கோட்லினிற்கும் ஜாவாவிற்கும் என்ன வேறுபாடு?

தற்போதைய கைபேசி சந்தையில் 74% ஆண்ட்ராய்டு சாதனமாகும். எனவே, நல்ல ஆண்ட்ராய்டு பயன்பாடு மேம்படுத்துநர்களின் தேவையானது தற்போது மேலும் மேலும் அதிகரித்து கொண்டேவருகின்றது. அதனால், ஆண்ட்ராய்டு பன்பாடுகளின் மேம்பாட்டிற்கான இரண்டாவது அதிகாரப்பூர்வ கணினிமொழியாக கோட்லின் என்பது கோளோச்சுகின்றது, இந்த தகவலை கூகுள் நிறுவனமானது கடந்த 7 மே 2019 அன்று அறிவித்தது.
இந்த கோட்லின்ஆனது ஒரு வலுவான நிலையான நிரலாக்க மொழியாகும். இது JetBrains எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது ஜாவா மெய்நிகர் இயந்திரம் சார்ந்த மொழியாகும்.
மேம்படுத்துநர்களின் சமுதாயத்தில், இது ஆண்ட்ராய்டு பயன்பாட்டு மேம்பாட்டைத் துவங்க சிறந்த மொழியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான பல குழப்பங்களுக்கு வழிவகுத்தது.
இருப்பினும், கோட்லினுக்கும் ஜாவாவுக்கும் இடையிலான தேர்வு செயல்முறை இருமமாக இருக்கக்கூடாது.
எனவே, ஆண்ட்ராய்டு மேம்பாட்டுக்கான இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளான கோட்லின் ஜாவா ஆகிய வற்றிற்கு இடையிலான வேறுபாடுகளை இப்போது காண்போம்.
1. கோட்லினுக்கு அதிக சுருக்கமான குறிமுறைவரிகள் உள்ளன
ஜாவாவில் எந்தவொரு பயன்பாட்டிற்கும்மிகநீண்ட குறிமுறைவரிகள் இருப்பதை நாம் அறிவோம், அதாவது ஜாவாவில், குறிப்பிட்ட குறிமுறைவரிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், கோட்லினில், இந்த குறைபாடு அல்லது வரம்பு நீக்கப்பட்டது. இதன் விளைவாக, கோட்லின் குறிமுறைவரி மிகவும் சுருக்கமானது..எனவே ஜாவாவில், ஒரு சில பணிகளை முடிக்க 10 வரிகளில் குறிமுறைவரிகளை பயன்படுத்த வேண்டியிருக்கும், அதையே கோட்லினில் வெறும் 5 வரிகளுக்குள் செய்ய முடியும்.
2. ஜாவாவுக்கு சிறந்த சமூக குழுஆதரவு உள்ளது
1995 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பழைய நிரலாக்க மொழிகளில் ஜாவாவும் ஒன்று என்பது நமக்குத் தெரியும்.எனவே, கடந்த ஆண்டுகளில், அடுத்தடுத்த ஒவ்வொரு பதிப்பிலும் ஜாவா ஏராளமான வகையில் மேம்படுத்தப்பட்டது.இதன் விளைவாக, ஜாவா எனும் கணினி மொழியை கற்பதற்காக இணையத்தில் நேரடி பயிற்சிவகுப்பிற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன, மேலும் நாம் ஏதேனும் சிக்கலில் சிக்கிக் கொண்டால், ஜாவாவிற்கு ஒரு சிறந்த சமூககுழு ஆதரவை நமக்கு கிடைப்பதை காணலாம்.
இருப்பினும், கோட்லின் ஒரு நவீன நிரலாக்க மொழியாகும்.கோட்லினுக்கு அதிக ஆதாரங்களும் சமூக குழுவினர்களின்ஆதரவும் இல்லை.எனவே, ஆரம்பத்தில் நாம் கோட்லினுடனான பயன்பாட்டு மேம்பாட்டின் போது அதிக சிக்கலை சந்திக்க நேரிடும்
3. நிரலாக்க மொழியைக் கற்றுக்கொள்வது எளிது
நாம் முதன்முதல் ஒரு துவக்க நிரலாக்கத்தைதுவங்கிடும்போது, ஜாவா வை கற்றுக்கொள்வது ஒப்பீட்டளவில் மிகவும் எளிதாக இருக்கும். ஜாவாவிற்கு நிறைய சமூககுழுக்களின் ஆதரவும் கற்றல் வளங்களும் உள்ளன.
இருப்பினும், நாம் ஏற்கனவே ஜாவாவை அறிந்திருந்தால், கோட்லினை கற்றல் நமக்கு ஒரு கேக் துண்டாகும்.
கோட்லின் ஜாவாவைப் போலவே இருப்பதால், நாம் ஜாவாவிலிருந்து மிகையான நீண்ட குறிமுறை வரிகளை மட்டும் வெட்டிஅகற்றினால்.போதும் மிகஎளிதாக கோட்லினில் நிபுணராகிவிடமுடியும்.எனவே, நாம் ஏற்கனவே ஜாவாவை அறிந்திருந்தால் கோட்லின் நமக்கு எளிதானது. கோட்லின் ஜாவாவின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருப்பதால், ஜாவாவின் அனைத்து வரம்புகளும் குறைபாடுகளும் கோட்லினில் மேம்படுத்தப் பட்டுள்ளன.
4. பூஜ்ய சுட்டிக்காட்டி விதிவிலக்கு
ஜாவா மேம்படுத்துநருக்கு பூஜ்ய சுட்டிக்காட்டி விதிவிலக்கு என்பது ஒரு முக்கிய பிரச்சினையாகும் எனவே ஜாவாவில், நம்முடைய குறிமுறைவரிகளில் பூஜ்ய சுட்டிக்காட்டி விதிவிலக்கைச் சேர்க்க வேண்டும் இல்லை யெனில் நம்முடைய செயல் திட்டம் முழுவதும்செயலிழந்துவிடும்
இருப்பினும், கோட்லின்ஆனது ஒரு பூஜ்ய பாதுகாப்புடன் வருகிறது. எனவே, நாம் கோட்லினில் எந்தவொரு பூஜ்ய சுட்டிக்காட்டி விதிவிலக்கையும் எதிர்கொள்ள மாட்டோம்.
இந்நிலையில் நாம் தேர்வு செய்ய வேண்டியது: கோட்லினா அல்லது ஜாவாவா என்பதேயாகும்.பின்வரும் ஐந்து ஆலோசனைகளின் அடிப்படையில்இவ்விரண்டில் நாம் விரும்பும்கணினி மொழியை தேர்வு செய்யலாம்:
1. நாம் நிரலாக்கத்தில் ஒரு துவக்கநிலையாளராக இருந்தால் – கணினியில் நம்முடைய முதன்முதலாக நிரலாக்க பயணத்தைத் துவங்கிடவிரும்பினால், நமக்கான சிறந்த மொழி ஜாவா ஆகும் .
ஏனென்றால், ஜாவாவை புரிந்துகொள்வது மிகவும் எளிதானது மேலும் கோட்லினுடன் ஒப்பிடும்போது ஜாவாவின் சமூககுழுவின் ஆதரவு மிகச் சிறந்ததாக அமைந்துள்ளது.
இருப்பினும், நாம் ஏற்கனவே ஜாவாவை அறிந்திருந்தால், கோட்லின் நமக்கு எளிதாக இருக்கும்.
எனவே, நம்மிடம் நிரலாக்கத்தில் அதிக வெளியீடு இல்லை என்றால், ஆண்ட்ராய்டு மேம்பாட்டிற்காக, நாம் ஜாவாவுடன் செல்ல வேண்டும்.
இதற்கு நேர்மாறாக, நாம் ஏற்கனவே ஜாவாவுடன் நன்றாக அனுபவபட்டிருந்தால், கோட்லின் நாம் கற்றுக்கொள்வது மிகவும் எளிதாக இருக்கும், மேலும் நாம் கோட்லினுடனும் ஆண்ட்ராய்டு மேம்பாட்டைத் துவங்கலாம்.
2. நாம் நிறுவன சந்தையை குறிவைக்க விரும்பினால் – ஆண்ட்ராய்டு மேம்பாட்டிற்கான ஜாவாவைக் கற்றுக்கொள்வதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், ஜாவாவுடன், நாம் ஆண்ட்ராய்டு மேம்பாட்டுக்கு மட்டுமல்லாமல் ,நமக்கு பல்வேறு வாய்ப்பகளும் உள்ளன.ஜாவாவுடன், நாம் நிறுவன சந்தையிலும் நுழையலாம், மேலும் இன்னும் பரந்துவிரிந்த பல்வேறு வாய்ப்புகளும் நமக்காக காத்திருக்கின்ரன.
இருப்பினும், கோட்லினுடன், நாம் ஆண்ட்ராய்டு மேம்படுத்தலை மட்டுமே தேர்வு செய்திடமுடியும்.
3. நாம் சுதந்திரமான நிரலாக்க பணியில் சேர விரும்பினால் – , நம்முடைய வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச நேரத்திலும் அதிகபட்ச அளவிலும் அதிகபட்ச வசதிகளை விரும்புவதால் நாம் எந்த மொழியுடனும் செல்லலாம்.எனவே சுதந்திரமான நிரலாக்க பணிக்கு, நாம் எந்தவொரு மொழியுடனும் செல்வது நமக்கு வசதியானதாக இருக்கும்.
4. நாம் பெரிய நிறுவனங்களுக்காக பணிபுரிய விரும்பினால் – நிறுவனங்களின் உலகில்,தற்போது கோட்லினுடன் அனுபவமுள்ள ஆண்ட்ராய்டு மேம்படுத்தநரின் தேவை கடுமையாக அதிகரித்து வருகிறது.
கூகுள் நிறுவனமானது கோட்லினை தங்களுடைய முதல் அதிகாரப்பூர்வ நிரலாக்க மொழியாக அறிவித்ததோடு, பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடையஆண்ட்ராய்டு செயல்திட்டங்களுக்காக ஜாவாவிலிருந்து கோட்லினுக்கு மாறுகின்றன.எனவே, கோட்லின் அனுபவத்துடன் மேம்படுத்துநரின் சம்பளத்தையும் மிக அதிகமாக எதிர்பார்க்கலாம்.
5. நாமேபயன்பாடுகளை உருவாக்க விரும்பினால் – மேம்படுத்துநர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய சொந்த பயன்பாடுகளை உருவாக்க ஆண்ட்ராய்டு மேம்பாட்டைக் கற்றுக்கொள்கிறார்கள்.எனவே, நமக்காக பயன்பாடுகளை உருவாக்க விரும்பினால், நாம் எந்தவொரு தொழில்நுட்பம் அல்லது மொழியுடனும் செல்லலாம்.
நாம் வசதியாக இருக்கும் மொழியின் அடிப்படையில் ஜாவா அல்லது கோட்லின் கற்றுக்கொள்ளலாம். Flutter அல்லது React JS. போன்ற பிற தொழில்நுட்பங்களுடன் நாம் செல்லலாம் .எனவே, சுதந்திரமான பயன்பாடுகளை உருவாக்குவதற்கு , நாம் வசதியாக இருக்கும் எந்த வொரு கணினிமொழி அல்லது தொழில்நுட்பத்திலும் நம்முடைய பயன்பாட்டை உருவாக்கலாம், இது நம்முடைய பயன்பாடுகளின் மேம்பாட்டு செயல்முறையை அதிகரிக்கும்.
முடிவுரை :நம்மில் பெரும்பாலானோர்களுக்கு ஆண்ட்ராய்டு மேம்பாட்டினால் ஜாவா இறந்துவிட்டதோ. என்பது போன்ற குழப்பமும் கேள்விகளும் இன்னும்மனதில் ஒருமூலையில் தொக்கி உள்ளன இருப்பினும், வரவிருக்கும் ஒரு சில ஆண்டுகளில் ஜாவா எந்த இடத்திற்கும் செல்லவில்லை, மேலும் கூகுள் ஜாவாவையும் ஆண்ட்ராய்டு பயன்பாட்டு மேம்பாட்டிற்கான கோட்லினையும் ஆதரிக்கும்..எனவே, மனதில் எழும் மற்ற முக்கிய கேள்வி என்னவென்றால், நாம் எந்த செயலியுடன் செல்ல வேண்டும் என்பதுதான்.நம்முடைய விருப்பங்களைத் திறந்த நிலையில் வைத்திருக்க விரும்பினால், நாம் ஆண்ட்ராய்டை மட்டுமே குறிவைக்கவில்லை என்றால், ஜாவா நமக்கு சிறந்ததாகும்.நம்முடைய வாழ்க்கையை ஆண்ட்ராய்டு மேம்படுத்துநராக மட்டுமே உருவாக்க விரும்பினால், நாம் கோட்லினுடன் மட்டும்செல்லலாம்

%d bloggers like this: