தமிழில் பைதான் நிரல் மொழி – செய்முறைப் பயிற்சி – மார்ச்சு 24 2019 – தாம்பரம், சென்னை

பைதான் நிரல் மொழி, கற்க எளிதானது. எல்லாத் துறைகளுக்குமான நிரல்கள் எழுதும் திறன்கள் கொண்டது.

கணியம் அறக்கட்டளையின் மூலமாக பல்வேறு தொடர் பயிற்சி வகுப்புகளை நிகழ்த்த உள்ளோம்.
முதல் பயிற்சியாக பைதான் மொழி.

இப்பயிற்சிக்கு பைதான் மொழி கற்கும் ஆர்வமுள்ள அனைவரையும் அழைக்கிறோம்.

நாள் – மார்ச்சு 24, 2019 ஞாயிறு
நேரம் – காலை 9.00 முதல் 4.00 வரை

இடம் – தரைதளம் 4, சுபிக்‌ஷா அடுக்ககம், 42, வியாசர் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை 600059 (த.சீனிவாசன், து.நித்யா வீடு)

வரைபடம் – goo.gl/maps/zpjo9F83HDF2

மதிய உணவு, தேநீர் வழங்கப்படும்.

கட்டணம் – நீங்கள் விரும்பும் நன்கொடை.
உங்கள் நன்கொடைகள் கணியம் அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்கு உதவும்.

பயிற்சியாளர் – து. நித்யா

நிகழ்ச்சி நிரல்

9.00 – 9.30 – கட்டற்ற மென்பொருள் – அறிமுகம்
9.30 – 10.00 – பைதான் அறிமுகம்
10.00 – 1.00 – பைதான் செய்முறைப் பயிற்சி
1.00 – 2.00 – மதிய உணவு
2.00 – 4.00 – பைதான் செய்முறைப் பயிற்சி

நீங்களே உங்கள் மடிக்கணினி கொண்டுவருதல் அவசியம்.

பாடத்திட்டம்
pymbook.readthedocs.io/en/latest/

தமிழில் பைதான் – காணொளி

இரு காணொளிளையும் பார்த்துவிட்டு வருக.

உதாரண நிரல்கள்
github.com/nithyadurai87/python-tutorials

பயிற்சியில் பங்கு கொள்ள விரும்புவோர் பின்வரும் படிவத்தை நிரப்புக.

goo.gl/forms/hJ2CxNbdpe2yMsxC2

 

குறிப்பு – 20 பேர் வரை மட்டுமே அனுமதி. முதலில் வரும் பதிவுகளுக்கு மட்டுமே முன்னுரிமை.

மின்னஞ்சலில் உங்கள் இருக்கை உறுதி செய்யப்படும்.

 

தொடர்புக்கு – த.சீனிவாசன் – 9841795468

 

 

 

%d bloggers like this: