டைம் ட்ரைவ் – கால எந்திரம்

டைம் ட்ரைவ் (Time Drive) நமது எந்தவொரு கோப்பையும் (file) [அது இசை, காணொளி (video), படங்கள், ஆவணம் (document) அல்லது வேறெதுவாகவும் இருக்கலாம்] எளிய முறையில் காப்புநகல் (back up) எடுக்க, பயன்படுத்த எளிமையான பயனமைப்பு (utility). இதனைப் பயன்படுத்தி நம்மால் எத்தனை கோப்புகளையும் எத்தனை கோப்புறைகளையும் (folder) காப்புநகலெடுத்து, மீண்டும் ஒற்றைச் சொடுக்கில் (single click) மீள்விக்க (restore) முடியும். இது அதிகரிப்புக் காப்புநகல் (incremental backup) (தரவுகளைப் பல நகல்கள் எடுக்காமல் அவற்றின் வேறுபாடுகளை மட்டும் சேமிக்கும் ஒரு முறை) முறையைப் பின்பற்றுவது தனிச்சிறப்பு.

 

நீங்கள் உங்களுக்குப் பயன்படும் கோப்புகளை நீக்காமல் (delete) இருந்தால், டைம் ட்ரைவ் மூலம் அவற்றை விரைவாக உலாவவோ (browse) தேடவோ முடியும். பல கோப்புகளை மீள்விக்க (restore) வேண்டுமானால், அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் சேர்த்துவிட்டு பிறகு ஒரு சொடுக்கில் மீள்விக்கலாம்.

 

டைம் ட்ரைவ் ஆனது Python மற்றும் PyQt கொண்டு உருவாக்கி, மேம்படுத்தப்பட்டுள்ளது.  இது லினக்ஸ் (உபுண்டு, ஓப்பன்சூயெஸ்), மேக் ஓஎஸ் எக்ஸ் மற்றும் விண்டோஸ் (XP/ Vista / 7) போன்ற இயக்க அமைப்புகளில்  (operating system) இயங்கக் கூடியது. அது மட்டுமல்ல, எந்த தளங்களிலெல்லாம் (platform) போலித்தன்மையை (duplicity) (தகவல்களை மறையாக்கம் (encrypt) செய்து காப்புநகல் எடுக்கும் மென்பொருள்) நிறுவ (install) முடிமோ அவற்றிலெல்லாம் இதனை இயக்க முடியும்.

டைம் ட்ரைவினை Ubuntu (11.10/12.04) மற்றும் Linux Mint –ல் நிறுவும் முறை:

உபுண்டுவில் (11.10/12.04) டைம் ட்ரைவை நிறுவ, முதலில் அதன் சார்புகளை (dependencies) நிறுவ வேண்டும். இதற்கு உபுண்டு முனையத்தில் (terminal)

sudo apt-get install python-boto ncftp python-qt4 sshfs

என்ற கட்டளையைப் (command) பயன்படுத்த வேண்டும். டைம் ட்ரைவைப் பதிவிறக்கம் செய்து நிறுவ,

wget -O time-drive_0.4-1_all.deb goo.gl/auWnk

sudo dpkg -i time-drive_0.4-1_all.deb

 

நீங்கள் இன்னும் உபுண்டு (Jaunty, Karmic மற்றும் Lucid) பயன்படுத்துபவராக இருந்தால் PPA டைம் ட்ரைவை உங்கள் கணினியில் சேர்த்துக்கொள்ளலாம்.

sudo apt-add-repository ppa:time-drive-devel/stable

sudo apt-get update

sudo apt-get install time-drive

டைம் ட்ரைவினை Unity Dash (Unity) அல்லது Overlay (gnome shell) -இல் தொடக்கவும். (start)

குறிப்பு:

மேலும் பல தகவல்களுக்கு (ஆங்கிலத்தில்)

www.oak-tree.us/blog/index.php/science-and-technology/time-drive   என்ற இணைப்பைப் பார்க்கவும்.

 

 

நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். கணியம் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை கொடுத்த கணியம் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

வலை பதிவு : jophinepranjal.blogspot.in/

மின்னஞ்சல் : jophinep@gmail.com

 

%d bloggers like this: