Liferay Portal எனும் கட்டற்ற பயன்பாடு ஒரு அறிமுகம்

Liferay Portal என்பது உலகின் முன்னனி நிறுவனங்களின் ஒரு திறமூல இணையவாயில் வரைச்சட்டமாகும் இது ஒருங்கிணைந்த இணைய வெளியீடு, உள்ளடக்க மேலாண்மை, , சேவை சார்ந்த கட்டமைப்பு , அனைத்து முக்கிய தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளுடனான இணக்கத்தன்மை ஆகியவற்றை வழங்குகின்றது

இதன்முதன்மையான வசதி வாய்ப்புகள் பின்வருமாறு
இது ஒரு முழுமையான வசதி வாய்ப்புகளுடன் கூடியஇணைய வெளியீடாகும்
இது ஒரு நெகிழ்வான நிறுவன ஒருங்கிணைப்பு கட்டமைப்பினை கொண்டுள்ளது
இது வழக்கமான உரையாடல்பெட்டிக்கு வெளியே உள்ள கருவிகளை கொண்டுள்ளது
இதில் பயனாளர்களின் தனிப்பயனாக்கத்தை செய்து கொள்ளமுடியும்
செயல்களின் அடிப்படையிலான உள்ளடக்க விநியோகமாகவும் விளங்குகின்றது
இது ஒருங்கிணைந்த ஆவணங்களையும் ஊடகங்களையும் கொண்டுள்ளது
இது பயனாளர்களாலேயே இயக்கப்படும் பணிப்பாய்வாக திகழ்கின்றது
இது சுயதணிக்கை , செயல்திறன் கண்காணிப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது
மேலும் இது குழு அடிப்படையிலான தள திருத்தத்தையும் கொண்டுள்ளது
இது மைக்ரோசாஃப்ட் அலுவலகபயன்பாட்டுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றது
இது சமூக வலைப்பின்னலிற்கும் பகுப்பாய்விற்கும் பேருதவியாய் விளங்குகின்றது
இது உயர்வசதிவாய்ப்புகள உள்ளமைவாககொண்டிருக்கின்றது
இது செந்தரநிலைகளின் அடிப்படையில் செயல்படுகின்ற

மிகமுக்கியமாக இது வாடிக்கையாளர்களின் மனதினை வெற்றிகொள்ளுமாறு அவர்களுக்கான, சேவையை ஆற்றுகின்றது.
இது வாடிக்கையாளர் ஈடுபாட்டை ஒன்றிணைப்பதற்கான ஒரு தளமாகவிளங்குகின்றது
இந்த தளத்தால் கையாள முடியாத எதையும் யாராலும் செய்யமுடியாதுஎன்பதே இந்த தளத்தின் அடிப்படை கொள்கையாகும்.இந்த இணையதளத்தில் வளர்ந்து வரும், வணிகத் தேவைகளுக்கு ஏற்றவாறு சேவையாற்ற தயாராக இருக்கின்றது, ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த பணியை மீண்டும் பொறியியலாளர் செய்யத் தேவையில்லாத வகையில் அதைச் செய்துவிடகின்றது.
இணையதளம், கைபேசி கணினியுடன் இணைக்கப்பட்ட சாதனங்களில் டிஜிட்டல் அனுபவங்களை உருவாக்க நிறுவனங்களுக்கு உதவும் மென்பொருளை இந்த லைஃப்ரே உருவாக்குகின்றது.
ஒரு துடிப்பான வணிகத்தை உருவாக்குவதன் மூலமும், தொழில்நுட்பத்தை பயனுள்ளதாக்குவதன் மூலமும், சமூகங்களில் முதலீடு செய்வதன் மூலமும், மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கான முழு திறனை மக்கள் அடைவதை சாத்தியமாக்கு
வதேஎங்களுடைய நோக்கம் என இந்த தளம் உறுதியளிக்கின்றது:

%d bloggers like this: