Selenium – சோதனைகளை இணைத்து இயக்குதல், அறிக்கைகள்

3.6 தனித்தனி சோதனைகளை ஒன்றாக இணைத்து இயக்குதல்

search_tests (3.4) மற்றும் homepage_tests (3.5) எனும் இரண்டு வெவ்வேறு program-களில் கொடுக்கப்பட்டுள்ள சோதனைகளை ஒருசேர நிகழ்த்த விரும்பினால் அதற்கான code பின்வருமாறு அமையும்.

 

 

இதில் தேவையான கோப்புகளிலிருந்து அதிலுள்ள classes-ன் பெயர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். பின்னர் அந்த classes-ல் உள்ளவை  அனைத்தும் x , yஎனும் variables-க்கு செலுத்தப்பட்டுள்ளது. Z எனும் variable-ஆனது x மற்றும் y-ஐ இணைத்த ஒரு TestSuit-ஐத் தாங்கியுள்ளது. கடைசி வரியானது அனைத்தையும் உள்ளடக்கிய z-ஐ இயக்கப் பயன்படுகிறது.

இதற்கான output பின்வருமாறு இரண்டு தனித்தனி கோப்புகளில் உள்ள அனைத்து methods-ஐயும் ஒருசேர இயக்கி வெளிப்படுத்தும்.

 

combine

3.7 Report உருவாக்குதல்

மேற்கண்ட (3.6) அதே சோதனை முடிவுகளை ஒரு HTML Report-ஆக மாற்ற விரும்பினால் அதற்கான நிரல் பின்வருமாறு அமையும்.

 

 

இதில் உள்ள x,y,z,r ஆகியவை அனைத்தும் variables ஆகும். மீதி அனைத்தையும் இந்நிலையில் உங்களாலேயே புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
இதை run செய்வதற்கு முன்னர் tungwaiyip.info/software/HTMLTestRunner.html எனும் முகவரிக்கு சென்று HTMLTestRunner.py எனும் கோப்பினை இறக்குமதி செய்து நமது கோப்புகள் சேமிக்கப்பட்டுள்ள அதே Folder-க்குள் இதையும் சேமித்து விடவும். அப்போதுதான் நமது program எந்த தவரும் இல்லாமல் இயங்கும்.

htmlrunner

இதன் output பின்வருமாறு வெளிப்பட்டாலும், நமது கோப்புகள் அனைத்தும் சேமிக்கப்பட்டுள்ள folder-க்குள் நாம் குறிப்பிட்டிருக்கும் பெயரில் ஒரு html report-ஐ உருவாக்கும்.

report1
report3
இதனை திறந்து பார்த்தால் பின்வருமாறு ஒரு report வெளிப்படும்.

 

report-4

%d bloggers like this: