எளிய தமிழில் Python – 5

முந்தைய பகுதியின் தொடர்ச்சி….

4.4 list (பட்டியல்):

   list ஆனது square bracket-க்குள் இருந்தால் அதனையே list என்கிறோம்.இவை C-ல் உள்ள Array-களைப் போன்றது. ஒரே list-ல் வெவ்வேறு data types ஆனது இருக்க முடியும்.ஒரு list-ல் store செய்யப்பட்ட மதிப்புகள் slice ஆபரேட்டர் ([ ] மற்றும் [ : ] ஆகியவற்றைப்பயன்படுத்தி அணுகலாம்.

உதாரணம்1

இதில் a என்ற list-ல் எண்களும், b என்ற list-ல் string-களும்,c என்ற list-ல் எண்கள் மற்றும் string-களும் இருக்கின்றன.d ஆனது a,b,c என்ற list-ஐஅனைத்தும் + ஆனது concatenate(ஒன்றுசேர்ப்பதற்கு) உதவுகிறது.d-ல் அனைத்தும் ஒன்று சேர்க்கப் பட்டு இருப்பதை காணலாம்.

மேலேவுள்ள அட்டவணையானது list-ல் store செய்யப்பட்டுள்ள மதிப்பிற்கான இடத்தினைத் தெரிவிக்கின்றது.உதாரணமாக

A=[1,2,3,4,5,6,7,8,9,10]

A எங்கிற list-ல் 1 ஆனது 0 மற்றும் -10 க்கு சமமாகும்.நாம் A எங்கிற list-ல் 1-ஐ காணவேண்டும் என்றால் A[0] அல்லது A[-10] என்றும் குறிப்பிடலாம்.அதேபோல் 5-ஐ காணவேண்டும் என்றால் A[4] அல்லது A[-6] என்றும் கூறலாம்.அதேபோல் 10-ஐ காணவேண்டும் என்றால் A[9] அல்லது A[-1] என்றும் கூறலாம்.

மேலேவுள்ள அட்டவணையானது list-ல் store செய்யப்பட்டுள்ள மதிப்பிற்கான இடத்தினைத் தெரிவிக்கின்றது.

உதாரணமாக

B = [‘p’, ‘r’, ‘o’, ‘g’, ‘r’, ‘a’, ‘m’, ‘m’, ‘i’, ‘n’, ‘g’]

B என்ற list-ல் p ஆனது 0 மற்றும் -11 க்கு சமமாகும்.நாம் B என்ற list-ல் p-ஐ காணவேண்டும் என்றால் A[0] அல்லது A[-11] என்றும் குறிப்பிடலாம்.அதேபோல் a-ஐ காணவேண்டும் என்றால் A[5] அல்லது A[-6] என்றும் கூறலாம்.அதேபோல் n-ஐ காணவேண்டும் என்றால் A[9] அல்லது A[-2] என்றும் குறிப்பிட வேண்டும்.

கீழே a என்ற list ஆனது கொடுக்கப்பட்டுள்ளது.இதில் எத்தனை value என்பதை காண்பதற்கு len() என்கிற function ஆனது பயன்படுத்த படுகிறது.

உதாரணம்2:

a-ல் 0 இடத்தில் என்ன மதிப்பு இருக்கிறது என்பதை காட்டுகின்றது.அதேபோல் -1,5 லும் என்ன மதிப்பு இருக்கிறது என்பதை காட்டுகின்றது. இங்கு : என்பது slicing-க்கு பயன்படுகிற operator ஆகும். a[:5] ஆனது list-ல் 5வது இடத்திற்கு முன் உள்ள அனைத்தையும் காட்டுகிறது. அதேபோல் a[5:] ஆனது list-ல் 5 மற்றும் 5வது இடத்திற்கு பின் உள்ள அனைத்தையும் காட்டுகிறது.

a-ல் -1 இடத்தில் இருப்பது a என்ற list-ல் உள்ள கடைசி character ஆகும். a[-1:] ஆனது list-ல் -1 வது இடத்திற்கு பின் உள்ள அனைத்தையும் display செய்கிறது. -1 க்கு பிறகு எதுவும் இல்லாததால் -1 ஆனது display செய்யபடும்.

a[:-1] ஆனது list-ல் -1 வது இடத்திற்கு முன் உள்ள அனைத்தையும் display செய்கிறது.
a[:] என்றானது a-ல் உள்ள அனைத்தையும் display செய்யும்.
a[2:7] ஆனது 2 வது முதல் 7-க்கு முன் உள்ள அனைத்தையும் காட்டும்.

உதாரணம்3:

இங்கு a என்பது tuple ஆகும்.இதனை list ஆக மாற்றுவதற்கு list(a) என்று குறிப்பிடும் போது ganesan என்பது தனிதனியாக மாற்றப்பட்டு இருப்பதை காணலாம்.

 

உதாரணம்4:

இங்கு a என்பது tuple ஆகும்.இதனை list ஆக மாற்றுவதற்கு list(a) என்று குறிப்பிடும் போது programming என்பது தனிதனியாக மாற்றப்பட்டு list-ல் சேமிக்கப்படுகிறது.

இங்கு l என்கிற object ஆனது list-ல் append(சேர்க்க) படுகிறது.
count ஆனது எந்த object-னை count செய்ய வேண்டும் என்பதை குறிக்கின்றது.
இங்கு g என்கிற objectஆனது list-ல் இருமுறை இருப்பதால் 2 என்று தருகின்றது.
extend என்பது list உடன் மற்றொரு list-ஐ இணைக்க உதவுகிறது.
index என்பது list-ல் object எந்த இடத்தில் இருப்பதை தெரிவிக்கும்.
remove என்பது list-ல் object-னை அழிக்க உதவுகிறது.
reverse என்பது list-ல் உள்ள object அனைத்தையும் தலைகீழாக மாற்ற உதவுகிறது.

4.5 Tuple():

tuple என்பது data type-ன் இன்னொரு படிநிலையாகும்.இது list-ஐ போன்றே செயல்படும் தன்மைக் கொண்டது.tuple ஆனது “(“ மற்றும் “ )“-அதாவது parenthese-குள் இருந்தால் அது tuple ஆகும்.கீழே உள்ள உதாரணமானது tuple-ஐ நன்கு விளக்கும்.

இதில் tuple என்பதில் object காணப்படுகிறது.அதேபோல் tuple2-லும் object  காணப்படுகிறது.இவ்விரண்டு tuple-ம் சேர்ப்பதற்கு (+) பயன்படுகிறது.tuple-ல் உள்ள object-ஐ எடுத்து பார்ப்பதற்கு list-ல் பயன்படுத்தியதுபோல் tuple-ம் பயன்படுத்தி இருப்பதைக் காணலாம்.tuple-ல் உள்ள object-ஐ list ஆக மாற்றுவதற்கு list  function-ஐ பயன்படுத்தலாம்.அதேபோல் {}-க்குள் tuple-ல் உள்ள object கொண்டுவருவதற்கு set function பயன்படுத்தவும்.

அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கீழே உள்ள படமானது நன்கு விளக்கும்.

உதாரணம்2:

இங்கு tuple,tuple2-ல் tuple ஆனது பெறப்படுகிறது.tuple3-ல் tuple மற்றும் tuple2 சேர்க்கப்படுகிறது.பின்பு tuple3 ஆனது dictionary-ஆக மாற்றுவதற்கு set என்ற function பயன்படுத்தபடுகிறது. இவை {}-ள் இருப்பதை காணலாம்.அதேபோல் tuple3 ஆனது list செய்யபடுகிறது.இவை []-ள் objects ஆனது வந்திருப்பதை காணலாம்.

4.6  Dictionary 

Dictionary function என்பது சாதரணமாக பயன்படுத்தப்படும் table-ஐ போன்றதாகும்.இதில் எதாவது ஒன்றான object-ஐ குறிப்பிடும் போது அதற்கு இணையான description தென்படும்.dictonary function ஆனது curly bracket ஆன {}-ள் இருப்பதாகும்.

உதாரணம்1:

Dict என்று dictionary உருவாக்கப்படுகிறது.dict[‘1’] ஆனது dictionary-ல் பயன்படுத்தப்படுகிற keys ஆகும்.”number one” ஆனது dictionary-ல் உள்ள values ஆகும். dict[2] ஆனது dictionary-ல் பயன்படுத்தப்படாததால் traceback error கிடைக்கின்றது.dictonary-ஐ பயன்படுத்தும் போது dictionary-ன் keys-ஐ கொடுத்தே அதற்கு இணையான values-ஐ பெறமுடியும்.employeedict என்கிற பெயரில் dictionary உருவாக்க படுகிறது.

இதில் keys மற்றும் values-ஐ பிரித்து காட்டுவதற்கு ‘:’ பயன்படுத்தபடும். employeedict-ல் உள்ள values அனைத்தையும் காண்பதற்கு employeedict.values() என்றும் keys அனைத்தையும் காண்பதற்கு employeedict.keys()என்றும் குறிப்பிட வேண்டும்.

-தொடரும்.

எழுதியவர்: 

செ.பாலகணேசன் 

ganesanluna@yahoo.in

%d bloggers like this: