திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 19. வணிக மென்பொருளை திறந்த மூலமாக வெளியிட்டோம்!

நான் ஒரு தனியார் மென்பொருள் விற்பனை மற்றும் ஆலோசனை நிறுவனத்தில் வேலை செய்கிறேன். நிதி நிறுவனங்களுக்கான மென்பொருள் தயாரிப்புகள் செய்வது எங்கள் நிறுவனத்தின் குறிக்கோள். இவற்றில் நிதி நடவடிக்கைகளை செயல்படுத்தும் ஃபின்டிபி (FinTP) செயலியும் ஒன்று. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்களுடைய சாதனைகளையும் அறிவையும் பகிர்ந்து கொள்ள இச்செயலியை ஒரு திறந்த மூல உரிமத்தின் கீழ்…
Read more

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 18. கரடுமுரடான பாதையில் ஒரு கற்றுக்குட்டியின் பயணம்

திறந்த மூலத்துக்கு எவ்வாறு பங்களிப்பது என்று அறிவுரை தேடி இந்தக் கட்டுரைக்கு வந்தீர்களா? இணையத்தில் இந்தக் கதைகள் பல உள்ளன, அல்லவா? சில காலமாக நீங்கள் பங்களிப்புத் தொடங்குவதற்கு முயற்சித்து வருகிறீர்கள். ஆகவே இதைப்பற்றி நீங்கள் நிறையப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படியும் தெளிவு பிறக்கவில்லை என நீங்கள் நினைக்கலாம். எனக்கு அந்த உணர்வு புரிகிறது. நான்…
Read more

Form Validations, Javascript Objects & Animations

11 தகவல்களை சோதித்தல் ஒரு விண்ணப்பப் படிவத்தை நாம் பூர்த்தி செய்துவிட்டு Submit பொத்தானை சொடுக்கினால், உலாவியானது நாம் கொடுத்த விவரங்களை server-க்கு அனுப்புவதற்கு முன்னர், எல்லாம் சரியாக உள்ளதா எனச் சோதிக்கும். ஏதாவது விவரங்களை நாம் கொடுக்கத் தவறியிருந்தாலோ அல்லது தவறுதலாகக் கொடுத்திருந்தாலோ, உலாவியானது ஒரு popup மூலம் அதனை நமக்குத் தெரியப்படுத்தும். சரியான…
Read more

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 17. திட்டத்துக்கு பங்களிப்பாளர்களை ஈர்க்க 5 வழிகள்

கட்டற்ற திறந்த மூல மென்பொருள் திட்டப்பணிகள் ஒரு பிரச்சினையைத் தீர்க்க ஆரம்பிக்கப்படுகின்றன. சிலர் தாங்கள் மிகவும் எதிர்நோக்கும்  பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்பதற்காக அவர்களும் பங்களிக்கத் தொடங்குகிறார்கள். திட்டப் பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு இது பயனுள்ளதாக இருப்பதைக் கண்டுபிடிப்பதால் திட்டம் வளர்கிறது. அந்தப் பகிர்வு நோக்கமும் ஒருமித்த கவனமும் திட்டப்பணியின் சமூகத்திற்கு மற்றவர்களைக் கவர்கிறது. ஆயுட்காலம்…
Read more

தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – ஏப்ரல் 23 – சென்னை

நீங்கள் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கத்தில் பங்கு பெற விரும்புகிறீர்களா? தமிழுக்கு உங்கள் நிரலாக்கத் திறன் மூலம் ஏதேனும் பங்களிக்க ஆர்வமுண்டா? பிற கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களை சந்திக்க வேண்டுமா? இதோ ஒரு வாய்ப்பு. தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா நாள் – ஏப்ரல் 23, 2017, ஞாயிறு நேரம் – காலை 10.00…
Read more

ஐக்கிய நாடுகள் திறந்த மூலக் கருவி போட்டியில் இந்தியர் முதல் பரிசு

ஐ.நா. பொதுச்சபை தீர்மானங்களை பயனர்கள் எளிதாகத் தேடிப் பார்க்கவும் உறுப்பு நாடுகள் வாக்களிக்கும் வகைகளை ஆழமாகப் புரிந்து கொள்ளவும் கூடிய ஒரு திறந்த மூலக் கருவியை உருவாக்கும் உலகளாவிய போட்டியில் ஒரு இந்திய மென்பொருள் பொறியாளர் முதல் பரிசு வென்றுள்ளார். ஒரு தொழில்முனைவரான அப்துல்காதிர் ராஷிக் (Abdulqadir Rashik) உருவாக்கிய ‘உலகளாவிய கொள்கை (Global Policy)’…
Read more

ஆண்ட்ராய்டு செயலி கற்க வேண்டுமா? அற்புதமான திறந்த மூல நிரல்களின் இணைப்புகள் இங்கே

ஆண்ட்ராய்டு செயலி எழுதுவது எப்படியென்று கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் புத்தகங்கள், வலைப்பதிவுகள் மற்றும் மன்றங்களில் கேள்வி பதில்கள் படிக்கலாம். ஆனால் ஒரு செயலியை உங்கள் திறன்பேசியில் ஓட்டிப் பார்த்து உடன் அந்த செயலியின் மூல நிரலையும் படித்துப் பார்ப்பது போன்ற கற்றல் அனுபவம் வேறெதிலும் வராது. இந்தக் கட்டுரையில் ஆண்ட்ராய்டு நிரலாளர்…
Read more

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 16. கல்வியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 16 திறந்த மூலக் கோட்பாடுகள்

பிலடெல்பியாவின் ட்ரெக்சல் (Drexel) பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு (2014) மே 28-30 நடந்த “பேராசிரியர்கள் திறந்த மூல கோடை அனுபவம் (Professors’ Open Source Summer Experience – POSSE)” நிகழ்ச்சியில் ஹெய்டி எல்லிஸ் (Heidi Ellis) பேசினார். திறந்த மூல திட்டங்களில் மாணவர்களை உட்படுத்துவது வியத்தகு கல்வி சார் நன்மைகள் செய்யும்  என்பதை தனது…
Read more

கூகிள் திறந்த மூலமாக வெளியிட்ட குறியாக்கியை வைத்து உங்கள் இணையதளத்தில் படங்களை சுருக்கலாம்

நீங்கள் சமீபத்தில் JPEG படங்களை மேலும் திறம்பட சுருக்குவதற்கான குறியாக்கியை (encoder) கூகிள் கட்டற்ற திறந்த மூலமாக வெளியிட்டதைப் பற்றிய செய்தியைப் படித்திருக்கக் கூடும். அதை உங்கள் இணையதளத்துக்கு பயன்படுத்தினால் சேமிப்பிடம் மற்றும் பட்டையகலத்துக்காகும் (bandwidth) செலவைக் குறைக்கலாம். பயனர்களும் பக்கங்களை விரைவில் பார்க்க இயலும். ஆனால் பயன்படுத்துவது எப்படி? பிரச்சினைகள் ஏதாவது வருமா? உமேஷ்…
Read more

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 15. ஊழியர்கள் திறந்த மூலத்துக்கு பங்களிக்க நிறுவனங்கள் உதவுவது எப்படி

உலகம் முழுவதும் 100,000 க்கும் அதிகமான பங்களிப்பாளர்கள் கொண்ட ட்ரூபல் (Drupal) சமூகத்தில் நான் ஒரு பகுதியாக இருக்கிறேன். திறந்த மூலத்துக்கு பங்களிக்க தங்கள் நிறுவனங்களால் ஊக்குவிக்கப்படும் வளர்ந்து வரும் ஊழியர்கள் குழுவும் இதன் மத்தியில் உள்ளது. இந்தக் காலத்தில், தன்னுடைய தற்குறிப்பில் ஓரிரண்டு (அதற்கு மேலும் கூட) திறந்த மூலம் பற்றிக் குறிப்பிடாத ஒரு…
Read more