ஜென்கின்ஸ் x எனும் கட்டற்ற அமைவு ஒரு அறிமுகம்

ஜென்கின்ஸ் x என்பது குபேர்நெட்களில் CI/CD என சுருக்கமாக அறியப்படும் தொடர்ச்சியாக ஒருங்கிணைத்தல் ,தானியங்கியாக பரிசோதித்தல் ,தொடர்ச்சியாக வழங்குதல் ஆகிய செயல்களனைத்தையும் செயற்படுத்திடும் முழுமையானதொரு கட்டற்ற அமைவாகும்

படம்-1

இதனை பயன்படுத்துபவர்கள் குபேர் நெட்டிற்கானஅமேசானின் வளையும்தாங்கி , கூகுளின் குபேரநெட் பொறி அல்லது மைக்ரேசாப்ட்டின் அஜூர் குபேர்நெட் சேவை போன்ற பெரியபெரிய மேககணினி சேவை வழங்குநர்களை இயக்குபவராக இருந்தால் இந்த ஜென்கின்ஸ்X நிறுவுகை செய்து வழங்குவது மிகஎளிய பணியாகும் பொதுவாக இது SpringBoot, Go, Python, Node, ASP.NET, Rust, Angular, React ஆகிய அனைத்து கணினி மொழிகளையும் ஆதரிக்கின்றது இதனை பயன்படுத்தி கொள்வதற்காக முதலில் jx create quickstart எனும் கட்டளைவரியை செயல்படுத்தி இந்த Jenkins X இல் ஒரு புதிய செயல்திட்டத்தினை உருவாக்கிடுக தொடர்ந்து நாம் வாய்ப்பு எதையும் தெரிவு செய்யவில்லையெனில் தானாகவே புதிய செயல்திட்டத்திற்கு பெயரிடுமாறான பகுதிக்கு நம்மை அழைத்து செல்லும் அதன் பின்னர் வழக்கம்போன்ற முதன்முதல் செயல் திட்டமான அனைவருக்கும் வணக்கம்எனும் புதிய இணைய செயல்திட்டத்தை தானாகவே உருவாக்கிடுகின்றது பின்னர் நாம் தெரிவுசெய்திடும் தளத்திற்கு பொருத்தமான வகைகோப்பான makefile அல்லது build script சேர்க்கின்றது அதன்பின்னர் மென்பொருளை உருவாக்கும் சூழலின் படிநிலைகளுக்கு ஏற்ப நிருவகிப்பதற்கான ஜென்கின்ஸ்கோப்பு ஒன்றினை சேர்க்கின்றது.பின்னர் Draft வாயிலாக ஒரு Docker கோப்பினைையும் Helm வரைபடங்களையும் அதனுடன் சேர்க்கின்றது அதன்பின்னர் குபேர்நெட்டிற்கு பயன்பாடுகளை அனுப்புவதற்கா Skaffold கட்டமைவு செய்கின்றது பின்னர் Git இன் வளக்கோப்பு ஒன்றினை உருவாக்கி அதில் புதிய செயல்திட்ட குறிமுறைவரிகளை அனுப்புகின்றது அதன்பிறகு ஒரு இணைய ஊக்கானது( webhooks) Git இலிருந்து ஜென்கின்ஸ் X இற்கு புதியசெயல் திட்டம் ஒன்று இயக்குவதற்கு தயாராக இருப்பதாக அறிவிக்கின்றது பின்னர்ஜென்கின்ஸ் pipeline வாயிலாக ஒரு PR இல் சமர்ப்பித்து ஒன்றிணைக்கின்றது அதன்பின்னர் ஓரிரு நிமிடங்களில் துவங்கிடும்முனையிலிருந்து முடிவுறும்முனைவரை (end-to-end)அனைத்தும் சரியாக இருக்கின்றதாவென சரிபார்த்திடுகின்றது இது செயல்படும்படிமுறைகள் (படம்.2)பின்வருமாறு

படம்2

1. மென்பொருள் உருவாக்குபவர் செயல்திறன் மற்றும் திட்டத்தின் மாற்றத்தை Git எனும் களஞ்சியத்திற்கு அனுப்புகின்றார்
2.
ஜென்கின்ஸ் X ஆனது அறிவிக்கப்பட்டு,ஜென்கின்ஸ்pipeline,நம்முடைய திட்டத்தின் மொழி, ஆதரவு ஆகிய கட்டமைப்புகளை கொண்டதொருDocker எனும் image-ல் இயக்குகின்றது,

3. செயல்திட்ட pipeline உருவாக்கி, பரிசோதித்து, செயல்திட்டத்தின் Helm விளக்கப்படத்தினை விளக்கப்படகாட்சியகத்திலும் அதன் Docker உருவப்படத்தினை பதிவேட்டிற்கும் அனுப்புகின்றது
4.
செயல்திட்ட pipelineஆனது, செயல்திட்டசூழலில் சேர்ப்பதற்கு தேவையான மாற்றங்களுடன் ஒரு PR உருவாக்குகிறது
5.
ஜென்கின்ஸ் X ஆனது தானாகவே முதன்மையாளருடன் PR இணைக்கின்றது
6.
ஜென்கின்ஸ் X ஆனது அறிவிக்கப்பட்டு, pipeline சூழலிற்கான வழியை இயக்குகிறது
7. pipeline
சூழலின் வழியானது Helm இயக்குகின்றது, தொடர்ந்துஅந்தச்சூழலை நிரவகிக்கின்றது, Dockerபதிவேட்டிலிருந்து வரைபடஅருங்காட்சியகம், Docker images ஆகியவற்றிலிருந்து Helm வரைபடங்களை கொண்டுவருகின்றது. தொடர்ந்து குபேர்நெட்செயல்திட்டத்தின் வளங்களை உருவாக்குகிறது,

ஜென்கின்ஸ் X இல் நம்முடைய நடப்பு செயல்திட்டதை உள்கொண்டுவருதல்

இதற்காக jx promote எனும் கட்டளைவரியை பயன்படுத்தி கொள்க. இது செயல்படும்படிமுறைகள் (படம்.3)பின்வருமாறு

படம்3

1 மென்பொருள் உருவாக்குநர் ஒரு செயல்திட்டத்தினை உருவக்கி மேம்படுத்துவதற்காக jx promoteஎனும் கட்டளைவரியை இயக்குக

2. ஜென்கின்ஸ் X ஆனது, செயல்திட்டத்தை சூழலில் சேர்ப்பதற்கு தேவையான மாற்றங்களுடன் ஒரு PR ஐ உருவாக்குகிறது
3.
மென்பொருள் உருவாக்குநர் தாமேமுயன்று கைமுறையாகPR ஐ அங்கீகரிக்க செய்திடுக, உடன் அது தானாகவேமுதன்மையான(Master)வருடன் இணைக்கப்பட்டுவிடும்

4.ஜென்கின்ஸ் X ஆனது அறிவிக்கப்பட்டு, pipeline சூழலின்வழியை இயக்குகிறது
5. pipeline சூழலின் வழியானது Helm இயக்குகின்றது, தொடர்ந்து அந்தச்சூழலை நிரவகிக்கின்றது, Dockerபதிவேட்டில் இருந்து வரைபடஅருங்காட்சியகத்தையும் Docker படங்களிலிருந்து Helm வரைபடங்களையும் கொண்டுவருகின்றது. தொடர்ந்து குபேர்நெட்செயல்திட்டத்தின் வளங்களை உருவாக்குகிறது,

இந்தஜென்கின்ஸ் X இனுடைய இதர பயன்கள்பின்வருமாறு

ஜென்கின்ஸ் X ஐ ஒவ்வொரு நிலையிலும் திரையில் காட்சியாக காண்பிக்குமாறு கோரி திரைக்காட்சியை காணலாம் . CI/CD ஆகிய செயல்களுக்கு தேவையான விரிவாக்கத்தினை இந்தஜென்கின்ஸ் X இல் உருவாக்கிடலாம் . HTMLபடிவங்களிற்கு பதிலாக குறிமுறைவரிகளால் வரையறுக்கப்பட்ட கட்டமைவுடன் கட்டளைவரிவாயிலாக வகைவகையான ஜென்கின்ஸ் pipelinesகளை இயக்கி பயன்பெறலாம் மிகமுக்கியமாக இதனை செயல்படுத்தி பயன் பெறுவதற்காகவென தனியாக சேவையாளர் (Serverless) கணினியெதையும் பராமரிக்கத் தேவையில்லை GitHubஇலிருந்துஇணைய ஊக்குகளை( webhooks) கையாளுவதற்கு Prow என்பதை இந்த ஜென்கின்ஸ் Xஆனது வழங்குகின்றது மேலும் ஜென்கின்ஸ் pipelines. இயக்குவதற்கு Knative என்பதை வழங்குகின்றது மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்வதற்கும் jenkins-x.io/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

%d bloggers like this: