ZeroNet எனும் கட்டற்ற வலைபின்னல் பயன்பாடு ஒரு அறிமுகம்

ZeroNet எனும் பயன்பாடானது பரவலாக்கப்பட்ட தணிக்கைதடுப்பு வலைபின்னலை கட்டமைப்பதற்காக பிட்காயினின் மறைகுறியாக்கத்தையும் பிட்டோரன்ட்டின் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி கொள்கின்றது. பயனாளர்கள் நிலையான அல்லது மாறக்கூடிய வலைதளபக்கங்களை இந்த ZeroNet இல் வெளியிடமுடியம் மேலும் பயனாளர்கள் இவைகளை தெரிவுசெய்து கொள்ளவும் இந்த வலைதள பக்கங்களே தமக்குள் சேவைசெய்து கொள்ளுமாறும செய்யமுடியும். வலை தளங்களின் இணைப்பானது ஏதாவாதொரு பயனாளர் இணைப்பில் இருக்கும்வரை தொடர்ந்து இதன் இணைப்பு இருந்து கொண்டேஇருக்கும் .இந்த வலைபின்னலில் ஏதாவது ஒரு வலைதளபக்கம் அதனுடைய சொந்தக்காரரால் மேம்படுத்தப்படும்போது அந்த வலைதள பக்கத்தினை வழங்கும்முனைமங்கள ( முந்தைய பார்வையாளர்களின்) அனைத்தும் வலைதள உள்ளடக்கத்திற்கான மேம்படுத்தப்பட்ட புதுப்பித்தல்கள மட்டும் பெறம். இந்த ZeroNet ஆனது SQL தரவுதளத்துடன் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டு கிடைக்கின்றது அதனால் வலைதளபக்கத்தில் வலுவான உள்ளடக்கங்களை உருவாக்கவதை எளிதாக்குகின்றது இத குவியலாமுனைமங்களுக்கு கூடுதலான மேம்படுத்துதல்களின வழியாக ஒத்திசைவாக செயல்படுகின்றது இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற தணிக்கைசெய்யப்படாத தகவல் தொடர்பாகும் .ஏதோவொரு வகையில் ஏதாவதொரு தகவல்களை இதன் வாயிலாக வெளியிட்டால்போதும்அதன்பின்னர்அதனை எந்தவொரு வழியிலும் நீக்கம் செய்யவே முடியாது . அதைவிட நாம் இதனை அனுகிடும்போது ஏதாவது ஒருமுனைமம்மட்டும் செயலில் இருந்தால் போதும் இந்த வலைபின்னலின் இயக்கம் பாதிக்காமல் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளமுடியும் அதாவது மையசேவையாளர் பாதிப்பினால் வலைபின்னலின் இயக்கமே பாதிப்படையும் என்ற பிரச்சினை இதில் இல்லை

து எல்லா இடங்களிலும் இருப்பதால் எங்கும் இல்லை என்ற பிரச்சினை இதில் எழவேஎழாது எந்தவொரு பயனாளருக்கும் அவர்விரும்பும்வரை இதன் உள்ளடக்கங்களின் சேவை தொடர்ந்து கிடைத்து கொண்டேயிருக்கும் .

இதன் உள்ளடக்கங்களை வழங்குவதற்காக இதில்பிட்டோரன்ட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்டுவதால் மையபடுத்தப்பட்ட சேவையகங்கவிட இதுமிகவிரைவாக செயல்படுகின்றது மிகமுக்கியமாக நமக்கு இணையஇணைப்பு கிடைக்கவில்லையென்றாலும் நாம் இதன்மூலம் இணையதளபக்கத்தை அனுகமுடியும்

இதில் கடவுச்சொற்கள் எதுவும் கிடையாது ஆயினும் நாம் இதனஐபயன்படுத்த தேவையான அங்கீகாரமனது இருமபண(Bitcoin) பணப்பை போன்று BIP32 அடிப்படையிலான அதே பாதுகாப்பான மறைகுறியாக்க தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுவாதல் உள்ளடக்க உடமையாளரின் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானவையாக இதில் இருக்கின்றன வலைதளபக்கமானது இயக்கநேரத்திலேயே மேம்படுத்தபடுவதால் அவ்வப்போது புத்தாக்கம் செய்யத் தேவையில்லை இரும களங்களை(bit domains) இதுஆதரிக்கின்றது இது SQL தரவுதளத்தினை ஆதரிப்பதால் எளிதாக இணையபக்கத்தை மேம்படுத்த அனுமதிப்பதுடன் மிகவிரைவாக வலைதளபக்கத்தை திரைக்காட்சியாக கொண்டுவருகின்றது இது ipv4எனும்முகவரிக்கு பதிலாக வெங்காயம் போன்ற பல்லடுக்குகளாலான மறைக்கப்பட்ட சேவைகளின் முழுமையான Tor வலைபின்னலை ஆதரிக்கின்றது மேலும் இது மறைகுறியாக்கம் செய்யப்பட்ட TLSஇணைப்புகளை கொண்டது.இதில் தானியங்கியான uPnP வாயிலை திறக்கமுடியும் .இது பலபயனாளர்கள(எந்தவொருபதிலாள)யும் அதரிப்பதற்கான கூடுதல் இணைப்பினை கொண்டது எந்தவொருஇயக்கமுறைமையிலும் செயல்படுகின்ற எந்தவொரு இணைய உலாவியின் வாயிலாகவும் இதனை பயன்படுத்தி கொள்ளமுடியம் நம்முடைய இணைய இணைப்பு குறைந்து இல்லாது போனாலும் பரவாயில்லை நாம் விதைத்த இணைய பக்கத்தை கொண்டு நம்முடைய இணைய பக்கத்தில் எளிதாக உலாவரலாம். விண்டோ ,லினக்ஸ் ,மேக் ஆகிய எந்தவொரு இயக்கமுறைகளில் செயல்படுகின்ற சமீபத்தி எந்தவொரு இணையஉலாவியிலும் இது செயல்படும்திறன்கொண்டது இது இயக்கநேர உள்ளடக்கங்களை கொண்டுள்ளதால நேரடியாக மேம்படுத்திகொள்ளவும் பலபயனாளர்களின் வலைதபக்கங்களாக இதனை பயன்படுத்தி கொள்ளவும்முடியும் நம்முடைய இணைப்பு வேகம் விரைவாக இருப்பதால் வலைதளபக்கத்தின் பதிலிறுக்கும் நேரஅளவு இதில் மட்டுப்படுத்தப்படவில்லை இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென தனியாக கட்டமைவு எதுவும்செய்யாமல் நேரடியாக இந்த கட்டற்ற பயன்பாட்டின் கட்டுகளை பதிவிறக்கம் செய்தபின்னர் அதன் கட்டுகளை பிரித்து வெளியிலெடுத்து நிறுவுகைசெய்தவுடன் இதனை பயன்படுத்த துவங்கிடலாம் இதனை செயல்படுத்துவதற்காகவென தனியாக மையபடுத்தப்பட்ட சேவையகம் எதுவும் இல்லாமல் மற்ற பார்வையாளர்களுக்கு நம்முடைய உள்ளடக்கங்கள் நேரடியாக விநியோகிக்கப்படுகின்றது இதில் வலைதளபக்கங்கள் பார்வையாளர்களாலேயே பகிர்ந்தளிக்கப்படுகின்றது அதனால் இதனை செயல்படுத்துவதற்கென தனியாக செலவிடத்தேவையில்லை குறிப்பிட்டதொரு முனைமம் செயல்படாததால் இயக்கமே நின்றுவிட்டது என்றில்லாமல் எப்போதும் இதன் வாயிலாக வலைதளபக்கத்தினை அனுகமுடியும் இதுஒரு பலபயனாளர் இணையபக்கங்களாக இருப்பதால் எந்தவொரு புதிய பயனாளரும் இந்த இணையபக்கங்களில் இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென தனியாக பதிவுசெய்யாமலேயே உடனடியாக இதனைபயன்படுத்தி கொள்ள இதுஅனுமதிக்கின்றது

இந்த ZeroNet எனும் பயன்பாட்டினை நிறுவுகைசெய்து செயல்படுத்தி திரையில் தோன்றச்செய்து http://127.0.0.1:43110/1HeLLo4uzjaLetFx6NH3PMwFP3qbRbTf3D). எனும் இதனுடைய இணையமுகவரியில் அனுகுக அதனைதொடர்ந்து இது பிட்டோரன்ட் வலைபின்னலை பயன்படுத்தி பயனாளர் யாராவதொருவர் இந்த இணையபக்கத்தின் விதைத்துள்ளாரா என தேடிப்பிடிக்கின்றது அவ்வாறு கிடைத்தவுடன் அந்த பயனாளரிடமிருந்து HTML, CSS, JS. போன்ற உள்ளடக்கங்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றது பிறகு ஒவ்வரு பக்கத்தின் பார்வையாளருக்கும் பிறிதொரு வாடிக்கையாளரால் போதுமான சேவைவழங்கப்படுகின்றது தேவையில்லையெனில் தேவையற்ற பக்கங்களை நீக்கம் செய்திடவும் முடக்கவும் செய்திடவும்முடியம் ஒவ்வொரு வலைதளபக்கமும அனைத்து பட்டியலான கோப்புகளை உள்ளக்கமாக கொண்டதாகும் ஒவ்வொரு உள்ளீடும் ஒரு SHA512 hash ஐ கொண்டதாகும் மேலும் வலைதளபக்க உரிமையாளரின் தனித்திறவுகோளை பயன்படுத்திஇதில் கையொப்பம் ஒன்று உருவாக்கப்படுகின்றது ஏதாவது வலைதளபக்க உடமையாளர் தன்னுடைய இணையதள பக்கத்தினை திருத்தம் செய்தால் உடன் அனைத்து பயனாளர்களுக்கும் அவருடைய கையொப்பத்துடன் கூடிய புதிய பட்டியல வெளியிடப்படுகின்றது அதன்பிறகு பயனாளர் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு கோப்புகளின் பட்டியலானது அவரின் கையொப்பத்தினை பயன்படுத்தி ஒருங்கிணைக்கப்படுகின்றது மாறுதல்கள் செய்யப்பட்ட கோப்புகளை பதிவிறக்கம் செய்த புதிய உள்ளடக்கங்களுடன் பயனாளர்களுக்கு வெளியிடப்படுகின்றது

%d bloggers like this: