எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 17 – ரூபியில் while மற்றும் until loops

ஒரு நிரல்பகுதியை மீண்டும் மீண்டும் இயக்கச்செய்ய, மடக்கு கட்டளைகள் (loop statements)பயன்படுகிறது. இந்த அத்தியாயத்தில் while மற்றும் until மடக்கு கட்டளையை பயன்பாடுகளில் எப்படி பயன்படுத்து என்பதை காணலாம்.

ரூபி while loop:
ரூபி while ஆனது ஒரு குறிப்பிட்ட expression false ஆகும் வரை அந்த loop செயல்படும்.

while expression do
... ruby code here ...
end

மேலே உள்ளதில், expression என்பது ரூபி expression ஆகும், இது ஒன்று true-வாகவோ அல்லது false ஆகவோ இருக்கும். ruby code here-இதில் செயல்படுத்த வேண்டிய நிரலாகும். முதலில், while திறவுச்சொல்லையடுத்து கொடுக்கப்பட்டுள்ள expression மதிப்பிடப்படும். அதன் மதிப்பு true-ஆக இருந்தால், while-ஐத்தொடர்ந்து கொடுக்கப்பட்ட நிரல்பகுதி செயல்படுத்தப்படும். இந்த நிரல்பகுதி செயல்படுதப்பட்டபின், expression மீண்டும் மதிப்பிடப்படும். அதன் மதிப்பைப்பொருத்து நிரல்பகுதி மீண்டும் செயல்படுத்தப்படும். மதிப்பு false-ஆக இருந்தால், நிரல்பகுதி செயல்படுத்தப்படாது.
உதாரணத்திற்கு,

i = 0
while i < 5 do
   puts i
   i += 1
end

மேலே உள்ள எடுத்துக்காட்டில் i-ன் மதிப்பான 5 விட குறைவாக இருக்கும்வரை,i-ன் மதிப்புகளை அச்சிடும். விடை பின்வருமாறு:

0
1
2
3
4

இதில் do கொடுப்பது கட்டாயமில்லை,

i = 0
while i < 5
   puts i
   i += 1
end

while loops-யை இடைநிறுத்தல்:
சில நேரங்களில் while expression false ஆவதற்கு முன்னதாக while loop-யை இடைநிறுத்தம் செய்ய நேரிடலாம். இதை break if statement-டை கொண்டு செய்யலாம்:

i = 0
while i < 5
   puts i
   i += 1
   break if i == 2
end

மேலே உள்ள loop-யில் i ஆனது 5-க்குப் பதிலாக 2-ஆக இருக்கும்போதே loop-யை விட்டு வெளியேறிவிடும்.

Unless மற்றும் until:
ரூபியின் until கட்டளையை while விட மாறுப்பட்டதாகும். Until expression ஆனது true ஆகும்வரை loop ஆகி கொண்டிருக்கும்.

i = 0
until i == 4
   puts i
   i += 1
end

விடை பின்வருமாறு,

0
1
2
3

Until கட்டளையை பின்வருமாறும் பயன்படுத்தலாம்,

puts i += 1 until i == 5


— தொடரும்
பிரியா – priya.budsp@gmail.com – ஐக்கிய அரபு அமீரகம்

%d bloggers like this: