Open Source – அப்டினா என்ன?

Open Source-னு கேள்விபட்டிருக்கேன், நிறைய பேரு இத பத்தி சொல்றாங்க, ஆனா அப்டினா என்ன? அத நான் ஏன் தெரிஞ்சுக்கணும்?

1. இப்போ நாம ஒரு Software-ஐ internet-லேந்து Download செய்து use பண்றோம். நாம Download செய்யுறது ஒரு Binary file அதாவது அந்த Software பயன்பாட்டுக்கு ரெடியான ஒரு format-னு சொல்லுவாங்க (உதாரணத்துக்கு வின்டோஸ் operating System-ல் இயங்கக் கூடிய exe files, Debian / Mint /Ubuntu Operating System-ல் இயங்கக் கூடிய deb files, Redhat / Fedora / CentOS Operating system-ல் இயங்கக் கூடிய rpm files ).

2. இந்த exe file எப்புடி பிறந்துச்சுனு பாத்தீங்கனா… C / C++ / Java / Python / Ruby / Haskell / இப்படி பல programming languages இருக்கு. இந்த மாதிரி இருக்குற ஏதோ ஒரு Programming language-ல தான் இந்த Software-க்கான Code எழுதிருக்காங்க. இப்படி எழுதின code-ஐ, Compile பண்ணா நமக்கு Binary File (அதாவது பயன்பாட்டுக்கு தயாரான Format-ல File கிடைக்கும்). Programming language-ல எழுதின code-a ” Source Code ” அல்லது ” Source “-னு சொல்லுவாங்க.

3. இப்போ உங்களுக்கு Light-a புரிஞ்சுருக்கும்-னு நினைக்கிறேன். Open Source அப்டினா, ஒரு Software-ஐ உருவாக்குபவர், அதோட Binary Format உடன் சேர்த்து அதனை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட code-ஐயும் அதை பயன்படுத்தும் நம்மிடம் நமக்கு தேவைப்பட்டால் கொடுக்க வேண்டும்.

4. அப்படி கொடுக்கப்பட்ட Code-ஐ நாம படிச்சு புரிஞ்சுக்க, நமக்கு ஏத்த மாதிரி மாத்திக்க, நாம மாத்துனத மத்தவங்களுக்கு பகிர்ந்து கொள்ள, இல்ல மாத்தாம அப்படியே பகிர்ந்து கொள்ள சுதந்திரம் கொடுத்தா அதுக்கு பேரு தான் ” கட்டற்ற மென்பொருள் ” (Free Software).

Free Software-ம், Freeware-ம் ஒன்றில்லை.

 

பிரசன்ன வெங்கடேஷ், புதுவை

 

%d bloggers like this: