கூகிள் நிரலாக்கப் போட்டியில் ஹைதராபாத் பள்ளி மாணவர் வெற்றி

2017ஆம் ஆண்டுக்கான கூகிள் நிரலாக்கப் போட்டியில் ஹைதராபாத் பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் மேகந்த் காமகோடி வெற்றி பெற்றார். 78 நாடுகளிலிருந்து சுமார் 3500 மாணவர்கள் இந்தத் திறந்த மூல மென்பொருள் போட்டியில் பங்கேற்றனர். 13 முதல் 17 வயது வரை உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள். இவர்கள் திறந்தமூல திட்டங்களில் கொடுக்கப்பட்ட ஐந்தாறு சிறிய பணிகளைச் செய்து முடிக்க வேண்டும். இவர்களில் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 16 பேர் இந்தியர்கள். ஜூன் மாதத்தில் கலிபோர்னியாவில் இருக்கும் கூகிளின் தலைமை அலுவலகத்திற்கு சென்று மேகந்த் இதற்கான சான்றிதழைப் பெறுவார்.

மற்ற வெற்றி பெற்றவர்கள் பெயர்களையும் அவர்கள் செய்த சிறு பணிகளையும், இந்தப் போட்டிக்கான விதிமுறைகளையும் இங்கே காணலாம். இந்த ஆண்டுக்கான போட்டி செப்டம்பர் மாதம் துவங்கும்.

மூலக்கட்டுரை இங்கே

%d bloggers like this: