குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாததற்கான எளிய வழிகாட்டி-

எச்சரிக்கை இந்த புதிய வசதியானது தனியுரிமை பயன்பாடு போன்று இந்த சேவையை வழங்கிடும் இணையதளத்தினையே நாம் சார்ந்திருக்கவேண்டிய அவலச்சூழல் உருவாக்கிவிடுகின்றன அதனால் நமக்கேற்ற கட்டற்ற மென்பொருளை பயன்படுத்திடுவதே நல்லது என எச்சரிக்கபபடுகின்றது
தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட தற்போதைய சூழலில், கணினி பயன்பாடுகளின் தொழில் நுட்பங்களுக்கான சிறந்த கருத்துகளை நாம் தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றோம். சிறந்த மேம்படுத்துநர்களின் குழுவுடன் ஒரு நல்ல கருத்தானது இவ்வுலகை மாற்றும் ஒன்றாக வளர முடியும் என்பதை அறிய போதுமான தொழில்நுட்ப தொழில்முனைவோருடன் நாம் பணியாற்றி வருகின்றோம்.
ஆனால் இக்கருத்துகள் அனைத்தும் முடிந்த முடிவல்ல, எல்லாமே. ஒரு கருத்தினை வணிகமாக மாற்ற, நம்முடைய உற்பத்தி அல்லது சேவையின் முதுகெலும்பாக இருக்கும் தொழில்நுட்பத்தை நாம் உருவாக்க வேண்டியுள்ளது. பிரச்சனை என்னவென்றால், அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி மேம்படுத்திடு வதற்கு பொருத்தமானநபர்கள் தேவை. ஒரு தொழில்நுட்பத்துடன் கூடிய தொழில் முனைவோரான நம்முன் 1.மென்பொருளை நாமே உருவாக்கிடுதல் .2.மென்பொருளை உருவாக்கிடுவதற்கான மேம்படுத்துர்களை நியமித்தல் ஆகிய இரண்டு வாய்ப்புகள் உள்ளன
மென்பொருளை நாமே உருவாக்குவதற்கு மென்பொருளை எழுதும் திறனும் அதற்கான நேரமும்நமக்குத் தேவையாகும். பல்லாண்டுகால அனுபவமுள்ள திறமையான மேம்படுத்துநர்களைக் கொண்ட ஒரு பெரிய குழு நம்மிடம் இல்லையென்றால், இதை நாமே செய்துகொள்வது, அதற்காக அதிக செலவி டாமல் நம்முடைய வணிகத்தின் பல வருட வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடும்.
அல்லது… நம்முடைய உற்பத்தி அல்லது சேவையை உருவாக்கிடுவதற்கான மேம்படுத்திடும் குழுவை பணியமர்த்துவதற்கு நாம் அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். அதாவது தகவல் தொழில்நுட்பநிறுவனங்கள்- தனிப்பயனாக்கப் பட்ட மென்பொருளை உருவாக்கிடுவதற்காக அதைத்தான செய்துவருகின்றன.
பெரிய பெரியதொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் இவ்வாறுதான் தங்களுக்குத் தேவையான தனிப்பயனாக்கப்பட்ட மென்பொருளை உருவாக்கிடுவதற்காக தனியாக மேம்படுத்துநர்குழுவினை அமர்த்தி செயல்படுத்திவரு கின்றன. பெரும்பாலும் ஒரு மேம்படுத்துநர்களின்குழுவால் நிரலாக்க பணி தொடங்கப்பட்டு, பின்னர் உலகத் தரம் வாய்ந்த குழுவால் சரிபார்க்கப்பட்டு பயன்பாடானது வெளியிடப்பட்டுவருகின்றது. ஆனால், சாதாரண மனிதர்களாகிய நாம் கணினியின் பயன்பாடுகளின் மேம்படுத்து தலிற்காகவென தனியாக தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாமலேயே முயற்சி செய்து நமக்கான கணினி பயன்பாடுகளை நாமேஉருவாக்கிடுவதற்காக எளிதான வழியைக் கண்டுபிடிக்க விரும்புகின்றோம்…
அவ்வாறான சூழலில்தான் இந்த புதிய குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத வசதியானது நமக்கு கைகொடுக்கவருகிறது.
இந்த குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத புதிய வசதியை ஏன் பயன்படுத்த வேண்டும்?
கணினியின் பயன்பாடுகளுக்கான குறிமுறைவரிகளை எழுதிடும் திறன்கள் இல்லாமல், கணினியின் பயன்பாடுகளை மேம்படுத்திடும் அதிகசெலவிலான குழு எதுவும் இல்லாமல் உயர்தர மென்பொருளை உருவாக்கிட வேண்டும் எனும் கருத்தமைவுதான் தற்போதைய அனைத்து வணிகநிறுவனங்களுக்குமான முதன்மையான கனவாகும் – அவ்வாறான கனவை நடைமுறையில் ஓரளவு செயல்படுத்திடுவதற்கு குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாததளங்கள் உறுதியளிக்கின்றன. குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத இயங்குதளங்கள் கணினி பயன்பாடுகளின் மேம்படுத்துநர்கள் அல்லாதவர்களைகூட தமக்குத்தேவையான கணினியின் பயன்பாட்டிற்கான மென்பொருளை தாமே உருவாக்கி பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கின்றன. “பாரம்பரிய” மென்பொருள் மேம்பாட்டிற்கு, தர்க்கம், இடைமுகம் பயன்பாட்டின் பிற பகுதிகளை உருவாக்க மேம்படுத்துநர்கள் மில்லியன் கணக்கில் குறிமுறைவரிகள் எழுத வேண்டியிருக்கும் போது, குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாததளங்கள் ஒரு GUI எனச்சுருக்கமாக அழைக்கப் பெறும் பயனாளர் வரைகலை இடைமுகத்தினைப் பயன்படுத்திகொள்கின்றன
இந்த குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத தளங்களை கொண்டு கணினியை அணுகுதல் குறைந்தபட்ச கணினி திறன் உள்ள எவரும் தங்கள் கனவு பயன்பாட்டை உருவாக்கி அடுத்த மார்க் ஜுக்கர்பெர்க் ஆக உயரமுடியும்.
குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாததன் பின்னணியில் உள்ள கருத்து இதுதான், ஆனால் நடைமுறைசெயல்பாட்டில் இது எவ்வாறு இருக்கும்?
2009 ஆம் ஆண்டில், “there’s an app for that” எனும் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தினை ஆப்பிள் நிறுவனமானது வெளியிட்டது. நம்முடைய தேவைகள் எதுவாக இருந்தாலும் அதற்காவென ஒரு பயன்பாடு தயாராகஉள்ளது என்பதுதான் இதனுடைய கருத்துஆகும் இது பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பயன்பாடுகளின் முன்னுதாரணமானது எங்கும் நிறைந்ததாக இருப்பது நம் வாழ்வில் மேலும்அதிகமாக கலந்துள்ளது. குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாததும் விதிவிலக்கன்று.
தற்போதைய குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத இயங்குதளங்கள் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன .
#1 குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத பகுப்பாய்வு & கணிப்பு தளங்கள்
நம்முடைய வாடிக்கையாளர்களில் பலர் வணிக முடிவுகளை எடுக்க பெரிய தரவைப் பயன்படுத்துகின்றனர். தற்போது சந்தையில் உள்ள அவ்வாறான குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத இயங்குதளங்கள்: Amplitude , Obviously ,Mixpanel
#2 குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத படிவங்கள், விதிகள் , பணிப்பாய்வு
அளவிட விரும்பும் வணிகங்களுக்கு, தானியங்கியான செயலி அவசியம். குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத இயங்குதளங்கள் அதைச் செய்வதாக உறுதியளிக்கின்றன: K2.com , Quick Base.com , InRule , Decisions , FlexRule , Kissflow ,Pipefy.com
#3 குறைந்த-குறிமுறைவரிகள்-குறிமுறைவரிகள் இல்லாத நிருவாக கருவிகள்
குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத தளங்கள்: Retool.com, Skuid.com ஆகியவற்றின் மூலம் நிர்வாகக் கடமைகளையும் கவனித்துக் கொள்ளமமுடியும்.
#4 குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத கணினியின் பயன்பாடுகளை மேம்படுத்துதல்
குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத தளங்களின் இந்த குழு நாம்முன்பு கேள்விப்பட்ட ஒன்றாக இருக்கலாம். “குறிமுறைவரிகளை எழுதுவது எவ்வாறு என்று தெரியாமலேயே ஒரு கணினியின் பயன்பாட்டை உருவாக்கிடுக” என்று நாம் பலமுறை கேட்டிருப்போம் அந்த தளங்களில் சில பின்வருமாறு: Claris FileMaker , Salesforce Lightning , Outsystems , Appian , Pega , Microsoft Powerapps , Radzen ,Zoho.com
#5 குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத பிரித்தமர்த்தல் தானியங்கி செயல்
இந்த செயல்முறையை நாம் நன்கு அறிந்திருக்கவில்லை எனில், மென் பொருளைப் பயன்படுத்துவது தலைவலியாக இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, சில குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத இயங்குதளங்கள் அதை நமக்காக கவனித்துக் கொள்கின்றன. Netlify, Heroku, Firebase
#6 குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத தரவு, இணைப்பிகள் API தானியிங்கிசெயலிகள்
நாம் பயன்படுத்தும் பல்வேறு கருவிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டுச் செயல்பட்டால் இன்னும் சக்தி வாய்ந்ததாக இருக்குமல்லவா. அதற்கு இந்த தளங்கள் நமக்கு உதவுகின்றன: Zapier , IFTTT , Unito , Airtable , Segment
#7 குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத காட்சி மேம்பாட்டு கருவிகள்
பெரும்பாலான குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத கருவிகளின் மந்திரம் “குறிமுறைவரிகள் இல்லாமல் பயன்பாடுஉருவாகிறது” என்றாலும், இந்த குறிப்பிட்ட தளங்கள் அதை ஒரு படி மேலே கொண்டு சென்று முடிந்தவரை எளிதாக பயன்பாட்டினை மேம்பாடு செய்வதில் அதிக கவனம் செலுத்துகின்றன: Mendix , Parabola , m-Productivity
#8 குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத வலைத்தள மேம்பாடு
நீண்ட காலத்திற்கு முன்பு, குறிமுறைவரிகள் இல்லாமல் வலைத்தளங்களை உருவாக்க விரும்புவோருக்கு Adobe Dream weaver போன்ற வாய்ப்புகள் மட்டுமே இருந்தன. அதிர்ஷ்டவசமாக, சந்தையில் தற்போது கூடுதல் வாய்ப்புகளும் உள்ளன அவைகள் பின்வருமாறு: Webflow ,Squarespace ,Wix
மேலே கூறியவை இப்போது சந்தையில் உள்ள சில குறைந்த-குறிமுறைவரி குறிமுறைவரி இல்லாத இயங்குதளங்கள். ஆனால் இவையனைத்தும் வணிக நிறுவனங்களுக்கும் பொதுவாக ஒரே மாதிரியான நன்மைகளையே வழங்கின்றன.
குறைந்த குறிமுறைவரி குறிமுறைவரி இல்லாத இயங்குதளங்களின் நன்மைகள்
இவை விற்பனை செய்யும் பெரிய கருத்து என்னவென்றால், எவரும் அல்லது எந்தவொரு வணிகநிறுவனமும் குறைந்த குறிமுறைவரி அல்லதுகுறிமுறைவரி இல்லாமல் நிறுவன அளவிலான பயன்பாட்டை நாமேஉருவாக்க முடியும் என்பதாகும்- எனவே “குறைந்த குறிமுறைவரி குறிமுறைவரியில்லாத(Low-Code No-Code)” என்ற சொற்றொடரானது தற்போது நடைமுறை பேசுபொருளாகின்றது.
DW kit, Appian , KiSS FLOW போன்ற நிறுவனங்கள், உலகத் தரம் வாய்ந்த பயன்பாடுகளை உருவாக்க, அவற்றின் இழுத்து சென்று விடுதலின் மூலம் உருவாக்குதல்( drag-and-drop builders) போன்ற கருவிகள் நமக்கு உதவுவதாக பெருமையாகக் கூறுகின்றன. உண்மையில், புதிய மென்பொருளை உருவாக்குவது லிகோ தொகுப்புகளை (Lego blocks )ஏற்பாடு செய்வதை விட கடினமானது அன்று.
இந்த குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத தளங்களில் பலவற்றின் விளம்பரங்கள், ஒரு மென்பொருள் உருவாக்குநரைப் பணியமர்த்த வேண்டிய அவசியமின்றி ஒரு முழுமையான தொழில்நுட்ப வணிகத்தைப் நாமே உருவாக்கி செயற்படுத்திட முடியும் என்பதைக் காண்பிக்கின்றன.
பயன்பாட்டினை உருவாக்கி நிருவகிப்பதற்கு மேம்படுத்துநர்கள் தேவையில்லை, கலந்துகொள்ள கூட்டங்கள் தேவையில்லை அல்லது வெற்றிபெற மைல்கற்கள் தேவையில்லை. ஒரு சில சொடுக்குதல்களில், நமக்கான மென்பொருள் தானாகவே உருவாகிவிடுகின்றன. என்பதே இதனுடைய அடிப்படை பயனாகும்
அதெல்லாம் சரிதான் தற்போது, குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறை வரிகள் இல்லாத தளங்கள் நம்முடைய வணிகத்திற்கு சிறந்த தேர்வாக இருக்கலாம். ஆனால் அவைகளின் சந்தைபடுத்துலிற்கான விவாதத்தினைக் குறைத்துவிட்டு, குறைந்த-குறிமுறைவரி-குறிமுறைவரியில்லாத இயங்கு தளங்களைப் பற்றிய விமர்சன ரீதியாக உண்மையான களநிலவரங்கள் யாவை எனஇப்போது காண்போம்.
குறைந்த-குறிமுறைவரி -குறிமுறைவரியில்லாததின் சிக்கல்
வாழ்க்கையில் பல செயல்களைப் போன்றே, அதிக முயற்சி எதுவும் செய்திடாமல் நமக்கான வாய்ப்பினை நாம்எளிதாக தேர்ந்தெடுப்பது என்பது பொதுவாக சிறந்ததன்று. குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத தளங்களிலும் இதுவே எதார்த்தமான உண்மையான கள நிலவரமாகும். குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத தளங்களை நாம் பயன் படுத்திகொள்வதாக கருத்தில் கொண்டால், நம்முடைய வணிகத்தில் ஏற்படும் சிக்கல்கள் இதிலும் உள்ளன.
வணிகசெயல்நிறுத்தப்பபடுகின்றது பிணையாளியாக்கப்படுகின்றது
குறைந்த-குறிமுறைவரி -குறிமுறைவரிஇல்லாத இயங்குதளத்தைப் பயன்படுத்தும் போது, நம்முடைய மென்பொருளும் அதனைச்சார்ந்து நம்முடைய முழு வணிகமும் மற்றொரு நிறுவனத்தை நம்பியுள்ளது. அதாவது அந்த நிறுவனம் நினைத்தால் நாம் செயல்படமுடியும் இல்லையெனில் செயல்படமுடியாது இது ஏறத்தாழ தனியுரிமை பயன்பாடு போன்றது தற்போதைய கட்டற்ற பயன்பாடு என்ற கருத்தமைவிற்கு எதிரானதானது அல்லவா அதாவது:
குறிப்பிட்ட சூழலில் நம்முடைய நிறுவன வணிக நடவடிக்கையிலிருந்து வெளியேறவேண்டிய சூழல்உருவாகிறது அல்லது இந்த தளங்களை பயன்படுத்தி கொள்வதற்காக அவர்களின் மாற்றியமைத்திடுகின்ற விலையை நாம் செலுத்தவேண்டிய கட்டாயசூழல் ஏற்படுகின்றது.அல்லது குறிப்பிட்ட சேவையை பெறுவதிலிருந்து தற்காலிகமாக நாம் வெளியேறும் சூழல்உருவாகின்றது, அல்லது .வேறு எந்த வொருபெரிய மாற்றத்தையும் நம்முடைய நிறுவனத்திற்குள் கொண்டுவந்து சேர்த்திடுகின்றது
அதாவது நம்முடைய முழு வணிகமும் ஒரே இரவில் மறைந்துவிடும். சூழல்கூட உருவாகக்கூடும்
அதாவது நம்முடைய நிறுவனத்தின் பணப்புழக்கம் பூஜ்ஜியமாக குறைகிறது.
, எண்ணற்ற இரவுகள் வலைபின்னல் பயன்பாட்டை சந்தைப்படுத்துதலிற்காக நாம் செய்த கடின உழைப்பு வீணாக போகின்றது வணிகத்தின் வருமானம் இல்லாததால் நம்முடைய குடும்பமும் நடுத்தெருவில் அனாதையாக நிற்க வேண்டிய அவலநிலைஏற்படுகின்றது .
என்னை நம்பவில்லையா?
தங்களுடைய மென்பொருளை உருவாக்க குறைந்த குறிமுறைவரி-குறிமுறைவரி இல்லாத தளங்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்ப வணிகநிறுவனங்கள், ஒரு நாள் விழித்தெழுந்து, தங்களுடைய மின்னஞ்சலின் உள்வருகை பெட்டியில் கூகுளின் பின்வரும் செய்தியைப் பார்க்கும் வரை, எல்லாவற்றையும் சரியாகச் செய்வதாக நினைத்தனர்:
கூகுளின் பயன்பாடு உருவாக்குபவரை நம்பியிருந்த நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை முழுமையாக மாற்றுவதற்கு இரண்டு வருடங்கள் உள்ளன என்பதை அறிந்ததும், சாதாரண நாளாக இருக்க வேண்டிய நாள் முழுக் கனவாக மாறிவிடுகின்றது.
இவைகளை பயன்படுத்தி கொள்வதற்குமுன் ஒரு நொடியாவதுசிந்திக்க வேண்டும் …
வணிகத்தை மேம்படுத்துவதற்கும், அதை சந்தைப்படுத்துவதற்கும் பல வருடங்களைச் செலவிட்ட பின்னர் இறுதியாக நாம் வெற்றிபெறத் துவங்கும் போது… நம்முடைய வணிகத்தை சதுரங்க விளையாட்டின் துவக்க நிலையிலிருந்து மீண்டும் துவங்கும்படி கட்டாயப்படுத்துவதன் மூலம் நாம் அமர்ந்திருக்கும் தரைவிரிப்பினை காலடியில் இருந்து வெளியே இழுத்துக் கொள்கின்றன. இது கற்பனையன்று – இதுவே குறைந்தகுறிமுறைவரி குறிமுறைஇல்லாததன் மூலம் நடக்கவிருக்கும் உண்மையான நடைமுறை செயல்முறையாகும்.
வணிக உரிமையாளர்கள் தினசரி அடிப்படையில் கவலைப்பட போதுமானது. அவர்களின் கைகளில் ஏதோ ஒன்று இருப்பதால், அவர்களின் முழு வணிகமும் ஒரே இரவில் மூடப்படுவதுகுறித்து வணிக உரிமையாளர்கள் கவலைப்பட வேண்டிய ஒன்று அல்ளவா. நம்முடைய வணிகம் குறைந்த குறிமுறைவரி குறிமுறைவரிஇல்லாததளங்களின் மூலம் மனதிற்கு எளிமையாக இருப்பது என்பது தனிப்பயனாக்கப்பட்ட தீர்வைக் கொண்டிருப்பது மட்டுமேயாகும் ஆனால் அதற்கான விலை நாம் அதிக கொடுக்கவேண்டியிருக்கும்.
குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாததலங்களுக்கான கட்டணத்தினை நாம் மறைமுகமாக செலுத்துகின்றோம் என்பதே உண்மையான களநிலவரமாகும்
குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத இயங்குதளங்களும் வணிக நிறுவனங்களாகும். நம்முடைய வணிகத்தின் இலாபத்தில் அவர்கள் தங்கள் பங்கைப் பெற வேண்டும் என்பதே இதன் அடிப்படை கருத்தமைவாகும். நாம் வருடாந்திர உரிமங்களை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும் அல்லது நம்முடைய வணிகத்தின் வருவாயில் ஒரு பங்கை நாம் பயன்படுத்தும் குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத இயங்குதளத்திற்குச் செலுத்த வேண்டியிருக்கலாம்.
, குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத இயங்குதளங்களின் கட்டணங்கள் துவக்கத்தில் மலிவாக இருக்கலாம், ஆனால் அவற்றினை பயன்படுத்தி கொள்வதற்கான கட்டணம் விரைவாக உயர்த்தி கொண்டே யிருப்பார்கள், ஒருவேளைநம்முடைய வணிகத்திற்கான மிகப்பெரிய செலவுகளில் ஒன்றாககூட அக்கட்டணங்கள் இருக்குமாறு அமைந்துவிடும்
இதை பயன்படுத்தி கொள்வதால் நாம் விரும்பியதைச் செய்ய முடியாது
ஆயினும் தற்போது ஏராளமான அளவில் குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத இயங்குதளங்கள் உள்ளன. ஏன்?
குறைந்த-குறிமுறைவரி குறிமுறைவரியில்லாத இயங்குதளங்கள் ஒரு பயன்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஒரு குறிப்பிட்ட கருத்தினைக் கொண்டிருப்பதே இதற்குக் காரணமாகும். அதாவது நம்முடைய மென்பொருளானது அந்த குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத இயங்குதளம் விரும்புவது போன்றுதான் அமைந்திருக்கும் நமக்கு அது சரியாகஇல்லையெனில், நம்மால் நமக்கான மென்பொருள் நாம் விரும்பியவாறு கண்டிப்பாக மாற்றிஉருவாக்க முடியாது.
மீண்டும் நாம் சதுரங்க விளையட்டில் துவக்கநிலைக்கு செல்லவேண்டயிருக்கும்.
குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத தளத்தில் நம்முடைய பயன்பாட்டில் குறிப்பிட்ட வசதிவாய்ப்புகளைச் சேர்ப்பதற்காக, அந்த குறிப்பிட்ட தளத்தை பற்றி நன்கு அறிந்த ஒரு நிபுணரை நாம் பணியமர்த்த வேண்டியிருக்கும். நாம் ஒரு “வழக்கமான” பயன்பாட்டை உருவாக்கும்போது, அப்பயன்பாட்டை விரிவுபடுத்தவும் மேம்படுத்திடவும் உதவுகின்ற மேம்படுத்துநர்கள் உலகம் முழுவதும் பரவிஉள்ளனர். இந்த மேம்படுத்துநர்கள் பலஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட நிரலாக்க மொழியைக் கற்றுக்கொண்டு அதன் கட்டமைப்பை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி பயன்பாட்டினை மேம்படுத்திவருகின்றனர், மேலும் தங்களுக்குப் பிடித்த கருவிகளைக் கொண்டு மென்பொருளை உருவாக்குவதற்கான சிறந்த வழியைக் கண்டறிந்திடுகின்றனர்.
ஆனால் குறைந்த-குறிமுறைவரி -குறிமுறைவரியில்லாத இயங்குதளத்தில் குறிப்பிட்ட ஒரு செயலி மட்டுமே பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது இவை சிறிது காலத்திற்கு மட்டுமே செயல்பாட்டில்உள்ளன. சிறந்த நடைமுறைகளை உருவாக்க அல்லது பொதுமக்கள் நிபுணர்களாக மாறுவதற்கு போதுமான கால அவகாசம் கூட கிடைப்பதில்லை. குறிப்பிட்ட குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத தளத்தில் அந்த வசதியை உருவாக்கிய அனுபவமுள்ள நபர்களைத் தேடிபிடித்துதேர்ந்தெடுக்க வேண்டும்.நம்முடைய பிரச்சனையில் தீர்வுசெய்வதற்கு உதவக்கூடிய ஒரு சில மேம்படுத்துநர்கள் மட்டுமே இருந்தால், அந்த மேம்படுத்துநர்களை பணியமர்த்துவது மலிவானதாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அதனால் குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத இயங்குதளங்களைப் பயன்படுத்த வேண்டாம் என பரிந்துரைக்கப் படுகின்றது, ஏனெனில் அவை நம்முடைய வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவையோ அல்லது தேவைஎதுவோ இவைகள் வழங்கா. அதனால் வணிக எண்ணம் கொண்ட நாம் அதற்காகநிபுணத்துவம் வாய்ந்த மென்பொருள் பொறியாளர்களின் குழுவை பணியமர்த்துவதன் வாயிலாக ஏற்படுகின்ற மென்பொருள் மேம்பாட்டு செலவுகளை ஒரு உண்மையான பிரச்சினையாக கருதாமல் அவர்களை பயன்படுத்திகொள்வது நல்லது. குறைந்த-குறிமுறைவரி-குறிமுறைவரிஇல்லாத இயங்குதளங்களின் உதவியை முதன்மையான வணிக செயல்களுக்குப் பயன்படுத்திகொள்ளமல், . வார இறுதியில் பொழுதுபோக்கிற்காக எளிய பயன்பாட்டை உருவாக்க விரும்பினால், அதற்காக வேண்டுமானால் நிபுணத்துவம் வாய்ந்த மென்பொருள் பொறியாளர்களின் குழுவை பணியமர்த்துவது சற்று அதிக செலவுபிடித்தசெயலாக இருக்கலாம். அவ்வாறான சூழலில் மட்டும், குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத தீர்வு நமக்கு பொருத்தமான தேர்வாக இருக்கலாம். ஆனால் வணிகநடவடிக்கை களைதை தீவிரமாக எடுத்துக் கொள்ள விரும்பினால், நம்முடைய வணிகத்தை குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத தளங்களில் உருவாக்கக் வேண்டாம்.என மீ்ண்டுபரிந்துரைக்கப் படுகின்றது பல தொழில்நுட்ப தொழில்முனை வோர்கள், பணத்தைச் சேமிக்கும் முயற்சியில், குறைந்த-குறிமுறைவரி குறிமுறைவரிஇல்லாத தீர்வைப் பயன்படுத்தியதால், தங்களுடைட நிறுவனத்தின் முழு வருமானத்தையும் வீணடித்துவிட்டதாகவும், அதை மீண்டும்சம்பாதிக்க முடியவில்லை என்றும் கேள்விப்படும் சூழல்உருவாககூடும்.
குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாததளங்களுக்கு மாற்று என்ன? ஒரு வீட்டைக் கட்டுவது போன்று, மென்பொருளை உருவாக்குவதற்கு நல்ல வலுவான அடித்தளம் தேவை. குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத இயங்குதளங்களைப் பயன்படுத்துவது மணலில் அடுக்கமாடி வீட்டைக் கட்டுவது போன்றது – இது நம்முடைய வணிகத்தின் முழுமையான தோல்விக்கு வழிவகுக்கக்கூடும். சில ஆயிரும் ரூபாய்களை சேமிப்பதற்கு ஈடாக நம்முடைய நிறுவனத்திற்கான முதன்மை திறவுகோளை வேறொருமூன்றாவதுநபரிடம் கொடுப்பது சரியா.
குறைந்த குறிமுறைவரிகள் குறிமுறைவரிகள் இல்லாத தீர்வு இல்லை என்றால், பிறகு வேறுமாற்று என்ன? வணிகநிறுவனம் தான்இயக்கும் மென்பொருள் குறித்து தீவிரமாக இருந்தால், உலகெங்கிலும் உள்ள சிறந்த பல்லாண்டு பணிபுரிந்து அனுபவமிக்க நிபுணர்களின் குழுவினை பயன்படுத்தி கொள்வதே நல்லது . அனைத்து வாடிக்கையாளர்களுக்காக மென்பொருளை அவர்களின் துனையுடன் உருவாக்கி- வணிகத்தை மேம்டுத்தி கொள்க என பரிந்துரைக்கபடுகின்றது

%d bloggers like this: