குறித்த நேரத்தில் கணினியை விழிக்க வைக்க!!

எப்படி Terminalலிருந்து தானாகவே நமது கணினியை ஒரு குறிபிட்ட நேரத்தில் ஆன் செய்வது ? rtcwake என்னும் utilityயை பயன்படுத்தி turn off/suspend செய்யலாம். மேலும் குறித்த நேரத்தில் turn on னும் செய்யலாம்.

rtcwake கட்டளையின் மாதிரி:

 

sudo rtcwake -m [type 0f suspend] -s [number of seconds]

 

உதாரணமாக 60நொடிகளுக்கு பிறகு கணினி onஆக வேண்டுமெனில்.

 

sudo rtcwake -m disk -s 60

 

என்று சொடுக்குங்கள்.

இதில் [type of suspend]

  • standby – சிறிதளவு மின் சிக்கனம். ஆனால் உடனே திரும்ப வந்துவிடுவேன்.
  • mem – RAMற்கு suspend செய்யும்
  • disk – diskகிற்கு suspend செய்யும்.ஆகவே கணினி off செய்யப்படும்.
  • no – கணினி மீண்டும் விழிக்க வேண்டிய நேரத்தை குறிப்பிடவும்

( இதில் மட்டும் பயனாளி தான் கணினியை sleep நிலைக்கு செலுத்த வேண்டும். மற்றவைகளில் தானாகவே sleep நிலைக்கு வந்து விடும்) .

 

நேரத்தை எவ்வாறு கொடுக்கலாம் ! [number of seconds]

-t தட்டச்சி செய்த நொடிகளுக்கு பின் கணினி எழும்.

-l கணினி எழ வேண்டிய நேரத்தை local time இல் குறிக்கலாம்.

-u கணினி எழ வேண்டிய நேரத்தை UTC time இல் குறிக்கலாம்.

மூலம்: http://bit.ly/autohiber

~ஜி.பி.ஆர்.குமார்

%d bloggers like this: