உபுண்டுவில் வலையமைப்பின் அலைத்தொகுப்பை செயல் வாரியாகக் கண்காணிக்க ‘NetHogs’

NetHogs ஒரு சிறிய ‘net top’ கருவியாகும். பொதுவாக போக்குவரத்தை நெறிமுறை(protocol) அல்லது உள்பிணையத்தின்(subnet) படி பிரிக்கும் மற்ற கருவிகளைப் போல் அல்லாமல், இது அலைத்தொகுப்பை(bandwidth) செயல் வாரியாகத் தொகுக்கின்றது; இதற்காக எந்தவொரு சிறப்பு கருனிக் கூறும் ஏற்றப்பட வேண்டிய அவசியமில்லை. திடீரென்று வலையமைப்புப் போக்குவரத்து அதிகமானால், NetHogs மூலம் எந்த PID அதற்கு காரணம் என்று கண்டுபிடித்து, அது தேவையில்லாத்தாக இருப்பின் அந்த செயலை நிறுத்தி விடலாம்.
 

உபுண்டு repository-ல் வழக்கமாக இருக்கும் NetHogs-ஐ ‘Software Center’ மூலம் நிறுவிக் கொள்ளலாம் அல்லது பின்வரும் கட்டளையை முனையத்தில் அடிக்கவும்.

sudo apt-get install nethogs

NetHogs-ஐ உபயோகப்படுத்த root சிறப்புரிமை தேவை; eth0 வழக்கநிலையாகும்.

sudo nethogs eth0

pppo இணைப்பில் :-

sudo nethogs ppp0

 

—-

ஆங்கில மூலம் :- ubuntuguide.net/nethogs-monitor-network-bandwidth-per-process-in-ubuntu

இரா.சுப்ரமணி.

மின்னஞ்சல் : subramani95@gmail.com
வலைப்பதிவு : rsubramani.wordpress.com

%d bloggers like this: