட்டாக மாற்றுவது அன்று, இது அவசியமில்லை, ஆனால் இது முக்கியமான ஒன்றைக் குறிக்கிறது:  சில நேரங்களில் இவ்வசதி பைத்தானைப் பற்றியதாகும்.

  1. தற்காலிக சேமிப்பு (Caching)

பைத்தானில் மிகவும் ஆழ்ந்துஆய்வு செய்துப் பார்த்தால், கணினி அறிவியலில் ஆச்சரியப்படத்தக்க வகையிலான வசதிவாய்ப்புகள் இதில்இருபப்தை இருப்பதைக் காணலாம். Functools.lru_cache எனும் வசதி அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும், ஆனால் ஒரே நேரத்தில் பைதான் உண்மையில் மேம்பட்ட குறிமுறைவரிகளின் கொள்கைகளை எடுத்து அவற்றை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. Functools.lru_cache மூலம், முன்பு கணக்கிடப்பட்ட மதிப்புகளிலிருந்து முடிவுகளை மீண்டும் பயன்படுத்த பைத்தானை இயக்க நம்முடைய குறிமுறைவரிகளில் (@ functools.lru_cache) எனும் ஒரு ஒற்றையான statement ஐப யன்படுத்தலாம்.

  1. சுதந்திரமான பாதை(Pathlib)

பைதான் கோப்பு முறைமைகளின் பாதைகளைச் செய்ய போதுமானதாக இருந்தது, ஆனால் அவை எப்போதும் எழுத்துகளிலான சரங்களை சார்ந்தவைகளாகும். பெரும்பாலான நிரலாளர்களுக்கு இது பரிச்சயமான நன்மையைக் கொண்டிருந்தது, ஏனெனில் பைதான் கணினிமொழியின் எந்துவொரு ஆரம்ப அடிப்படை  கற்றல்களுக்கான பாடங்களிலும் சில சரங்களை கையாளுதலை உள்ளடக்கியது. இருப்பினும், பாதைகளை சரங்களாகக் கருதுவது மேம்பட்ட செயல்பாடுகளுக்கு சிக்கலானதாக இருக்கும். அவ்வாறான சூழலில் Pathlibஎனும் தொகுப்பு (module) பைத்தானை பாதைகளை பொருள்களாகக் கருத உதவுகிறது:

>>> myfile = pathlib.Path.home() / “example.txt”

>>> text = myfile.read_text().splitlines()

>>> for line in text:

print(line)

Hello

open

source

world

5. os.scandir

பைதான்மொழியாநது தான் இருக்கின்ற  எந்த வொரு இயக்க முறைமையுடனான தொடர்புகளுக்கு பைத்தானின் os தொகுப்பு பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. அவ்வாறானவைகளுள் scandir  எனும் செயலி பைதான் 3.5 க்கு புதியது, இது அடைவு உள்ளடக்கங்களை தரவுகளின் பொருள்களாக கருதுகிறது:

>>> os.scandir()

<posix.ScandirIterator object at 0x7fe589a8acc8>

>>> for entry in os.scandir():

…     print(entry)

<DirEntry ‘.backups’>

<DirEntry ‘example.txt’>

<DirEntry ‘.gitignore’>

<DirEntry ‘.git’>

ஒரு கோப்பகத்தை வருடுதல் செய்து ஒரு பட்டியலுக்குப் பதிலாக ஒரு தரவு பொருளைப் பெறுவது புதிய நிரலாளர்களுக்கு குழப்பமாக இருக்கலாம் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது, ஆனால் சரங்கள், பிற அடிப்படை தரவுகளின் வகைகளுக்குப் பதிலாக பொருட்களைக் கையாள்வது கற்றுக்கொள்ள ஒரு முக்கியமான பாடமாகும். scandir எனும் விருப்பத்தேர்வுகள் போன்ற வசதிகள் பைதான் 3 இல் பாரம்பரிய கணினி மொழிகளின் எதிர்பார்ப்புகள் , மரபுகளை நோக்கி குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதைக் குறிக்கிறது.

Pythonicஇன் வளர்ச்சி

பைத்தானின் வளர்ச்சியானது இந்த கணினிமொழி முன்னெப்போதையும் விட மிகவும் பொருத்தமானதாக இருக்க உதவியது, ஆனால் பல நிரலாளர்களுக்கு, பைத்தான் நிரலாளர்கள் அவர்களை மிகவும் ஈர்க்கும் விதமாக வளர உதவுகிறது. பைத்தானில் துவக்கநிலையிலுள்ள ஒரு புதிய நிரலாளர் என்றால், சில அடிப்படை பாடங்களைக் கொண்டு சில சக்திவாய்ந்த செயல்களைச் செய்ய  கற்றுக்கொள்ளலாம். நம்முடைய பணியை செய்ய உதவும் ஒரு பயன்பாட்டை எழுத விரும்புகிறீர்களா, அல்லது ஒரு சேவையகத்தை நிர்வகிக்க உதவும்உரைநிரலாக்கத்தையா அல்லது பொழுதுபோக்காக நேரத்தை கடத்த ஒரு எளிய விளையாட்டினை உருவாக்கவிரும்புகின்றோமா , என்றவாறு நம்முசைய எந்தவொரு தேவைக்கும் பைதான் அநேகமாக பொருத்தமான தீர்வாக இருக்கின்றது.

%d bloggers like this: