Panel-ன் அமைப்புகள்

“Add to Panel” Options : 

 

      Ubuntu வில் நுழைந்த பிறகு முகப்புத்திரையில் மேற்புறம் மற்றும் கீழ்புறம் கொடுக்கப்படிருப்பதை panel என்றழைக்கப்படுகிறது. இதனை  mouse-ஆல் Right click செய்தவுடன்       Add To Panel என்பதை தேர்வு செய்வதால், கீழ்காணும் விருப்பத்தேர்வுகளைப் பெறலாம். தேர்வு செய்த பிறகு விருப்பத்தேர்வானது panel-ல் காட்டப்படும்.

       இதனை நீக்க வலது க்ளிக் செய்து Remove from panel என்பதை தேர்வு செய்யவும்.

 

 

1 )Brightness Applet

     இதனை click செய்து Add என்ற பொத்தானை க்ளிக் செய்தவுடன் panel-லில் star போன்ற option கிடைக்கும். இதனை mouse-னால் கிளிக் செய்து , மேலும் கீழும் நகர்த்தினால், உங்கள் computer ன்  monitor பளிச்சென மாறும்.இதனால் உங்களுக்கு தேவையான monitor வெளிச்சத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

2)Clock

            இதனை click செய்து  Add என்ற பொத்தானை க்ளிக் செய்தவுடன் panel-லில், sat Dec 17, 8:29 என்ற மாதிரியில் கிழமை , மாதம் , தேதி மற்றும் நேரத்தை உங்கள் Panel-லில்  பெறலாம்.

3)CPU Frequency scaling Monitor

            இதன் மூலம் உங்களுடைய processor இன் Frequnecy  வேகத்தை காணலாம். உதாரணம் : 800MHz

4)Disk Monitor

    இதன் மூலம் உங்களுடைய partition கள்,Pendrive கள் மற்றும் External Harddisk காட்டப்படும். இதன் மூலம் சுலபமாக உங்களுடைய partition-கள்,Pendrive-கள் மற்றும் External Harddisk-களை தேர்வு செய்து திறக்க  முடியும்.

 

5)Eyes

   இதனை தேர்வு செய்வதன் மூலம் , இரண்டு கண்கள் போல panel-லில் காட்டப்படும். நீங்கள் mouse curser யை மேலும் கீழும் , வலதும்-இடதும் நகர்த்தும் பொழுது கண்களும் அதற்கு ஏற்றாற்போல நகரும்.

 

6)Fish

    இதன் மூலம் உங்களுடைய panel-லில் அசையும் மீன்  போன்ற படத்தை வரவழைக்கலாம்.

7)Lock Screen

    இதனை click செய்வதன்  மூலம், உங்களுடைய monitor ஆனது lock செய்யப்படும். இதனால் உங்களுடைய அனுமதி இல்லாமல் , உங்கள் கணிணியில் நுழைய முடியாது.

 

8)Log out

    ஒரு user Account-இல் இருந்து வெளியேறி, மற்றொரு  user Account-க்கு  செல்வதிற்கு. இந்த shortcut உபயோகமாகிறது.

9)shut Down

    உங்கள் கணிணியை அணைக்கச்செய்ய இது உபயோகமாகிறது..

10)Search For Files

    உங்கள் கணிணியில் உள்ள , உங்களுக்கு தேவையான file-களை கண்டுபிடிக்க, இந்த தேடல் தேர்வு  உபயோகமாகிறது.

 

11)Trash

    அழிக்கப்பட்ட (அ) நீக்கப்பட்ட file-கள் மற்றும் கோப்புகள் ,இந்த இடத்தில் சேகரிக்கப்படும். இவை சிறிய வாலி வடிவத்தில் Panel-லில் காட்டப்படும்.

 

12)Workspace Switcher

    பொதுவாக நான்கு workspace கள் கீழ் panel-ன் வலது ஓரத்தில் காட்டப்படும். இதன் மூலம் நான்கு விதமான desktop களை உபயோகிக்கலாம்.

 

   நாகராஜன், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் B.E Computer Science இறுதி ஆண்டு படிக்கிறார்.

 

   மின்னஞ்சல்       :   knagarajanbtech@gmail.com

   வலை                   :   knagarajanbtech.blogspot.com/

 

 

%d bloggers like this: