R – அறிமுகம்

R என்றால் என்ன ?

R ஒரு திறமூல, GNU திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் நிரல் மொழி ஆகும்.

இது 1995ஆம் ஆண்டு Martin Maechler மற்றும் Ross and Robert அவர்களால் உருவாக்கப்பட்டது.  R தரவு பகுப்பாய்வு மற்றும் புள்ளிவிவர கணக்கியலுக்கு ஏற்ற மொழியாக பெரிதும் பயன்படுகிறது.

ஏன் R ?

அண்மை கால்ஙகளில் தரவு ஆய்வியல் மற்றும் அறிவியல் சார்ந்த மொழிகள் நிரலாளர்களிடையே ஏற்றம் பெற்று வருகிறது. அவ்வகையில் R நிரல் மொழி பெரு வாரியான நிறுவனங்கள் மற்றும் தரவு சார்ந்த சமுகத்தில் பயன்படுத்தப்படுகிறது.  இதனால் R கற்பது நற்பலனை தரும் ஆகவே இக்கட்டுரை 5 – 6 பகுதிகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

R அடிப்படை அம்சங்கள்:

R’இல் இயற்றிய நிரல்கள் தொகுக்க வேண்டியதில்லை.  ஆகவே பைதான்,  ரூபி மற்றும் ஜாவா ஶ்கிரிப்ட் போல் இயற்றி, கோப்புகளை சேமித்த  கணமே  நிரலின் வெளியீடுகளை (output) முனையத்தில் (unix / linux terminal)  காண முடியும். சுருக்கமாக குறிப்பிட வேண்டுமெனில், R ஒரு கணியி (கால்குலேடர்) போன்று பயன்படுத்த இயலும். R நிரல் மொழி, அதனோடு நிரலாக்க சூழலையும் ஒருங்கே கொண்டுள்ளது. பின்வரும் பகுதியில் R எவ்வாறு பதிவிறக்கம் செய்து நிறுவுவது என்று காணலாம்.

உபுண்டு லினக்ஸ்’இல் R பதிவிறக்கம் மற்றும் நிறுவுதல்: 

படி – 1:

R மென்பொருளை அதன் அதிகாரப்பூர்வ  தளத் தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

sudo echo “deb cran.rstudio.com/bin/linux/ubuntu xenial/” | sudo tee -a /etc/apt/sources.list

படி – 2:

R மென்பொருளை  நிறுவ வேண்டும்.

sudo apt-get update

sudo apt-get install r-base r-base-dev

நிறுவியதை சோதித்தல்:

R நிறுவியதை சோதனை செய்ய லினக்ஶ் முனையத்தில் ‘R’ என்று உள்ளீடுக, அப்பொது கீழ்கண்ட திரைப்படியில் உள்ளது போல் வெளியீடு காண்லாம்.

இப்போது , மேலும் ஒரு சிறிய நிரலை உள்ளீடு செய்து உறுதி செய்து கொள்ளலாம்.

திரைப்படியில் உள்ளது போல் உங்கள் முனையத்திலும் இருந்தால் நீங்கள் வெற்றிகரமாக R கற்கும் முதல் படியினை நிறைவுசெய்துள்ளீர்கள் !!!!!

இதனோடு இப்பகுதி நிறைவடைகிறது அடுத்த பகுதியில் R‘இல் அடிபடைகளை கற்கலாம்.  மேலும் R மொழியோடு வரும் மற்ற கருவிகளையும் காணலாம்.

 

ஆசிரியர்: Prasanna Kumar
மின்னஞ்சல்: prassee.sathian@gmail.com

4 Comments

  1. Udaya

    Arumayana Thagaval..Padhivirku Nandri… Vaazhthukal Prasanna

    Reply
  2. karthickrajalearn

    Thanks for Writing for Us
    Please Don’t Stop
    Weekly Once Please Post
    52 Weeks 1 Year
    You can Complete this Article Very Efficiently Sir

    Can you give your Appointment for Asking Doubts in 5 Minutes through Call or Mail
    But your Answer may be any time in my mail
    I am Waiting for your Reply Sir

    My Mail ID : karthickrajamkr1997@gmail.com

    Reply
    1. prasanna

      yes please
      feel free to ping me in the given mail id

      Reply
      1. karthickrajalearn

        Thanks for your Reply
        If you reply to all you are great Sir

        Reply

Leave a Reply

%d bloggers like this: