உங்கள் லினக்ஸ் டெஸ்க்டாப்பில் புதிய ஃபயர்பாக்ஸ் OS முயற்சி செய்து பார்க்க தயாரா?

உங்கள் லினக்ஸ் டெஸ்க்டாப்பில் புதிய ஃபயர்பாக்ஸ் OS முயற்சி செய்து பார்க்க தயாரா? 

‘Boot 2 Gecko’ என்னும் குறியீட்டில் வெளிவந்துள்ள ஃபயர்பாக்ஸ் OS, மோசில்லாவின் முழுமையாய் இணைய அடிப்படையில் இயங்கும் திறந்த மூல மொபைல் இயங்குதளமாக ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது.

 

லினக்சை அடிப்படையாகக் கொண்ட பயர்பாக்ஸ் OS, சில இயங்குதளம் சார்ந்த API கள் தவிர, ஒரு ஸ்மார்ட்போனில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து பயன்பாடுகளையும் ஆதரிக்கும். இதில் ‘திறந்த மூல வலை’ (‘open web’ technologies)

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட HTML5 பயன்பாடுகளும் அடங்கும்.

 

இதைப் பற்றி மேலும் அறிய பின்வரும் வீடியோவைப் பாருங்கள்: youtu.be/PfhmZX8AG0M

ஃபயர்பாக்ஸ் OS தினசரி உருவாக்கங்களும், மேம்படுதல்களும் இப்போது டெஸ்க்டாப்பில் பயன்படுத்திப் பார்க்கும் வகையில் கிடைக்கிறன. அவற்றை நிறுவுவது மிகவும் எளிது.

கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • சமீபத்திய ஃபயர்பாக்ஸ் OS உருவாக்கத்தைப் பதிவிறக்க இங்கே அழுத்தவும்:

ftp.mozilla.org/pub/mozilla.org/b2g/nightly/latest-mozilla central/

  • பதிவிறக்கிய கோப்பை Extract செய்து b2g கோப்புறையைப் பிரித்தெடுக்கவும்.
  • Gaia -ஐ நிறுவி ஒரு புதிய சுயவிவரத்தை உருவாக்க பின்வரும் கட்டளைகளை இயக்கவும்:git clone
    make -C gaia profile
  • இப்போது பயர்பாக்ஸ் OS ஐ இயக்க பின்வரும் கட்டளைகளை இடவும்:/path/to/your/b2gfolder/b2g -profile gaia/profile

    இந்த உருவாக்கங்கள் தற்போது டெவலப்பர்களுக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன..
    பயர்பாக்ஸ் OS இன்னும் சோதனை நிலையிலையே உள்ளது. எனவே பிரச்சனைகளுக்கு இன்னும் முழுமையான தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை.

    சில திரைக்காட்சிகள்:

 

இந்த உருவாக்கங்கள் தற்போது டெவலப்பர்களுக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.. பயர்பாக்ஸ் OS இன்னும் சோதனை நிலையிலையே உள்ளது. எனவே பிரச்சனைகளுக்கு இன்னும் முழுமையான தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை.

மேலும் தகவல்களுக்கு:

மோசில்லா விக்கி

விக்கிபீடியா

புதிய பயர்பாக்ஸ் OS பதிப்பின் செய்முறை விளக்க வீடியோக்கள்:

youtu.be/3Y4bpvB9w0w

 

youtu.be/07TjKAThXh0

 

www.youtu.be/Erd_oEdHc58

 

புதிய பயர்பாக்ஸ் OS பதிப்பினை Samsung Galaxy S II வில் நிறுவுவது பற்றிய செய்முறை விளக்க வீடியோ:

www.youtu.be/GB3cZtCURPo

 

பயர்பாக்ஸ் OS பதிப்பினை Nexus S -இல் பயன்படுத்துவது பற்றிய வீடியோ:

www.youtube.com/watch?v=6p_y3Wq58WU

சமீபத்திய மேம்படுத்தப்பட்ட பதிப்பின் திரைக்காட்சிகள்:

 

இராமச்சந்திரன் ராஜ்காந்த். யாழ்ப்பாணம், ஈழதேசம்(இலங்கை)

 

வணக்கம், விவசாயத்துறையில் பட்டத்தினைப் பெற்று தனியார் விவசாய உள்ளீடுகள் சந்தைப்படுத்தும் நிறுவனத்தில்  விவசாய எந்திரவியல் துறையில் தொழில்நுட்ப விற்பனை ஆலோசகராகப் பணிபுரிகிறேன். தனிப்பட்ட கணினி ஆர்வம் காரணமாக கணினிதுறையில் பங்களிப்பு செய்து வருபவன்.  லினக்னஸ் ஆர்வலன், லினக்சைகற்றுக் கொண்டிருப்பவன். கட்டற்ற  மென்பொருள் மேல் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டவன். கணினியை முழுமையாக தமிழில் பயன்படுத்த வழிசெய்ய முயற்சிப்பவன். அபிவேர்ட், கூகிள், பேஸ்புக், டக்டக்கோ, தமிழ் ஓபின் ஆபிஸ், போன்ற சில மொழிபெயர்ப்புகளில்  தமிழா! குழு மூலமாகவும் தனிப்பட்ட முறையிலும் சிறிதளவு பங்களிப்பு செய்துள்ளேன். மின்னஞ்சல்: raajkaanth@gmail.com வலைப்பதிவு: eezhathamilan.blogspot.com/

%d bloggers like this: