JPG உருவப்படங்களை விரைவாக ஒரு படவில்லைகாட்சிபோன்று காண உதவிடும் ImageGlassஎனும் கட்டற்ற பயன்பாடு

விண்டோ 10 இயக்கமுறைமை பயன்படுத்திடும் கணினியிந் கோப்பகத்தில் நாம் சேமித்துவைத்துள்ள JPG வடிவமைப்பிலுள்ள உருவப்படங்களை ஒன்றன்பின் ஒன்றாக படவில்லைகாட்சிபோன்ற காணவிரும்புவோர் Image Glass எனும் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு மிகவிரைவாக காணமுடியும் இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக GPL 3.0 எனும்அனுமதியின் அடிப்படையில்வெளியிடப்பட்டுள்ளது இது JPG, GIF, PNG, WEBP, SVG, RAW ஆகிய உருவப்படங்களின் வடிவமைப்புகளை ஆதரிக்கின்றது பயனாளர் விரும்பினால் நாம் விரும்பும் உருவப்படங்களின் வடிமைப்புகளை கூட இந்த பட்டியலில் சேர்த்து கொள்ளமுடியும் இதனை பயன்படுத்தி கொள்வதற்காக கணினியில் உருவப்படங்கள் உள்ள கோப்பகத்திற்குள் சென்று படவில்லை காட்சியாக காணவிரும்பும் உருவப்படங்களை தெரிவுசெய்து கொண்டு ஏதாவதொருஉருவப்படத்தினை முதலில் தெரியுமாறு செய்தபின்இந்த பயன்பாட்டினை செயல்படுத்துக உடன் விரியும் திரையில் Slide Show எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து படவில்லை காட்சிபோன்று நாம் தெரிவுசெய்து உருவப்படங்கள் ஒவ்வொன்றாக திரையில் காட்சியாக விரியும்slow, medium, fast ஆகிய மூன்றுவாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்து இந்த படவில்லை காட்சிதிரையில் காண்பிக்கும்வேகத்தை நாம் விரும்பிய வேகத்தில் கட்டுபடுத்திடுக இது Picasa எனும் பயன்பாட்டின் அனைத்து வசதி வாய்ப்புகளையும் கொண்டுள்ளது இது ஒரு இலகுரகபல்துறை உருவப்படகாட்சியாளராக விளங்குகின்றது உருவப்படவில்லை காட்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை செயல்பாடுகளுடனும் நல்ல குறைந்தபட்ச நவீன பயனர் இடைமுகத்துடனும் நிரம்பிய எளிய பயன்பாடாக இது திகழ்கின்றது மேலும் விவரங்களுக்கு imageglass.org/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க

%d bloggers like this: