எளிய தமிழில் VR/AR/MR 5. VR காணொளி உருவாக்கும் வழிமுறைகள்

VR காணொளி வடிவங்கள் (video formats)

VR தலையணிகளில் தலையைத் திருப்பிப் பார்க்கும் போது பார்வைப் புலம் அதிகரிக்கிறது. சாதாரண காணொளிக் கருவிகளில் எடுத்த படங்கள் வேலைக்கு ஆகாது. ஆகவே VR காட்சிகளுக்காகவே பிரத்தியேகமான காணொளிக் கருவிகள் தேவை. பல வகைக் கருவிகள் சந்தையில் வந்துள்ளன. எம்மாதிரி வேலைக்கு எந்தக் கருவி தோதானது என்று அடுத்து பார்ப்போம்.

காணொளி வகைகள்

காணொளி வகைகள்

இரட்டைக்கண் பார்வை (stereoscopic) முப்பரிமாணக்காட்சி

மனிதர்கள் இரண்டு கண்களால் பார்க்கும்போது ஒவ்வொரு கண்ணும் சற்றே வெவ்வேறு கோணங்களில் பார்ப்பதால் நமக்கு பொருட்களின் ஆழத்தை உணர முடிகிறது. இதையே முப்பரிமாணக் காட்சி என்று சொல்கிறோம். மாறாக நாம் வழக்கமாகப் பார்க்கும் காணோளிகள் ஒற்றைக்கண் (monoscopic) பார்வைக் கோணத்தில் உள்ளதால் இவை இருபரிமாணக் காட்சிகளே.

360 ஒற்றை பார்வைக்கோணக் (Monoscopic) காணொளி

காணொளி ஒற்றை பார்வைக் கோணம்தான், ஆனால் இதுவே VR தலையணியில் இரு கண்களுக்கும் காண்பிக்கப்படும். தலையை முழுவதும் திருப்பிப் பார்க்கலாம் ஆனால் முப்பரிமாணம் தெரியாது.

360 முப்பரிமாணக் (Stereoscopic) காணொளி

360 பாகை முப்பரிமாணக் (stereoscopic) காணொளி படக்கருவி இரண்டு வில்லைகள் கொண்டது. பதிவுசெய்யும் படம் இடது மற்றும் வலது கண்களுக்கு இரண்டு தனித்தனி அலைத்தடங்களைக் கொண்டுள்ளது.  ஒவ்வொரு அலைத்தடமும் சற்று மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறது. திரையரங்கில் கண்ணாடி போட்டுக்கொண்டு ஒரு 3D படம் பார்ப்பது போன்றே நாம் பார்க்கும் பொருட்களின் ஆழத்தை உணர முடியும்.

180 முப்பரிமாணக் (Stereoscopic) காணொளி

இது மேற்கண்ட மாதிரியேதான்.  ஆனால் முன்புறம் 180 பாகைகளை மட்டுமே முப்பரிமாணத்தில் படம் எடுக்கும். அரங்கம், மேடை போன்ற முன்புறம் மட்டும் நடக்கும் நிகழ்வுகளைப் படம் எடுக்க இம்மாதிரிக் காணொளி தோதானது.

நன்றி

  1. Immersive Reality Video Types – Samsung 

இத்தொடரில் அடுத்த கட்டுரை: VR அசைவூட்டத்துக்குக் கட்டற்ற திறந்தமூலக் கருவிகள்

முப்பரிமாண அசைவூட்டம் (3D animation). VR அசைவூட்டம் உருவாக்கும் இணையதளம் பேட்சஸ் (Patches). எளிய VR அசைவூட்டங்கள் உருவாக்க ஓபன்ஸ்பேஸ் 3D (OpenSpace3D). மேம்பட்ட VR அசைவூட்டங்கள் உருவாக்க  பிளெண்டர் (Blender). மொனாடோவில் (Monado) முப்பரிமாண VR அசைவூட்டம் ஓட்டலாம்.

ashokramach@gmail.com

%d bloggers like this: