Notepad++ ஒருஅறிமுகம்

விண்டோ இயக்கமுறைமையை பயன்படுத்திடும் அனுபவசாலிகள் பலர் நாங்கள் ஏற்கனவே நோட்பேடு எனும் பயன்பாட்டினை பயன்படுத்தி கொண்டுதானஇருக்கின்றோம தற்போது மீண்டும் Notepad++ என்பது எதற்கு என வாதிடுவார்கள் நிற்க பல்வேறு கணினிமொழிகளின் நிரலாளர்கள் புதிய பயன்பாடுகளை உருவாக்குவதற்காக தாறிந்த கணினிமொழிகளில் குறிமுறைவரிகளை எழுதிடும்போது புதிய Notepad++ஆனது அவர்களுடைய கணினிமொழிகளின் மூலக்குறிமுறைவரிகளை திருத்தம் செய்வதை ஆதரிக்கின்றது அதனால் குறிப்பிட்ட கணினிமொழியில் குறிமுறைவரிகளைஎழுதிடும்போது அதற்கான syntax மேம்படுத்தி காண்பித்தல் , அல்லது PHPsyntax மேம்படுத்தி காண்பித்தல் , markup கணினிமொழியை ஆதரித்தல் ல்லியன இடைமுகம் என்பன போன்ற நிரலாளர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்ற பல்வேறு வசதி வாய்ப்பு களுடன் கூடிய.புத்திசாலிதனமான கருவியாக ந்Notepad++ திகழ்கின்றது மேலும்இது .ini எனும் கோப்புகளில் வரைகலை திறனை மேம்படுத்துகின்றது , இவ்வாறான பல்வேறு வசதி வாய்ப்பு களுடன் கூடிய இந்த புதிய Notepad++ஐ பயன்படுத்திய பின்னர் நாம் பிறகு வழக்கமான நோட்பேடிற்குச் செல்வது சாத்தியமில்லை, ஏனென்றால் புதிய Notepad++ தானாகவே எல்லா தரவுகளையும் தெளிவா எண்ணிக்கையிலான வரிசைகளில் ஒழுங்கமைக்கின்றது., இது ஒரே நேரத்தில் பல கோப்புகளில் செயல்படுவதற்கு நம்மை அனுமதிக்கின்றது, மேலும் நாம் திறந்து பணிபுரிந்து கொண்டிருந்த அனைத்து தாவல்களை நினைவில் கொள்கிறது, எனவே நம்முடைய கணினியின் இயக்கத்தை இடைநிறுத்தம் செய்து மறுதொடக்கம் செய்த பிறகு நாம் ஏற்கனவே பணிபுரிந்து விட்டுச்சென்ற இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்து பணிபுரியமுடியும் என்ற வசதியைஇது வழ ங்குகின்றது . இந்த புதிய Notepad++ ஆனது GPL எனும் பொதுஅனுமதியின் அடிப்படையில் கட்டணமில்லாமல் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்துவதற்காக தயாராக கிடைக்கின்றது ஆயினும் இது விண்டோ இயக்கமுறைமை சூழலிலும் செயல்படும் திறன்மிக்கது . சக்திவாய்ந்த பதிப்பு கூறுகளின் அடிப்படையில், இது சி ++ எனும் கணினிமொழியில் எழுதி உருவாக்கப்பட்டுள்ளது முழுமையான Win32 API , STL ஆகியவற்றைப் பயன்படுத்துவதன்வாயிலாக , இது சிறிய நிரல் அளவுடன்மட்டுமே அதிக செயல்பாட்டு வேகத்தை உறுதி செய்கிறது. பயனர் நட்பை இழக்காமல் முடிந்தவரை பல்வேறு நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலம், நோட்பேட் ++ ஆனது உலக கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க முயற்சிக்கின்றது. அதாவது குறைந்த CPU சக்தியைப் பயன்படுத்துவதன்மூலம் கணினிக்கான மின் நுகர்வை மிகவும் குறைவாக பயன்படுத்தி கொள்ளுமாறு செய்கின்றது, இதன் விளைவாக உலகில் பசுமையான சூழல் விளைவை உறுதிபடுத்திடுகின்றது

%d bloggers like this: