தமிழுக்கு தேவையான கட்டற்ற மென்பொருட்களின் பட்டியல்

தமிழுக்கு தேவையான கட்டற்ற மென்பொருட்களின் ஒரு பட்டியல் இது.

முழு விவரங்கள் இங்கே.

tshrinivasan.blogspot.in/2014/06/blog-post.html

இவற்றை உருவாக்க மென்பொருளாளர்களை அழைக்கிறோம்.

 

உங்கள் விருப்பங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

அல்லது tshrinivasan@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

 

நன்றி

 

எழுத்துரு மாற்றம்

25 வகையான தமிழ் எழுத்துருக்களை ஒருங்குறிக்கு(unicode) மாற்றும் நிரல் இங்கே உள்ளது.

இது python ல் எழுதப் பட்டது.
tuxcoder.wordpress.com/2014/08/15/release-txt2unicode-converter-v4-0-velli/
github.com/arulalant/txt2unicode
github.com/arcturusannamalai/open-tamil

 

1.
எழுத்துரு மாற்றம் – இணையப் பயன்பாடு

மேற்கண்ட command line ல் இயங்கும் python நிரலை, இணைய தளத்தில் இயங்கும் web application ஆக எழுத வேண்டும்.

உதாரணங்கள் –

kandupidi.com/converter/
www.suratha.com/reader.htm

 

 

2.
மேற்கண்ட மென்பொருள் Plain Text ஐ ஒருங்குறிக்கு மாற்ற வல்லது. ஆனால். Rich Text ஆன Bold/Italic/other styles போன்றவற்றை மாற்றாது.
Libre Office plugin ஆக எழுதி Rich Text உரையை மாற்ற வேண்டும். அல்லது வேறு தீர்வு தர வேண்டும்.

 

 

3.
13. Font Analyser – எழுத்துருக்களை ஒருங்குறிக்கு மாற்ற, அவற்றின் எழுத்து அட்டவணை வேண்டும்.
எந்த எழுத்து எந்த இடத்தில் உள்ளது என்பதை ஒரு பட்டியலாக அறிவிக்க ஒரு மென்பொருள் வேண்டும்.
தற்போது ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்துதான் அறிய வேண்டியுள்ளது.

உதாரணம்
goinggnu.wordpress.com/2014/06/26/how-to-get-character-map-of-a-ttf-font/

 

 

மின்னூலாக்கம்

4. Blog to Epub

ஒரு வலைத்தள முகவரி தந்தால், அதில் உள்ள கட்டுரைகளைக் காட்டி, தேர்ந்தெடுத்த கட்டுரைகளை, epub ஆகத் தர வேண்டும். படங்களையும் பதிவிறக்கம் செய்து இணைக்க வேண்டும்.

github.com/sathia27/blog2ebook

இது  epub ஆகத் தருகிறது. Ruby on Rails ல் செய்யப் பட்டது. ஆனால் படங்ளை இணைப்பதில்லை.  இதில் படங்களை பதிவிறக்கம் செய்து epub ல் இணைக்கும் செயலை சேர்க்க வேண்டும்.

உதவி இணைப்புகள் –

goinggnu.wordpress.com/2014/05/01/project-idea-blog-to-ebook-converter/

 

 

5. Epub to 6 inch PDF

தரப் பட்ட epub கோப்பை 6 inch PDF ஆக மாற்ற வேண்டும். epub ல் உள்ள Table of Content மூலம் அதில் உள்ள html கோப்புகளின் பட்டியலைப் பெற்று, அவற்றை ஒரே html கோப்பாக மாற்றி, பின் 6 inch PDF கோப்பாக மாற்ற வேண்டும்.

உதவி இணைப்புகள் –
onroads.wordpress.com/2012/11/23/how-to-read-tamil-books-in-kindle-ebook-reader/

goinggnu.wordpress.com/2014/06/24/how-to-convert-all-project-madurai-ebooks-to-6-inch-pdf-for-kindle/

 

 

தமிழ்ப் பெயர்கள்

6. தமிழ்ப் பெயர்களுக்கான செயலி

peyar.in தளத்தில் உள்ள பெயர்களைக் கொண்டு ஒரு Android/iOS செயலி வேண்டும்.
github.com/poogel77/peyar-new
build.phonegap.com/apps/1150459/share
இங்கு phonegap கொண்டு செய்யப் பட்டு வருகிறது.

மெதுவாக இயங்குகிறது. வேகப் படுத்த வேண்டும்.

 

 

தமிழ் கற்பித்தல்

 

7.
HTML5 வடிவில் தமிழ் கற்பிக்கும் மென்பொருள்.
எழுத்துகள், எண்கள், வார்த்தைகள் போன்றவற்றை கற்பிக்கலாம்.

உதாரணம் –
tamilvu.org/courses/primer/bp000001.htm

 

 

8.
தமிழ் கற்பிக்கும் மென்பொருள் – மொபைல் கருவிகளுக்காக

உதாரணம்- play.google.com/store/search?q=learn%20tamil&c=apps

 

 

மொழியியல்

9.
தமிழ் வார்த்தைகளுக்கு இலக்கணக் குறிப்பு சேர்க்கும் மென்பொருள்.

தற்போதைய நிலை
corpus-sathia.rhcloud.com

மூல நிரல் – github.com/sathia27/corpus

இது Ruby On Rails ல் செய்யப்பட்டது.
இதில் தேவையான இலக்கண குறிப்பு பெயர்களை சேர்த்து சோதனை செய்ய வேண்டும்.

 

 

மொழிமாற்றம்

10.
Transifex Mobile Client
Transifex.com மொழிமாற்றம் செய்யப் பயன்படுகிறது.
இதற்கு Mobile client வேண்டும்.

www.iblg.co/?q=article&id=172
மூல நிரல் – github.com/fazakis/transifex_android_app

இது ஒரளவு பயனுள்ளது. ஆனால் ‘untranslated word list’ஐ பெற இயலவில்லை.
எனவே பெரிய திட்டங்களில் பங்களிப்பது கடினமாக உள்ளது.
இந்த ‘untranslated word list’ ஐ தரும் வசதி செய்ய  வேண்டும்.

 

 

 

தட்டச்சு

11.
ibus என்பது லினக்ஸில் எல்லா மொழிகளிலும் தட்டச்சு செய்ய உதவும் கருவி.
TACE வகை எழுத்துரு மற்றும் கருவிகளை ibus ல் சேர்க்க வேண்டும்.

தேவையான விவரங்கள் இங்கு உள்ளன.

www.tamilvu.org/tkbd/index.htm
www.tamilvu.org/tkbd/online_ta.htm

 

 

12.
NHM writer போல தமிழ் எழுத்துக்களை அடிக்க முன்னோட்டம் காட்டும் வசதியை ibus ல் தர வேண்டும்.
lh6.ggpht.com/kmdfaizal/SQXXzjgCvdI/AAAAAAAAAG4/vTxYeaF5Rp8/image_thumb14.png

 

13.

தமிழ் 99 தட்டச்சு கற்க ஒரு வலைத்தளம், பல்வேறு பயிற்சிகளோடு, விளையாட்டு போல உருவாக்கலாம்.

 

 

எழுத்துருக்கள்
14.
புது ஒருங்குறி எழுத்துக்கள் வேண்டும். தமிழில் அழகான ஒருங்குறி எழுத்துகள் அதிகம் இல்லை.
அவற்றை உருவாக்க வேண்டும்.

saranyaselvaraj.wordpress.com/2009/09/29/creating-tamil-fonts/

 

 

15. FreeTamilEbooks.com

மின்னூல் விவரங்களை GoodReads.com  தளத்தில API மூலம் ஏற்ற வேண்டும்.

 

இணைப்புகள் –

 

www.goodreads.com/book/new

github.com/sosedoff/goodreads

www.goodreads.com/api

 

 

16. FreeTamilEbooks.com தளத்துக்கு ஒரு ஆன்டிராய்டு மென்பொருள் செய்ய வேண்டும்.

 

17. காந்தளகம் பதிப்பகம் – தமிழில் வணிக மேலாண்மை மென்பொருள்

 

தமிழில் வணிக மேலாண்மை செய்ய, வரவு, செலவு, இருப்பு, லாப நட்ட கணக்கு, ரசீது தர ஒரு மென்பொருள் வேண்டும்.

புதிதாக எழுதலாம் அல்லது ஏற்கெனவே இருக்கும் கட்டற்ற மென்பொருளை தமிழாக்கம் செய்யலாம்.

 

 

%d bloggers like this: