Stellarium – வானவியல் கற்போம்

நம் பைந்தமிழ் அறிஞர்கள், கண்களை மூடி தியானத்தில் மூழ்கி வானில் நடக்கும் விசித்திரங்களை அறிந்து, தெரிந்து, தெளிந்து நமக்கு பாடல் வழியே கூறிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் அறிவியல் வளர்ந்த காலங்களில் பெரிய பெரிய டெலிஸ்கோப்பின் உதவி கொண்டு வானியல் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தினர். சிறுவயதில் இதையெல்லாம் நாம் புத்தகம்/தொலைகாட்சி மூலம் பார்க்கும் போது நாம் பெரியவராய் ஆனவுடன் நமது வீட்டு மொட்டை மாடியில் பெரிய டெலஸ்கோப் வாங்கி வைத்து தினமும் வானில் நடக்கும் அதிசயங்களை காண வேண்டும் என்ற அவா நம் எல்லோருக்கும் இருந்திருக்கும். ஆனால் வளர வளர குடும்பம், வேலை, குழந்தைகள் போன்ற சுகமான சுமைகளில் சிக்கிநமது சிறு வயது ஆசைகளை பெருவயதில அடிக்கடி அசைபோடுவதோடு நின்றுவிடுகிறோம்.

நாம் வானத்தை எப்போது பார்க்கிறோம்அவ்வப்போது ஏற்படும் சூரிய/சந்திர கிரகணங்களின் போதுதான் நமக்கு வானம் என்று ஒன்று உள்ளதே நினைவுக்கு வருகிறது. அல்லது facebook –ல் நமது photographer நண்பர்கள் சூரியன் மறைந்த வானம், நிலா ஒளி வெளிச்சத்தில் வானம், நட்சத்திர கூட்டம் போன்றவற்றை photo எடுத்து போடும் போது அதற்கு like கொடுக்கும் போதுதான் நினைவுக்கு வருகிறது. இந்த அவசர இயந்திர உலகில், இயற்கை அன்னையின் படைப்புகளை நாம் மறக்கப்பட்டுவிட்டோம்.

சிறு வயதில் நட்சத்திரம், பெளர்ணமி நிலா போன்றவற்றைப் பார்த்து விட்டு ஏற்படும் மகிழ்ச்சி வளர வளர அட! இது நாம் தினமும் பார்பது தானே என்று அலட்சியம் ஏற்படுகிறது. கண்சிமிட்டும் விண்மீன்களை நாம் பார்க்க மறந்தாலும் அவை நம்மைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்! எத்தனை பேர் நம்மில் தினமும், இல்லை அடிக்கடியாவது வானத்தை நிமிர்ந்து பார்க்கிறோம்!நாம் கவிஞராகவோ அல்லது வானியல் துறை அறிஞராகவோ இருந்தால் தான் தினமும் வானத்தைப் பார்ப்போம். கவிஞராக இருந்தால் கவிதை வரவில்லை எனில் வானத்தைப் பார்த்து கவிதை எழுதிவார்.

 

ஏனெனில் வானம், நிலா மற்றும் பெண் இல்லையென்றால் கவிதை இல்லை. இந்த வானம் இல்லையென்றால் எவ்வாறு வானியல் துறை அறிஞர் ஆவதுநாம் தான் கணிப்பொறி துறையில் கால்தடம் பதித்து விட்டோமே!  நம்மை போன்ற கணிப்பொறி வல்லுனர்கள், இரவில் நமது office-ன் மேற்கூரையைக் கூட பார்க்க நேரம் இல்லாமல் கணிப்பொறியில்/தொலைபேசியில் தலையை விட்டுக்கொண்டு வேலை செய்யும் ஒரு பரிதாப நிலை ஏற்பட்டுவிட்டது என்று என்னைப்போல புலம்புபவரா நீங்கள் 

இந்த நிலை தற்போது இருக்கும் இளம் சந்ததியினருக்கு மீண்டும் நிகழாமல் இருக்க பல வழிகள் வந்து விட்டது. இதில் ஒன்று தான் கணிப்பொறியியல் புரட்சி. எனவே தற்போது வெறும் computer மட்டும் இருந்தால் போதும், வானில் என்ன நடக்கிறது, எப்படி உள்ளது என்பதை நாமும் பாமரனும் தெரிந்து கொள்ளலாம். நமக்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த stellariumஎனும் மென்பொருள். இது ஒரு free & open source software ஆகும்.

 

இதன் மூலம் நாம் கிட்டதட்ட 600,000 நட்சத்திரங்களின் கட்டமைப்பு/ கூட்டமைப்புகளைப் பார்க்க முடியும்.  நாம் stellarium –த்தில் மூழ்கி விட்டோம் எனில் நாம் இதில உள்ள சிறப்பான zoom வசதி மூலம் நமது உலகை மறந்து விட்டு, பால்வழி அண்டத்தில் மிதப்பது போன்ற உணர்வு ஏற்படும். இந்த பிரபஞ்சமே நமது வீடு என்ற கொள்கையில் நாமும் ஒத்து போய்விடுவோம்.

வலை தளம் : www.stellarium.org

ubuntu ல் Install செய்ய: sudo apt-get install stellarium

இதை நமது GNU/LINUX OS –ல் install செய்து, பிரபஞ்சத்தில் மூழ்கி எழுந்திடுவோம்!  மீண்டும் அடுத்த மாதம் வேறு ஒரு சிறப்பான application உடன் உங்களை சந்திக்கிறேன்.

 
த.சுரேஷ், open source ஐ விரும்பும் ஒரு மென்பொருள் வல்லுநர். SlashProg எனும் நிறுவனத்தில் பணி புரிகிறார்.

மின்னஞ்சல் : jemenisuresh@gmail.com

 வலை : root2linux.com


 



%d bloggers like this: