Tag Archive: python in tamil

பைத்தான் படிக்கலாம் வாங்க – 18 – யார், எத்தனை தோசை சாப்பிட்டார்கள்??

முந்தைய பதிவில் வியனின் அப்பா, அவனுடைய அறிவைப் பார்த்து வியந்தார் என்று சொன்னேன் அல்லவா! அதற்குக் காரணம் இருக்கிறது. முதலில் வியன் என்ன கேட்கிறான்? இன்னும் பத்து நாட்கள் பள்ளிக்கூடம் போக வேண்டும்; ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் எனப் பத்து நாளும் தாருங்கள் எனக் கேட்கிறான். இப்படிக் கொடுத்தால் கடைசியில் 50 ரூபாய் செலவாகியிருக்கும்….
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 17 – வென்றது வியனா? அப்பாவா?

மன்னரிடம் நெல்மணிகள் கேட்ட கதையில் வென்றது மோகனா? மன்னரா? கண்டுபிடித்து விட்டீர்களா? மோகன் தான் எனக் கண்டுபிடித்திருப்பீர்கள். முதல் சதுரத்திற்கு ஒரு நெல்மணி, இரண்டாவது சதுரத்திற்கு இரண்டு நெல்மணி, மூன்றாவது சதுரத்திற்கு நான்கு நெல்மணி என அறுபத்து நான்குக் கட்டங்களுக்கும் கண்டுபிடித்தால் மொத்தம் 18,446,744,073,709,551,615 நெல்மணிகள் தேவைப்படும். இந்த நெல்மணிகளை எடுத்து வைக்க மட்டுமே மன்னருக்கு…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 15 – while 2

முந்தைய பதிவில் வீட்டுப்பாடம் கொடுத்திருந்தோமே! செய்து விட்டீர்களா? முதல் வீட்டுப்பாடம், முந்தைய பதிவில் பார்த்த நிரலுக்குப் பாய்வுப்படம் வரைவது. முதல் நிரல்: This file contains bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க! 14 – while

இது வரை if elif else பார்த்திருக்கிறோம். இந்தப் பதிவில் while பார்க்கப் போகிறோம். while என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள் என்ன? எப்போது என்பது! இதை எதற்கு நிரல் மொழிகளில் பயன்படுத்துகிறார்கள்? ஓர் எடுத்துக்காட்டு சொல்கிறேன் பாருங்களேன். 1 என்று ஐந்து முறை அச்சிட வேண்டும் எப்படி நிரல் எழுதுவது? இந்த நிரல் சரியா…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க! 12 – மூன்று எண்களில் பெரிய எண் எது?

மூன்று எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிப்பதற்கான பாய்படத்தை(flowchart) வரைந்து வரக் கேட்டிருந்தேன். வரைந்து விட்டீர்களா? நானும் அந்த வீட்டுப்பாடத்தைச் செய்திருக்கிறேன். நீங்கள் இது போலவும் செய்திருக்கலாம். மாற்று வழியிலும் செய்திருக்கலாம். உங்கள் பாய்படத்தை github.com தளத்தில் பதிவேற்றி, இணைப்பைக் கருத்துகளில் பதியுங்கள். சரி, இப்போது மேல் உள்ள பாய்படத்திற்குப் பைத்தான் நிரல் எழுதுவோமா? 1. மூன்று…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 7 – லினக்சில் நிரல் எழுதுவோம்!

முந்தைய பதிவில் விண்டோசில் எப்படி லினக்ஸ் நிரல் எழுதுவது என்று பார்த்தோம். இப்போது லினக்சில் எப்படி எழுதுவது என்று பார்ப்போம். லினக்ஸ் இயங்குதளத்தில் பைத்தான் நிரல் எழுதுவதற்கு முன், நோட்பேட்++(Notepad++),  நோட்பேட்கியூகியூ(Notepadqq) போன்ற மென்பொருட்களை நிறுவிக் கொள்வது சிறந்தது. இம்மென்பொருட்கள் கட்டாயமாகத் தேவையா எனக் கேட்டால் இல்லை தான்! இருந்தாலும் இவற்றைப் பயன்படுத்துவதில் சில நன்மைகள்…
Read more

பைத்தான் – sys module – வினா 8 விடை 8

போன பதிவில் os நிரல்கூற்றைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா! இந்தப் பதிவு sys module பற்றியது. கணினியின் சில அடிப்படைத் தகவல்கள், பைத்தான் வரிபெயர்ப்பி பற்றிய தகவல்கள் ஆகியவற்றை sys நிரல்கூற்றில் இருந்து பெறலாம். முதலில் import sys கொடுத்துக் கொள்ளுங்கள். வினா 1: பைத்தான் காப்புரிமை பற்றிய தகவல்களை எங்கே பார்ப்பது? sys.copyright வினா…
Read more

பைத்தான் – os module – வினா 8 விடை 8

பைத்தானின் முதன்மையான நிரல்கூறு(module)களுள் ஒன்று os என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தப் பதிவில், அதில் அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சில செயல்கூறுகளை(functions)ப் பார்க்கலாமா! os நிரல்கூற்றை முதலில் உங்கள் கணினியில் இறக்கிக் கொள்ளுங்கள். அதாவது, import os அவ்வளவு தான்! வினா 1: நான் இருக்கும் அடைவைப் பைத்தானில் பார்ப்பது எப்படி? os.getcwd() cwd…
Read more

லினக்ஸ் மின்டில் செலினியம் வெப் டிரைவர்,பயர்பாக்ஸ் டிரைவர் – பைத்தானுக்கு நிறுவுவது எப்படி?

செலினியம் திட்டப்பணி செய்வதில் தொடக்க நிலையில் இருப்பவர்கள், செலினியம் வெப் டிரைவர், பயர்பாக்ஸ் டிரைவர் ஆகியவற்றை லினக்ஸ் மின்டில் நிறுவுவது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். லினக்சில் மென்பொருள் நிறுவல் என்பது மிக மிக எளிமையான ஒன்று. டெர்மினலைத் திறந்து கொள்ளுங்கள். 1. நீங்கள் ஏற்கெனவே pip3 நிறுவியிருந்தால் நேரடியாக இரண்டாம் படிக்குப்…
Read more

பைத்தான் ரிஜெக்ஸ் – 7 – ஒரு கோப்பில், மின்னஞ்சலில் உள்ள மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடிப்பது எப்படி?

நம்மிடம் ஒரு கோப்பு(File) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கோப்பில் நிறைய தகவல்கள் இருக்கின்றன. அந்தத் தகவல்களில் ஒரு சில மின்னஞ்சல் முகவரிகளும் இருக்கின்றன. அந்த மின்னஞ்சல் முகவரிகள் மட்டும் நமக்கு வேண்டும். இதைப் பைத்தான் ரிஜெக்ஸ் பயன்படுத்திச் செய்யப் போகிறோம். இந்த வேலையில் இரண்டு படிகள் இருக்கின்றன. 1. கோப்பைத் திறந்து பைத்தான்…
Read more