தமிழ் 99 தட்டச்சு லினக்ஸில் ஐபஸ் (Ibus) வாயிலாக

தமிழ் 99 தட்டச்சில் எழுத்துக்கள் உயிர் இடதாக மற்றும் மெய் எழுத்துக்கள் வலதாக இருக்கும். கற்றுக் கொள்ள மற்றும் பயன்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும்.

ஐபஸ் என்பது மொழியின் தட்டச்சிடல் முறை. இதில் பல்வேறு முறைகளில் மொழியை எழுதலாம். இதை லினக்ஸ் மற்றும் யுனிக்ஸில் நிறுவலாம். நாம் ஐபஸின் வாயிலாக பல மொழிகளில் எழுதலாம். நாம் வலைதளங்களில் தமிழ் தட்டச்சை பார்த்திரு‍ப்போம். ஆனால் இந்த செயிலி (Application) இயக்கு தளத்தில் இருந்து செயல்படும்.

வலைதளங்களில் உள்ள தட்டச்சு உலாவியில் (Browser) மட்டும் தான். ஐபஸ் இயக்கு தளத்தில் இருந்து செயல்படுவதால் நாம் எந்த செயலில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

டெபியன் (debian) நிறுவ கீழ் உள்ள கட்டளை கொடுக்க

# aptitude install ibus-table-array30 ibus-qt4 ibus-gtk

மற்ற இயக்கு தளமாக இருந்தால் அதற்கான நிறுவும் முறையை பார்க்க ஐபஸ் நிறுவிய பின் கிழ் உள்ள கட்டளை கொடுக்க.

$ ibus-setup

நீங்கள் கொடுத்தவுடன் உங்களால் ஒரு செயலியை பார்க்க முடி‍யும். அந்த செயலியில் உங்களுக்கு தேவையான மொழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கீழ் உள்ள கட்டளைகளை நீங்கள் $HOME/.xsessionrc

இந்த கோப்பில் பதிவு செய்யவும்.

export GTK_IM_MODULE=ibus
export XMODIFIERS=@im=ibus
export QT_IM_MODULE=ibus

கீழ் உள்ள கட்டளைகளை நீங்கள் முனையத்தில் பதிவு செய்யவும். இது உங்கள் கணினியை மறுதுவக்கம் செய்யும் போது தானாக ஐபஸை துவக்கும்.

$ echo “ibus-daemon -d -x -r -n kde” >
$HOME/.kde/Autostart/ibus-daemon-autostart.sh && chmod +x
$HOME/.kde/Autostart/ibus-daemon-autostart.sh

நீங்கள் மறு புகுபதிகைக்கு (re-login) பின் ஐபஸை முடக்கவும் செய்யலாம்.

With Regards,
Gowtham Raam.J
Drop your Mail to : professionalgraam@gmail.com
Give a call by : (+91)-9443284989
Visit My blog : pacesettergraam.wordpress.com

%d bloggers like this: