கேடென்லைவுடன்(Kdenlive) காணொளி தொகுத்தல்(video editing)

இதுவரை எனது விருப்பத்திற்குரிய காணொளி தொகுக்கும் செயலியாக இருந்து வருவது கேடென்லைவ்(Kdenlive) தான். இது மற்றவையை காட்டிலும் மிக மேலோட்டமான கற்றல் வளைவையும், மிக பிரபலமான பல்தட இடைமுகப்பையும் (multi track interface) கொண்டது. எனினும் சில அடிப்படை இயக்கங்களை இது கடுமையானதாக ஆக்கவில்லை.

 

இதன் கிடைப்புத் திறன்(availability) சிறிது சிக்கலானது, உபுண்டு ஸ்டுடியோ 11.10 “ஆனெரிக் ஆசெலோட்”ல் (Ubuntu Studio 11.10 “Oneric Ocelot”) உள்ள கேடென்லைவ்(Kdenlive) நிறுவி செயலற்று இருந்தது வருத்தம் அளிக்கிறது. இதன் நிரல்(program) துவங்கியவுடனே செயலிழந்து MLT மற்றும் SDL தொகுப்புகள் சம்பந்தமான பிழையை தோற்றுவிக்கும். எனினும், டெபியன்(debian) மூலம் நிறுவுதல் நன்றாகவே அமைந்தது.

இதன் இடைமுகப்பின் உருவகம் ஏறதாழ ஓப்பன் ஷாட்(Open Shot) போலவே அமைந்துள்ளது. இவ்விரண்டும் பிளெண்டர்ஸ் வி.எஸ்.இ.(Blender’s VSE) போல தோற்றம் அளிக்கின்றன. இவை அனைத்தும் நமக்கு பல்தட வரி அமைப்பை(multi track strip interface) வழங்குகின்றன. இவற்றில் ஒலி மற்றும் ஒளி தடங்களை இணைக்கலாம்.

 

மேலும் இது open shot-ல் உள்ளதை போல, பல் ஒலி மற்றும் ஒளி தடங்களை ஏற்றி,

 

தேவையான இடங்களில் இழுத்து விட்டு காட்சியை தொகுத்துக் கொள்ளலாம். இதற்கு மேலாக ஒலி மற்றும் ஒளி தடங்களில் நேரத்தை குறைத்து அவற்றிற்கு பல விளைவுகளை செலுத்தலாம் (உச்ச கட்டமாக விளைவுகளை அடுக்கவும் செய்யலாம், இதனால் அவை தங்களுக்குள்ளேயே மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளும்). எனக்கு அதன் விபரம் சரியாக தெரியவில்லை, ஆனால் உட்பொருத்தி(plugin) மூலம் விளைவுகளை சேர்த்துக் கொள்ளலாம் என நினக்கிறேன். இப்படிப்பட்ட வசதி மிகுந்த வரவேற்புக்குரியது.

 

நான் காட்சிகளை உருவாக விழைகிறேன் என்றால், Blender’s VSE அளவிற்கு வசதிகள் Kdenlive எனக்கு வழங்குவதில்லை. ஆனால் தன்னால் இயன்றவற்றை Kdenlive எளிமையாய் செய்கிறது. எனவே இரு பரிமாணம்(2D) அளவிலான இயக்கத் தந்திரங்களுக்கு Kdenlive ஒரு சிறந்த தேர்வு. காணொளி வடிவமைப்பு குறித்த விபரங்கள் எளிமையாகவும், நேரக்குறி

முறைகள்(time code) எந்த வகையில் படிக்கும்படியாகவும் சரிசெய்து கொள்ளலாம்.Kdenlive சாளரம், Blender’s VSE-ன் அடிப்படை தோற்றம் போலவே காட்சி அளிக்கும். ஆனால், நமக்கு தேவையானவற்றை போராடி பெற வேண்டிய அவசியம் இல்லை.

 

இறுதியாக தொகுப்பு பட்டியலில்(editing menu) வரிகள்(strips) எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றியும், ஒலி தடங்களின் தோற்றம்(display of audio track) குறித்தும் பல விபரங்கள் தொகுத்தல் நிகழ்வை மென்மையாக்குகின்றன. Kdenlive மூலம் நல்ல காட்சி ஓட்ட அனுபவம் கிடைப்பது உறுதி.

நான் அனைத்தையும் இன்னும் முயன்று பார்க்கவில்லை, ஆனால் நான் தேடிக் கொண்டிருந்த செயலி Kdenlive ஆக இருக்கலாம்.

www.freesoftwaremagazine.com/articles/video_editing_kdenlive_might_be_sweet_spot

 

நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். கணியம் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை கொடுத்த கணியம் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

வலை பதிவு : jophinepranjal.blogspot.in/

%d bloggers like this: