Ventoy எனும் கட்டற்றகருவி ஒருஅறிமுகம்

வென்டோய்( Ventoy) என்பது கணினியின் இயக்கத்தை USB இயக்ககத்திலிருந்து துவக்ககூடிய வகையில் USB இயக்ககத்தின் ISO கோப்புகளை உருவாக்குவதற்கான ஒரு கட்டற்ற கருவியாகும். இதன் மூலம், கணினியின் இயக்கமானது பிரச்சினை எதுவும் இல்லாமல் துவங்குவதற்காக அதனுடைய வண்தட்டை மீண்டும் மீண்டும் வடிவமைக்க (format )தேவையில்லை, அதற்குபதிலாக மிகஎளிய வழிமுறையாக ISO கோப்பை USB இயக்ககத்தில் நகலெடுத்து கணினியின் இயக்கத்தை துவக்கினால்போதுமானதாகும். இதன்வாயிலாக ஒரே நேரத்தில் ஒன்றிற்குமேற்பட்ட பல்வேறு ISO கோப்புகளை நகலெடுக்கலாம் மேலும் இது அவற்றைத் தேர்ந்தெடுக்க ஒரு துவக்க பட்டியலைக் கொடுக்கும் .இதில் மரபுசார்ந்த BIOS , UEFI ஆகிய இரண்டும் ஒரே வழியில் ஆதரிக்கப்படுகின்றன. மேலும் இதில் 200இற்கும் மேற்பட்ட ISO கோப்புகள் பரிசோதிக்கப்படுகின்றன .அதனோடு ஒரு “Ventoy Compatible” எனும் கருத்தமைவு இதனால் அறிமுகப்படுத்தப்பட்டது, இது எந்த வொரு ISO கோப்பையும் ஆதரிக்க உதவுகிறது.
இது 100% கட்டற்ற உரிமம் கொண்டது. இது பயன்படுத்த எளிதானது (எளிதாக துவங்கி செயல்படுத்தலாம்)
இது மிகவிரைவாக செயல்படக்கூடியது ( ISO கோப்புகளை நகலெடுக்கும் வேகத்தால் மட்டுமே வரையறுக்கப் படுகிறது). இதன்வாயிலாக ISO கோப்பிலிருந்து நேரடியாக கணினியின் இயக்கத்தை துவக்கலாம், இதில் அதற்காக பிரித்தெடுத்தல் பணியை தனியாக செய்யத்தேவையில்லை – மரபுசார்ந்த BIOS , UEFI ஆகிய இரண்டும்அதே வழியில் ஆதரிக்கப்படுகிறது .UEFI பாதுகாப்பான துவக்கத்தை இது ஆதரிக்கிறது (1.0.07+ முதல்) 4GB ஐ விட பெரியஅளவுடைய ISO கோப்புகள் இதனால் ஆதரிக்கப்படுகின்றன. – மரபுசார்ந்த BIOS , UEFI ஆகிய இரண்டுகளுக்கான பூர்வீக துவக்க பட்டி பாணியை இது கொண்டுள்ளது பெரும்பாலான வகை இயக்கமுறைமைகளால்(OS) இதுஆதரிக்கப்படுகிறது, 200 இற்குமேற்பட்ட ISO கோப்புகள் இதில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கணினியின் துவக்கஇயக்க மட்டுமல்லாமல், நிறுவுகை செயல்முறையையும் முழுவதுமாக இதன்வாயிலாக செயல்படுத்திடமுடியும் ISO கோப்புகளை பட்டியல் பயன்முறை / மரகாட்சி பயன்முறை ஆகிய விவரங்களை குறிப்புகளில் பட்டியலிடலாம் இது செருகுநிரல் வரைச்சட்ட கட்டமைப்பினை கொண்டது
கணினியின் துவக்க இயக்கத்தின் போது USB இயக்ககத்திலிருந்து படிக்க மட்டுமே செய்யும்.USB இயக்ககத்தின் வழக்கமான பயன்பாடு எதுவும் இதனால் பாதிக்கப்படாது. மேலும் பதிப்பு மேம்படுத்தலின் போதுUSB இயக்ககத்தின் தரவுகள் எதுவும் பாதிக்கப்படாது.அதனோடு இயக்கமுறைமையின் புதிய வெளியீடு எதுவும் வெளியிடப்படும் போது இதனைப் புதுப்பிக்க தேவையில்லை
மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் www.ventoy.net/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

%d bloggers like this: