எச்.டி.எம்.எல் 5 பட விளக்கம்(3)

சுகந்தி வெங்கடேஷ்

<body></body>என்ற இழை தான் பயனாளிகள் படிக்க , பார்க்க வேண்டிய எல்லா விஷயங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. ஒர் இணையப் பக்கத்தில் கிடைக்கும் தகவல்களை எழுத்துரைகள், படங்கள் காணோளிகள் கேட்பொலிகள் இணையச் சுட்டிகள் என்று பிரிக்கலாம்.இத்துடன் இணைத்துள்ள கணியம் இணையப்பக்கத்தின் <body></body> இழைகளுக்குள் எத்தனை விஷயங்கள் அடங்கி இருக்கின்றன என்று பாருங்கள்.

 

இவற்றை பயனாளிகள் பார்க்கும் போது அவை கீழே உள்ள படங்களில் இருக்கும் ஒர் அழகான இணையத் தளமாகத் தெரிகிறது அஃது எப்படி?

 

ஒவ்வோரு விஷயத்தையும் சொல்வதற்கு ஒவ்வோரு விதமான தனி இழைகள் பயன் படுத்த படுகின்றன.அந்தந்த இழைகள் தன் வேலையை ஒழுங்காகச் செய்கின்றன. இந்த இழைகள் அனைத்தும் ஒர் நெறிமுறையோடு(algoritham) எழுதப்படவேண்டும். ஏன்?.நாம் அச்சுப்பிரதிக்காக ஒர் புத்தகம் எழுதுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். புத்தக்த்தின் அட்டைப் பட த்தை தாண்டி முதல் பக்கத்தில் நூலின் பெயர் , ஆசிரியர் பெயர் பதிப்பகத்தார் விவரம் இருக்கும். பின் பொருளடக்கம் இருக்கும். அதில் வரும் பொருளடக்கம்(out line) அந்தப் புத்தகத்தில் உள்ள விஷயங்களை நமக்குச் சுருக்கமாகத் தெரிவிக்கிறது. அத்தியாயங்கள் என்று வகைப் படுத்த வேண்டும். அதே போல் நாம் இணையப் பக்கமும் அமைய வேண்டும். அதனால் தான் சரியான முறையில் இழைகளைப் புரிந்து கொண்டு பயன் படுத்த பட வேண்டும்.

முதலில் நாம் இணையப் பக்கத்தில் பொருளடக்கம் எழுதுவது என்று தெரிந்து கொள்ள வேண்டும். பொருளடக்கம்(table of contents) அந்தப் புத்தகத்தில் உள்ள விஷயங்களை நமக்கு சுருக்கமாகத் தெரிவிக்கிறது.மனிதனுக்குப் புரியும் வகையில் அச்சுப்பிரதிகள்ளுக்கு எழுதத் தெரிந்த நாம் கணினி என்ற இயந்திரம் நாம் எழுதுவதைச் சரியாகப் புரிந்து கொள்ளும் வகையில் எழுத வேண்டும்.கணினிகள் இணையப் பக்கத்தைச் சரியாகப் படிக்க கற்றுக் கொண்டால் தான் மனிதர்களுக்கு அதை சரியாகக் காட்ட முடியும். இதனால் தான் இணையப் பக்கங்களின் இழைகளைச் சரியாக நெறிமுறைகளைப் பின்பற்றி எழுத வேண்டிய அவசியம். முக்கியமாக எச்.டி.எம்.எல் 5 யில் ஒர் இணையப் பக்கத்தை எழுதும் போது அவற்றின் உருவரை(outline) சரியான படி அமைந்து இருக்க வேண்டும்.அதனால் மூன்று நல்ல விளவுகள் ஏற்படுகின்றன. முதலாவது எல்லாவித உலாவிகளாலும் ஒர் இணையப் பக்கத்தின் சாரத்தைச் சரியான முறையில் பொருளடக்க அட்டவணைப் படுத்த முடியும்.

இரண்டாவது .. உலாவிகள் உள்ளடக்கச் சாரங்கள் எவ்வாறு ஒன்றோடு ஒன்றாக இணைந்து உள்ளது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளூம்.. இதனால்சரியாக எழுதப்பட்டிருகும் இணையப் பக்கத்தை தேடு பொறிகள் மிக எளிதாக கண்டுபிடித்துவிடும், மூன்றாவதாகப் பொருளடக்க அட்டவணையின் நெறிமுறைகளைப் சரியாகப் பயன் படுத்தி எழுதப்படும் இணையப்பக்கம் மாற்றுத் திறனாளிகளும் பார்வையற்றோரும் பயன் படுத்தக் கூடிய ஒர் இணையப் பக்கமாக மாறிவிடுகிறது.அந்த இணையப்பக்கத்தின் பரிமாற்றுத்திறன் மெருகு ஏறுகிறது.

மேலே உள்ள படத்தில் உள்ள கணியம் இணையப் பக்கத்தின் அட்டவணையைப் பாருங்கள். இணையப் பக்கம் சரியாக எழுதப்படவில்லை என்று புரியும். மனிதனால் இணையப் பக்கத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ள முடியும் ஆனால் தேடுபொறிகளாலோ திரை வாசிப்பான்களாலோ சரியாகப் படிக்க முடியாது. எனவே <body></body>இழைகளுக்க்குள் வர வேண்டிய சாரம் என்ன என்ன என்று நாம் சரியாகத் திட்டம் இட வேண்டும்.

அப்படித் திட்டமிட வேண்டும் என்றால் நாம் இணையப் பக்க இழைகளைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்..
முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது <section></section> என்ற இழை எச்.டி.எம்.எல் 5 ல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இழை இணையப்

பக்கங்களின் சாரத்தைப் பகுதி பகுதியாகப் பிரிக்க உதவுகிறது. அவை அத்தியாங்களாய் இருக்கலாம்,

ஒரு புதிய விஷயமாக இருக்கலாம். <section></section> இழைக்கு எச்.டி.எம்.எல்லின் எல்லாப் பண்புகளும்,  ( HTML Global Attributes)நிகழ்வின் பண்புகளையும்   (HTML Event Attributes) சேர்க்கலாம்.கீழே உள்ள படத்தில் <section></section> எவ்வாறு ஒன்றுக்குள் ஒன்று பொருந்தி வருகிறது  என்பதைப் பாருங்கள்.இழைக்குள் மற்ற இழைகளும் உள்ளடங்கி இருப்பதைக் காணலாம்.

கீழே உள்ள பட த்தில் சரியாக எழுதப்பட்ட கணியம் இணையப் பக்கம் எவ்வாறு தேடு பொறிகளால் படிக்கப் படுகிறது என்று பாருங்கள்.

ஓர் இயந்திரத்தையும் மனிதனைப் போல் படிக்க வைக்கும் வேலையை நெறிமுறையோடு எழுதப் பட்ட இணையபக்கம் செய்கிறது. அடுத்ததாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது<article></article> என்ற இழை இதுவும் எச்.டி.எம்.எல் 5 ல் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

%d bloggers like this: