அடுத்த தலைமுறைவலைபின்னல் மேலாண்மை அமைப்பு(NG-NetMS)

பிணைய மேலாண்மை மென்பொருளிற்காக பல்லாயிரக்கணக்கான டாலர் ஏன் செலுத்த வேண்டும்?
அதற்கு பதிலாக இப்போது NG-NetMS எனும் சுருக்கமான பெயரால் அழைக்கப்பெறும் அடுத்த தலைமுறை வலைபின்னல் மேலாண்மை அமைப்பின் (Next Gen Network Management System ) மூலம் நம்முடைய வலைபின்னல்களின், சிக்கலான செயல்முறைகளில் தெளிவாக கட்டணமில்லாமல் பயன் பெறுக!
இது நம்முடைய லினக்ஸ் சேவையகங்கள், சிஸ்கோ, ஜூனிபர், ஹெச்பி , மேம்பட்ட வழிசெலுத்திகள், நிலைமாற்றிகள் , ஃபயர்வால்கள் ஆகியவற்றிற்கான இரண்டு முனைகளுக்கு இடையேயான புதிய பிணைய மேலாண்மை தளமாக விளங்குகின்றது.

இது மிகவும் துல்லியமானது, விரைவானது திறமையாக செயல்படக்கூடியது. இது வலைபின்னல்களின் சரக்கிருப்பு, இடவியல், ஐபிவி 4 முகவரிகளின் வரைபடம் பற்றிய தகவலை விரைவாகவும் குறைந்தபட்ச இழப்புடனும் சேகரிக்கிறது.

மிக முக்கியமாக நாம் இதன்மூலம்Syslog நிகழ்வுகள், SNMP அலாரங்கள் ஆகிய செயல்களை நிகழ்வு நேரத்திலும் வரலாற்று காப்பகங்களிலிருந்தும் புதிய வழியில் சேகரிக்கவும், செயலாக்கம்செய்திடவும் பகுப்பாய்வு செய்திடவும் முடியும்.

பல ஆண்டுகளாக உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு வலைபின்னல் மதிப்பீட்டு சேவைகளை வழங்க இதனை வெற்றிகரமாகப் பயன்படுத்திகொள்ளப்பட்டுவருகின்றது. இப்போது தனித்துவ மானதும் முழுமையாக செயல்படுவதுமான இந்த கருவியை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. செயல்திறன் அல்லது முனைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இது மறைக்கப்படவில்லை. இது செயல்படுவதற்கான ஒரே வரம்பு நாம் பயன்படுத்தும் வன்பொருள் மட்டுமே.

இதனுடைய வசதி வாய்ப்புகள்
புதியதாக வலைபின்னல்(பிணையம்) ஏதேனும் உள்ளதாவென இதன்வாயிலாக எளிதாக கண்டுபிடித்திடலாம்
வலைபின்னல்களின் நடக்கும் நிகழ்வுகளை எளிதாக கண்காணித்திடலாம்
சரக்கிருப்பு, உள்ளமைவு சேகரிப்பு , காப்பகம் ஆகியவற்றை கட்டுபடுத்திடலாம்
வலைபின்னல் (பிணையம்) வரைபடத்தினை எளிதாக கையாளலாம்
ஐபி முகவரி வரைபடத்தினையும்எளிதாக கையாளலாம்
இது அப்பாச்சி V2.0 ,GPLv3, LGPLv3 ஆகிய உரிமங்களின் படி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளவும்https://www.opt-net.eu/ அல்லது sourceforge.net/projects/ngnms/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

%d bloggers like this: