You Tube என்பதற்கு மாற்றான YouPHPTubeஎனும்கட்டற்ற பயன்பாடு ஒரு அறிமுகம்

YouPHPTube என்பது காட்சி படங்களை எளிதாக பகிர்ந்து கொள்ளஉதவிடும்PHP எனும் கணினிமொழியால் உருவாக்கப்பட்டதொரு கட்டற்றகட்டணமற்ற கானொளி இணையபயன்பாடாகும் இதில் Youtube, Vimeoஎன்பன போன்ற இணையபக்கங்களை போன்று நேரடியாக கானொளி படங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் நம்முடைய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் உதவுவதற்காக நமக்காகவென தனியானதொரு இணைய பக்கங்களை உருவாக்கி கொள்ளமுடியும் இதில் நமக்கென தனியாக கணக்கெதுவும் உருவாக்கிடாமல் Facebook அல்லது Google போன்றவற்றின் கணக்குகளை யே உள்நுழைவு செய்வதற்காக பயன்படுத்தி கொள்ளமுடியும் இதனை நம்முடைய கைபேசி சாதனங்களின் வாயிலாக கூட எளிதாக அனுகி கானொளி படங்களை காட்சியாக கானவும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் பகிர்ந்துகொள்ளவும் முடியும்கானொளி படகோப்பின் வடிவமைப்பினை MP3 , MP4, WebM என்பன போன்ற பல்வேறு வடிவமைப்புகளில் மாற்றிகொள்ளமுடியும் இது கானொளி படங்களை எளிதாக துவக்கி சேவைகளை விரைவாக வழங்கிடும், கையாளும் , சேமி்த்திடும் வசதிகொண்டதொரு சிறந்த இணையபயன்பாடாகும் இதில் கூடுதலான வசதிவாய்ப்புகள் தேவையெனில் கூடுதல் இணைப்பு செய்து கொள்ளமுடியும் கானொளி படங்களின் திறன், செயல்பாடு போன்றவைகளைஅறிந்து கொள்வதற்காக இதிலுள்ள புள்ளியில் விவரஅறிக்கைகளை (YouPHPTube Statistics)கொண்டு அறிந்து அதற்கேற்ப மேம்படுத்தி கொள்ளலாம் இதில் கானொளி படங்களை நாம் விரும்பும் மொழிகளில் மொழிமாற்றம் செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இதில் நாம் விரும்பினால் Google AdSense ஐ அனுமதித்து பொருளீட்டிடமுடியும் நம்முடைய கானொளி படங்களை கணினி ,மடிக்கணினி,திறன்பேசி ஆகியவற்றிற்கு தக்கவாறு கானொளி படங்கள் சரியாக இயங்குவதற்காக தானாகவே பொருத்தமான வகையில் உருமாற்றம் செய்து செயல்படுமாறான கட்டமைப்பை கொண்டுள்ளது இதன்முன்புற செயல்களுக்காக Bootstrap , Flag Icons ,Fonts Awesome , Bootpag , Bootgrid , Bootstrap Select Picker ,Jquery ,SweetAlert ,VideoJs ,Mini-upload-formஆகியவைகளும் பின்புல செயல்களுக்காக Linux ,Apache ,NGINX ,RTMP ,HSL HTML5 Live Streaming ,PHP , PHP Mailer , HybridAuth , Mysql ,FFMPEG ,Youtube-dlஆகியவைகளும் செயல்படுகின்றன மேலும் விவரங்களுக்கும் முன்காட்சியாக கண்டிடவும் demo.youphptube.com எனும் இணையமுகவரிக்கும் பயன்படுத்தி கொள்ள youphptube.com/ எனும் இணையமுகவரிக்கும் செல்க

%d bloggers like this: