தமிழ்க் கணிமையும் கட்டற்ற மென்பொருளும்

கணினியில் தமிழ் என்பது மிக மெதுவாய் வளர்ந்து வரும் ஒரு துறை. தமிழ் எழுத்துக்களுக்கான ஒருங்குறிக் குறியீடுகள், எழுத்துருக்கள் போன்றவை ஓரளவு முதிர்ச்சி அடைந்திருந்தாலும் அவை போதிய அளவில் இல்லை என்பதே உண்மை. எடுத்துக்காட்டாக, ஒரு நல்ல சொல்திருத்தி (spell checker) தமிழுக்கு இதுவரையிலும் இல்லை. இத்துறைகளில் ஆராய்ச்சிகள் உள்பட பல முயற்சிகள் நடந்து வந்தாலும் பெரும்பாலானவை கட்டற்ற மென்பொருட்களாக இல்லை.

இதுகுறித்து இந்திய லினக்ஸ் பயனர் குழு சென்னை ஒருங்கிணைப்பாளர் [ilugc.inஶ்ரீநிவாசன் கூறியதாவது: “சில வாரங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழ்க் கணிமைக் கருத்தரங்கில் கலந்துகொண்டேன். அனைவரும் தமிழ்க் கணிமையில் தாங்கள் செய்த பணிகளை விளம்பரம் செய்தனரே தவிர, யாரும் அவற்றைக் கட்டற்று வெளியிடத் தயாராக இல்லை. இத்தகையோரின் பிடியிலிருந்து தமிழ்க் கணிமையை மீட்டெடுக்கும் வண்ணம், இதுபோன்ற படைப்புகளைக் கட்டற்ற மென்பொருட்களாகப் படைக்கத் திட்டமிட்டு வருகிறேன்”.

மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்கள் தமிழுக்கு அதிகமாக தேவை. Corpus, Spell Checker, Grammar Checker, Morphological Analyze, Lexican Analyzerபோன்றவை தமிழில் தேவை. இவற்றை நாம் உருவாக்கி, கட்டற்ற மென்பொருட்களாக வெளியிட வேண்டும்.

இந்த கருத்தரங்கில் பேசிய பலரும் மொழியியல் துறை சார்ந்த மென்பொருட்கள் பற்றி பேசினர். ஆங்கிலத்தில் பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால் தமிழில் உள்ள பெரும்பாலான மொழியியல் மென்பொருட்கள் பொது மக்களுக்கு முழு உரிமைகளுடன் கிடைப்பதில்லை. அவற்றை விற்பனை செய்யும் பல்வேறு தமிழ் அறிஞர்கள், அந்த மென்பொருட்களின் source codeஐ வெளியிட மறுப்பதால், மொழியியல் அடிப்படை அறிவு பெறுவதில் பெரும் தடங்களும் சிக்கலும் உள்ளன.

மென்பொருள் உருவாக்க பலரும் முயற்சி செய்வதில்லை.

தமது மென்பொருட்களை விளக்கிய அறிஞர்கள்
Source code
ஐ தர மறுக்கும்  நிலை உள்ளவரை, தமிழ் சார்ந்த மென்பொருட்களின் வளர்ச்சி என்பது மிகவும் கடினம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் சொல் திருத்தி, அகராதி போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் மூல நிரல் தரப்படுவதில்லை. இதனால் ஆர்வம் உள்ள எவரும் தமிழுக்காக மென்பொருள் உருவாக்க மீண்டும் மீண்டும் ஏற்கனவே செய்த முயற்சிகளையே ஆரம்பத்தில் இருந்து செய்யும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலை தமிழுக்கு மட்டுமல்லாது, அனைத்து இந்திய மொழிகளுக்கும் நிலவுவதாக, இந்திய லினக்ஸ் பயனர் குழு சென்னை மடலாடற்குழுவில்
சங்கர்ஷன் அவர்கள் குறிப்பிட்டார்.

தமிழ் விர்ச்சுவல் யுனிவர்சிடி போன்ற அமைப்புகளிடம் நிதியுதவி பெறும் தமிழ்க் கணிமை தொடர்பான பணித்திட்டங்களும் கட்டற்று இல்லை” என்ற ஶ்ரீனிவாசனின் கூற்றுக்கு பதிலளித்த யாவருக்கும் அறக்கட்டளை ஆமாச்சு, அவ்வமைப்பு அப்ளை செய்வோருக்கு நிதியளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், கட்டற்ற பணித்திட்டங்களுக்கு நிதியுதவி பெற யாவர்க்கும் அறக்கட்டளை சார்பில் அதுபோன்ற அமைப்புகளுக்கும் அரசு திட்டங்களுக்கும் அப்ளை செய்து பொறுப்பு வகிக்க ஆர்வலர்கள் தேவை எனவும் அறைகூவல் விடுத்தார்.

FreeTamilComputing மடலாடற்குழுவில் 
முகுந்த கூறுகையில், “மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு மென்பொருட்கள் படைக்கும் பல்கலைக்கழகங்கள் அவற்றைக் கட்டற்ற மென்பொருளாக வெளியிடாமல், ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஏற்கனவே மற்றொரு பல்கலைக்கழகம் செய்துவிட்டதை மீண்டும் செய்வது கொடுமையிலும் கொடுமை. அதனால் நிரலெழுதிவதில் இறங்குவோம்” என்றார்.

இதற்கு பதிலளித்த ஆமாச்சு, அதுபோன்ற பல்கலைக்கழகங்களில் தான் பேசிய சிலராவது மூல நிரலை வெளியிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். கல்வி நிறுவனங்களிடம் தொடர்பிலிருந்து இத்தகைய பணிகளை மேற்கொள்ள யாவரக்கும் அறக்கட்டளைக்குப் பொறுப்பாளர் தேவை எனவும் குறிப்பிட்டார். ஆர்வமிருப்போர் ramadasan@amachu.net என்ற முகவரிக்கு எழுதவும்.


இந்த நிலையை மாற்றும் முயற்சியாக கட்டற்ற மென்பொருட்களாக தமிழுக்கு தேவையான கருவிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். முதற்படியாக hunspell மூலம் சொல் திருத்தி உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே Firefoxநீட்சியாக இது கிடைக்கப்படுகிறது. அதன் மூல நிரல் கிடை ப்பதால், மேலும் இதை திறம்மிக்கதாக மாற்றுவது எளிது. இதற்கு பங்களிப்பதற்கான அழைப்புகள் விரைவில் வெளியாகும்.

விக்னேஷ் நந்த குமார் ஓர் இணைய வடிவமைப்பாளர் (web designer), கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டின் மேல் அசையாத நம்பிக்கை கொண்டவர். கட்டற்ற இணைய வடிவமைப்புத் தொழில்நுட்பங்களான HTML, CSS, Javascript ஆகியவற்றுடன் விளையாடுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். வலைப்பதிவுகள் எழுதுதல், புகைப்படம் எடுத்தல், வலை உலாவல் ஆகியன இவரது ஓய்வுநேரச் செயல்கள்.

வலைத்தளம்: vigneshnandhakumar.in

viky.nandha@gmail.com

%d bloggers like this: