மொசில்லா பொதுக்குரல் – அரைமணி நேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம்….
Read more

லினக்ஸின் உருவாக்கமையத்தின் பொதுவாக அறிந்தகொள்ளாத முப்பது செய்திகள்

இந்த ஆண்டு லினக்ஸின் உருவாக்கமையத்திற்கு 30 வயதை எட்டுகிறது. இது மூன்று தசாப்தங்களின் முன்னோடியான ஒரு திறமூல மென்பொருளாகும், பயனாளர்கள் கட்டணமற்ற மென்பொருளை இயக்கவும், இயங்குகின்ற பயன்பாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொண்டதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. லினக்ஸின் உருவாக்கமையம் இல்லாமல், இன்று நாம் அனுபவிக்கின்ற திறமூல கட்டணமற்ற மென்பொருட்களின் ஆடம்பரங்கள் ஆகிய எவைகளும் நாம் அடைந்திருக்முடியாது…
Read more

எளிய தமிழில் 3D Printing 8. சீரொளி சிட்டங்கட்டல் (laser sintering)

சிட்டங்கட்டல் என்பது துகள்களை முழுவதும் திரவமாக உருக்காமல் வெப்பம் மற்றும் அழுத்தம் கொடுத்து இறுக்குதல் அல்லது கெட்டித்தல் மூலம் ஒரு திடமான பொருளை உருவாக்கும் செயல்முறை. இது துகள்களை ஒன்றாக இணைத்து ஒரு திடமான பாகத்தை உருவாக்குகிறது. சீரொளி தேர்வு சிட்டங்கட்டல் (selective laser sintering – SLS) மற்றும் நேரடி உலோக சீரொளி சிட்டங்கட்டல்…
Read more

ஒவ்வொரு பயனாளரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதினெட்டு அத்தியாவசிய லினக்ஸ் கட்டளைகள்

லினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்திடுகின்ற புதியவர்கள் முதல் அனுபவமிக்கவர்கள்வரை.உள்ள அனைத்து பயனாளர்களுடைய பணியையும் எளிதாக்கு கின்ற 18 லினக்ஸ் கட்டளைகள் பின்வருமாறு. இருண்டதாக காட்சியளிக்கின்ற சாளரத்தில் கட்டளைகளைத் தட்டச்சு செய்வது சிலருக்கு பழமையானதாகத் தோன்றலாம், ஆனால் பல்வேறு கணினி பயனர்களுக்கும், இது ஒரு கணினி செய்யக்கூடிய எந்தப் பணியையும் நிறைவேற்றுவதற்கான மிகவும் திறமை யான, எளிதாக அணுகக்கூடிய,…
Read more

எளிய தமிழில் 3D Printing 7. ஒளித் திண்மமாக்கல் (photo-solidification)

பொருள்சேர் உற்பத்திக்கு பலவிதமான செயல்முறைகள் உள்ளன. பாகங்களை உருவாக்க அடுக்குகள் கட்டும் விதத்திலும், பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களிலும்தான் இவை முக்கியமாக வேறுபடுகின்றன. ஒரு இயந்திரத்தை நாம் தேர்ந்தெடுப்பதில் முக்கிய காரணங்கள் அதன் வேகம், அதன் விலை, பாகத்தை  அச்சிட ஆகும் செலவு, எம்மாதிரிப் பொருட்களில் அச்சிட இயலும் ஆகியவையே. இழையை உருக்கிப் புனைதல் தவிர மற்ற சில…
Read more

எளிய தமிழில் 3D Printing 6. திறந்தமூல சீவுதல் மென்பொருட்கள்

நாம் பாகத்தின் வடிவத்தை ஒரு கணினி வழி வடிவமைப்பு (CAD) மென்பொருளை வைத்து உருவாக்கி விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். நம் மூலப்பொருள் மற்றும் எந்திரத்தின் திறனைப் பொருத்து தடிமன் வைத்து அந்த பாகத்தை படிவம் படிவமாக சீவிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு படிவத்திற்கும் நம் அச்சு எந்திரத்தின் தலை முன்னும் பின்னும் செல்ல வேண்டும்….
Read more

எக்ஸ்எம்எல்( XML) என்றால் என்ன?

XML என சுருக்கமாக அழைக்கப்படுகின்ற விரிவாக்க குறியீட்டு மொழி (extensible markup language) என்பது ஒரு படிநிலை குறியீட்டு மொழியாகும். இதுதரவுகளை வரையறுப் பதற்காக அவற்றை திறக்கின்ற, மூடுகின்ற குறிச்சொற்களைப் பயன் படுத்துகிறது. இது தரவுகளைச் சேமிக்கவும் பரிமாறிகொள்ளவும் பயன் படுகிறது, மேலும் இதனுடைய தீவிர நெகிழ்வுத் தன்மை காரணமாக, இது ஆவணங்கள் முதல் வரைகலை…
Read more

இந்திய அளவிலான விக்கிமூலம் மெய்ப்புப் பார்க்கும் போட்டி – தமிழ் முதலிடம்

இந்திய அளவில் நடைபெற்ற விக்கிமூலம் புத்தகங்கள் மெய்ப்புப் பார்க்கும் போட்டியில் 15869 பக்கங்களை மெய்ப்புப் பார்த்து தமிழ் இரண்டாவது முறையும் முதலிடம் பிடித்தது. விக்கிமூலம் கட்டற்ற இலவச இணைய நூலகமான விக்கிமூலமும் திட்டங்களில் ஒன்று. இத்திட்டம் கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் தொகுப்பாகும். அதாவது நாட்டுடைமையாக்கப்பட்ட / பொதுக்கள உரிமங்களில் (Nationalised / Public…
Read more

எளிய தமிழில் 3D Printing 5. கோப்பு வடிவங்கள்

முப்பரிமாணப் பொருளை அச்சிட, ஒரு 3D அச்சுப்பொறிக்கு பொருளின் எண்ணிம வரைபடம் தேவை. இது வடிவியல், நிறம், அமைப்பு மற்றும் மூலப்பொருட்கள் போன்ற நம் பாகத்தைப் பற்றிய அனைத்து தொடர்புடைய தரவுகளையும் சேமிக்கும் ஒரு கோப்பு. அத்தகைய தரவை வைத்திருக்கக்கூடிய பல கோப்பு வடிவங்கள் உள்ளன.  உங்களிடமுள்ள வடிவமைப்பு மென்பொருட்கள் எந்தவிதமான கோப்பு வகையில் சேமிக்க…
Read more

விண்டோ இயக்கமுறைமைகளில் செயவ்படும் பயன்பாடுகளை பயன்படுத்திகொள்வதற்காக உதவிடும்ReactOS எனும் இயக்கமுறைமை

நாம் அதிகம்நம்பக்கூடிய திறமூல சூழலில் நமக்குப் பிடித்த விண்டோ இயக்கமுறைமை பயன்பாடுகளும் இயக்கிகளையும் செயல்படுவதை கற்பனை செய்து பார்த்திடுக. அதுதான் ReactOS என்பதன் அடிப்படைநோக்கமாகும்! உலகளாவிய சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பது, போல, நம்முடைய சொந்த தனிப்பட்ட திறன்களை மிக உயர்ந்த புதிய நிலைக்கு உயர்த்த இந்த ReactOS ஆனது உதவுகின்றது. குறிமுறைவரிகளையும் விண்டோ இயக்கமுறைமையின்…
Read more