Shogun- எனும் இயந்திர கற்றலிற்கான மென்பொருள் நூலகம் ஒரு அறிமுகம்

இயந்திர கற்றல் (ML) என்பது சக்தி வாய்ந்தது. கடந்த இரண்டு தசாப்தங்களாக, ஒரு வழக்கத்திற்கு மாறான கல்வித் துறையிலிருந்து நாம் வாழும் முறையை மாற்றிடுமாறு உருவாகியுள்ளது. அதன் வழிமுறைகள் சமுதாயத்தை பாதிக்கின்றன மேலும் அதன் கருவிகள் உலகப் பொருளாதாரத்தில் ஒரு பில்லியன் டாலர் செல்வாக்கைக் கொண்டுள்ளன. இவ்வாறான சூழலில் Shogun எனும் இயந்திர கற்றலிற்கான மென்பொருள் நூலக மேம்படுத்துநர்கள் இது முதன்மை வழிமுறைகளுடனும் பயனாளரின் நட்புடன்கூடிய , அணுகக்கூடியது என்பதை உறுதிப்படுத்த விரும்புகின்றார்கள். அறிவியலறிஞர்கள், தரவுகளின் ஆர்வலர்கள், ஊடகவிய லாளர்கள், மாணவர்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள் ,இதர நிறுவனங்கள் போன்ற பயனாளர்கள் , பொது மக்கள் ஆகிய அனைவரும் இயந்திர கற்றல் (ML) கருவிகளை எந்த செலவுமின்றி பயன்படுத்த முடியும் என்று நோக்கத்துடன் இது உருவாக்கப்ட்டுள்ளது. Shogun எனும் இயந்திர கற்றல் (ML) கருவித்தொகுப்பு இந்த பயணத்தை அதன் வசதி வாய்ப்புகள் மூலம் ஊக்குவிக்கிறது மேலும் இயந்திர கற்றல் (ML) கல்வி , மேம்பாட்டிற்கான ஒரு முன்னிலையாக அமைந்துள்ளது. இது மிகப்பெரிய , பழமையான திற மூல இயந்திர கற்றல் (ML) தளங்களில் ஒன்றாகும். இந்நிலையில் Shogun என்றால் என்ன என்ற சந்தேகம் நம்அனைவருக்கும் எழும் நிற்க.
Shogun என்பது சி ++ இல் கட்டமைக்கப்பட்ட ஒரு திறமூல இயந்திர கற்றல் மென்பொருள் நூலகமாகும். இது பரந்த அளவிலான திறமையான , ஒருங்கிணைந்த இயந்திர கற்றல் வழிமுறைகளை வழங்குகிறது. பின்னோக்கு , வகைப்பாட்டின் சிக்கல்களுக்கான ஆதரவு இயந்திரங்கள் போன்ற உருவாக்கமைய இயந்திரங்கள் இதில் உள்ளது. மறைக்கப்பட்ட Markov மாதிரிகளை முழுமையாக செயல்படுத்த Shogun உதவுகிறது. இதன் மையமானது C ++ இல் எழுதப்பட்டுள்ளது, மேலும் இது MATLAB, Octave, Python, R, Java, Lua, Ruby , C # ஆகிய கணினி மொழிகளுக்கான இடைமுகங்களை வழங்குகிறது. இன்று, உலகெங்கிலும் ஒரு பெரிய , செயலில் உள்ள பயனாளர் சமூகம் உள்ளது, இது Shogunஐ கல்வி , ஆராய்ச்சிஆகியவற்றிற்கான தளமாகப் பயன்படுத்தி கொள்ள உதவுகிறது, மேலும் முக்கிய தொகுப்பிற்கும் பங்களிக்கிறது. Shogun 1999 இல் உருவாக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பின் கவணம் முழுவதும் பெரிய அளவிலான உருவாக்கமைய முறைகள் உயிர் தகவலியல் ஆகியவற்றில் இருந்தது. அப்போதிருந்து, இது தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு பெருமளவில் விரிவடைந்துவந்துள்ளது. . தற்போது, இது மாணவர்கள், அறிவியலறிஞர்கள் , தொழில்நுட்ப வல்லுநர்களின் மாறுபட்ட குழுவால் உருவாக்கப்பட்டுவருகின்றது. எவ்வாறாயினும், பல்வேறு பங்களிப்பாளர்களால் வழங்கப்பட்ட தொகுப்புகள் , பிழை அறிக்கைகள் ஆகியவை இல்லாமல் அவர்களின் பணிகள் எதுவும் சாத்தியமில்லை.

வசதிவாய்ப்புகள்
Shogun இன் தனித்துவமான சில வசதிவாய்ப்புகள் பின்வருமாறு.
Shogun எந்த வொரு கணினிமொழிக்கும் மட்டுப்படுத்தப்படவில்லை; C++, Python, Octave, R, Java, Lua, C#, Ruby போன்ற பல்வேறு கணினிமொழிகளிலிருந்தும் ஒருங்கிணைந்த இடைமுகம் (SWIG) மூலம் இதனுடைய கருவித்தொகுப்பைப் பயன்படுத்தலாம். இதனால் இது கணினி மொழிகளின் போக்குகளிலிருந்து இது சுதந்திரமாகமாக அமைந்துள்ளது என அறிந்துகொள்ளலாம், மிகமுக்கியமாக, யார்வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்த நம்மை அனுமதிக்கிறது பல்வேறு சமூகங்களுக்கு ஒருவரின் வழிமுறைகளை வெளிப்படுத்தும் வாகனமாக இது திகழ்கின்றது. ,
இது லினக்ஸ் / யுனிக்ஸ், மேக் ,விண்டோஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளின் கீழ் இயங்கும் திறன்மிக்கது. Jupyter நோட்புக் (நேரடி குறிமுறைவரிகள், சமன்பாடுகள் அல்லது அடங்கிய ஆவணங்களை உருவாக்க பகிர அனுமதிக்கும் திறமூல இணைய பயன்பாடு) உடன் இணைப்பதன் மூலம் இதனை யாரும் குறைந்த முயற்சியுடன் செயற்படுத்திட முயற்சிசெய்திடலாம் மேலும் கற்றுக்கொள்ளலாம். ). பயனாளர்கள் இதனை மேகக்கணினியில் கூட இயக்கலாம். இது வெளிப்புற நன்கொடைகள் மூலம் இந்த சேவையை கட்டணமில்லாமல் வழங்குகிறது.
Shogun எதையும் மறுபரிசீலனை செய்யவில்லை, ஆனால் Tapkee, SLEP, GPML, LibSVM/LibLinear, SVMLight, LibOCAS, libqp, VowpalWabbit போன்ற பல்வேறு அதிநவீன நூலகங்களுக்கு இணைப்புகளை வழங்குகிறது.
Shogun சமூகம் சார்ந்தும் வணிகரீதியாகவும் கிடைக்கின்றது. இது தற்போது GPLv3 எனும் பொதுஅனுமதியின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது. இது GPL (General Public License) வாய்ப்புகளுடன் பி.எஸ்.டியுடன் பொருந்தக்கூடிய தன்மையை நோக்கி நகர்ந்துவருகிறது. இதன் பொருள் நிறுவனங்கள் தங்கள் குறிமுறைவரிகளின்-தளத்தை GPL ஆக மாற்றாமல் குறிமுறைவரிகளைப் பயன்படுத்தலாம் என்பதாகும்.
இது(Shogun) அனைத்து நிலையான இயந்திர கற்றல் (ML) வழிமுறைகளையும் ஒழுங்காக செயல்படுத்திடுமாறு உதவுகிறது. அதன் செயலாக்கங்கள் MLPack தரப்படுத்தல் கட்டமைப்பால் அளவிடப்படுகின்றன. இது ஒரு முழுமையான நவீன / முன்கூட்டியே ஆன வழிமுறைகளை வழங்குகிறது (திறமையான SVM செயல்படுத்தல்கள், பல்வேறு கருஉருவாக்கமைய கற்றல் போன்றவை). இவை அனைத்தும் முன் செயலாக்கம், வரிசைப்படுத்தல், I / O, மதிப்பீடு , அளவுரு சரிப்படுத்தும் பொது-நோக்க முறைகளின் தொகுப்பால் உதவுகின்றன. இது கணிசமான பரிசோதனை உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது, இது டஜன் கணக்கான OS அமைப்புகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது.
இது (Shogun) ஒவ்வொரு அர்த்தத்திலும் ஒரு சமூக கற்றல் தளமாகும் – இயந்திர கற்றல் (ML) பற்றி அறிய எவரும் கருவிப்பெட்டியைப் பயன்படுத்தலாம் , அதன் சிக்கல்களைத் தீர்க்க இதைப் பயன்படுத்தலாம். பல்வேறு அறிவியலறிஞர்கள் இதனை தங்களுடைய ஆராய்ச்சிக்கான கருவியாகப் பயன்படுத்துகின்றனர், மேலும் இது Google Scholar இல் பல நூறு முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இது மேககணினியின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் , கல்விபட்டறைகளில் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது (எ.கா., இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில்: ‘இயந்திர கற்றல் அறிமுகம்’). இது அதன் பங்களிப்பாளர்களை மிகவும் மதிக்கிறது, . இது 2011 முதல் 33 கூகிள் கோடை குறிமுறைவரிகளின் மாணவர்களுடைய செயல்திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது . மாணவர்கள் பலர் தாங்கள் பெற்ற திறன்களை தொழில்களை துவங்குவதற்கும் நிறுவனங்களுக்கும் எடுத்துச் சென்றுள்ளனர், மேலும் தமக்கும் தங்கள் நிறுவனங்களுக்கும் சிறப்பாகச் செய்கொண்டிருக்கிறார்கள்.
உபுண்டுவில் Shogun நிறுவுகை செய்தல்
Shogun ஐ டெபியன் / உபுண்டு இயக்க முறைமையில் நிறுவுகை செய்து பயன்படுத்திடலாம். இரண்டுமே தற்போது சி ++ நூலகம் , பைதான் பஇணைப்புகளைக் கொண்டுள்ளன. இதை நம்முடைய கணினியில் பின்வருமாறு கட்டளைவரிகளுடன் சேர்த்திடுக:
sudo add-apt-repository ppa:shogun-toolbox/stable
sudo apt-get update
பின்னர், பின்வரும் கட்டளைவரியுடன் நிறுவுகைசெய்திடுக:
sudo apt-get install libshogun18
பைதான் (2) பஇணைப்புகளைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடலாம் அதற்கான கட்டளைவரி பின்வருமாறு:
sudo apt-get install python-shogun

இந்த கட்டுரை Shogun, அதன் வரலாறு, வசதிவாய்ப்புகள், அதைப் பயன்படுத்துவதற்கான காரணங்கள் பற்றிய சுருக்கமான கருத்துகளை அளிக்கிறது. மேலும் அறிய ஆர்வமுள்ள எவரும் www.shogun-toolbox.org/எனும் இதனுடைய அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடலாம்

%d bloggers like this: