ராஸ்பெர்ரி பை – கையடக்கக் கணிப்பொறி

File:Pre-release Raspberry Pi.jpg

Image : commons.wikimedia.org/wiki/File:Pre-release_Raspberry_Pi.jpg CC-By-SA

ராஸ்பெர்ரி பை என்பது ஒரு மினி கையடக்கக் கணிப்பொறியாகும், இது முக்கியமாக மாணவர்கள் எளிதாக கணினி அறிவியலை கற்றுக் கொள்ளும் பொருட்டு லண்டனில் உள்ள ஒரு நிறுவனம் உருவாக்கியது. விலையும் மலிவாக இருப்பதால் வாங்கி உபயோகிப்பதற்கு எளிதாக இருக்கிறது(2800 ரூபாய்), நாம் சாதாரண கணினிகளில் செய்யக் கூடிய வேலைகளை இதிலும் செய்ய முடிகிறது, இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இக்கணினியின் மூலம் நம்முடைய வீட்டிலிருக்கும் எலக்ரிக்கல் மற்றும் எலக்ரானிக்ஸ் பொருட்களை இயக்கவும் நிறுத்தவும் இயலுகிறது,இதற்கென தனியாக நாற்பது பின்கள் கொடுக்கப் பட்டுள்ளது. இதனை உபயோகித்து(புரோக்ராமிங் செய்து) நாம் நம் வீட்டிலுள்ளவற்றை தானியங்கிகளாக மாற்றிக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக.. நம் வீட்டில் உள்ள தொட்டியில் நீர் காலியாகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம்.. இப்பொழுது அந்த தொட்டியில் உணர்வியை(sensors) பொருத்தி அதை ராஸ்பெர்ரி பை கணினியுடன் இணைத்து தண்ணீர் தொட்டியில் நீரின் அளவை கண்டுபிடித்து குறைவாக இருப்பின் பம்ப் செட் தானாக இயங்க ஆரம்பித்துவிடும்… நீ நிறைந்ததும் தானாக அணைந்துவிடும்… அதற்கேற்ப்ப நாம் ப்ரோக்கிராம் செய்ய வேண்டும்.. மேலும் பல பயண்பாடுகள் இதன் மூலம் இருக்கின்றது… இன்னொரு எடுத்துக்காட்டை பார்ப்போம்…. இப்பொழுது நம் வீட்டை விட்டு வெளியே செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்… பாதி தூரம் சென்றபின் வீட்டிலிருக்கும் மின்விசிறியை அனைக்க மறந்துவிட்டோம் என்பது நினைவில் வருகிறது என்றால்… மீண்டும் வீட்டிற்குச் சென்று மின் விசிறியை அனைக்க வேண்டி இருக்கும்.. ஆனால் நம் ராஸ்பெர்ரி பை கணினியின் கட்டுப் பாட்டிற்குக் கீழ் அந்த மின் விசிறியை கொண்டு வந்துவிட்டோமேயானால்…. திரும்பவும் வீட்டிற்குச் சென்று அதை அணைக்கத் தேவையே இருக்காது…. நமது கைப் பேசி ஒன்றே போதுமானது…. அதில் நிறுவப்பட்டிருக்கும் செயலியின்(app) மூலம் வீட்டிலிருக்கும் மின்விசிறியை அனைக்க இயலும்(ராஸ்பெர்ரி பை கணினி இணையத்துடன் இணைக்கப் பட்டிருக்கும்).  மின் விசிறியை மட்டுமல்ல….. நாம் எதை எல்லாம் ராஸ்பெர்ரி பை கணினியின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோமோ…. அனைத்தையும் நாம் நம் கை பேசியின் மூலம் கட்டுப் படுத்த முடியும்…இதை வீட்டு தானியங்கி அமைப்பு(Home automation system)என்று கூறுவர்.

 

மேலும் ராஸ்பெர்ரி பை கணினியை உபயோகிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள பின் வரும் லிங்கில் எனது காணொளிகளை நீங்கள் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

www.youtube.com/playlist?list=PLtA3Qjk28j6UxX7yqTGkaoA1h_m97n1Gt

  -அபு.
developerabu@gmail.com

1 Comment

  1. ஆகாஷ்

    அருமை சகோ………..

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *