லினக்ஸ் இயங்குதளங்களில் தமிழில் எழுதுவது எப்படி?

கட்டற்ற லினக்ஸ் இயங்குதளங்களைப் பயன்படுத்த விரும்பும் தமிழ் ஆர்வலர்கள் பலருக்கும் இருக்கும் ஐயமே அவற்றில் தமிழில் எழுதும் வழி தான். விண்டோஸ் இயங்கு தளத்தில் தமிழில் எழுத அழகி, முரசு, அஞ்சல் போன்ற மென்பொருட்கள் உள்ளன.லினக்ஸில் தமிழில் எழுத பல வழிகள் இருந்தாலும், ibus முறையே மிக எளிதானது. அமைப்புகளில் (Settings) சில சிறு மாற்றங்கள் செய்தால், எளிதாய் மொழி மாற்றி எழுதலாம்.

 

முதல் படி நிறுவுதல் (Installation):

 

பெரும்பாலான அன்பர்களுக்கு ibus ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும். (சின்னம் ‘i’ வடிவில் இருக்கும்). அப்படி இருப்பின், நேராக இரண்டாம் படிக்குச் செல்லுங்கள். இல்லாத பட்சத்தில், கீழ்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி நிறுவுங்கள்:

  • எளிதாய் நிறுவுவதற்கு, உங்கள் இயங்குதளத்தில் உள்ள Package Manager மூலம் ibus என்று தேடி நிறுவிக்கொள்ளவும். (உ.தா: உபுண்டுவில் Ubuntu Software Centre \ Synaptic Package Manager )
  • முனையத்தின் (Terminal) மூலம் நிறுவும் வழிமுறைகளுக்கு: iBus- Read Me

 

 

இரண்டாம் படி – தேர்வு செய்தல் (Customization):

1. ibus (அல்லது) ibus → Preferences ஐத் தேர்வு செய்யவும்.

2. அங்கு உள்ள Input Method என்கிற Tab -க்குப் போகவும்.

3. அதில் உள்ள ‘Customize active input methods’ என்பதைத் தேர்வில் வைக்கவும்(Tick).

4. ‘Select Input Method’ என்கிற கீழ்விடு பட்டியலில் (Dropdown list) ‘தமிழ்’ என்பதைத் தேர்வு செய்யவும்.

5. அதிலும், தேவையான Method (Phonetic, தமிழ்99, typewriter, itrans, inscript,) ஐத் தேர்வு செய்து சேர்க்கவும்.

6. தேர்வு செய்த முறையைச் சேர்க்கவும். (Add செய்ய வேண்டும்)

  • Phonetic என்பது ஒலிபெயர்ப்பு (Transliteration) முறை ஆகும். {Google Transliteration IME, அழகி போன்றது}
  • தமிழ் 99 என்பது மிக எளிதாக இருக்கும் மற்றொரு முறை. (விக்கிபீடியாவில் உள்ள தமிழ் கட்டுரைகள் இந்த முறையின் மூலமே எழுதப்படுகிறன)
  • Typewriter என்பது தமிழ்த் தட்டச்சு தெரிந்தவர்களுக்கான முறை.
  • Itrans இந்திய மொழிகளுக்கான ASCII Transliteration முறை
  • Inscript இந்திய விசைப் பலகை அமைப்பிற்கானது.

    7. அடுத்து, ‘Advanced’ Tab -க்குப் போகவும்.

    8. அங்குள்ள ‘Share the same input method along all applications’ என்பதைத் தேர்வு நிலையில் (Tick) வைக்கவும்.

 

     

 

மூன்றாம் படி இயக்குதல்:

 

1. System Settings → Language என்பதற்குச் செல்லவும்.

  1. அதில் Keyboard input Method என்பதில் ibus என்பதைத் தேர்வு செய்யவும்

 

நான்காம் படி துவக்க பயன்பாடுகளில் சேர்த்தல்:

 

1. System Tools → Startup applications என்பதற்குச் செல்லவும்.

அதில் Add பொத்தானைச் சொடுக்கவும்.

  1. திறக்கும் உரையாடல் பெட்டியில், கீழ்காணும் படத்திம் உள்ளதை உள்ளிடவும்:

உள்ளிட்ட பின் ‘Add” ஐச் சொடுக்கி சேமிக்கவும்.

அவ்வளவு தான்…

 

இனி , நீங்களும் எளிதாக தமிழில் எழுதலாம்.

உள்ளீடு முறை செயல்பாட்டில் இருக்கும் போது, தகவல் பலகத்தில் (Notification) அதன் சின்னம் தெரியும்.

நாம் செய்த வழிமுறைகளால், கணிணி துவங்கிய உடனேயே தமிழில் எழுத இயலும்.

 

முன்னிருப்பு விசைகள் (Default Keys):

  • தமிழ் உள்ளீட்டைத் துவக்க \ நிறுத்த \ மொழிகளுக்கு இடையே மாறுவதற்கு (English, Tamil) Control+ Space அழுத்தவும். உள்ளீடு முறைகளுக்கு இடையே மாறுவதற்கு, Control+Alt+space அழுத்தவும்

 

தேவையெனில், ibus → Preferences சென்று இவற்றை மாற்றிக் கொள்ளலாம்.

குறிப்பு: இதன் மூலம் தமிழ் மட்டுமன்றி பல மொழிகளை எழுதலாம்.

~’ஆளுங்கஅருண்

%d bloggers like this: