கிட்ஹப் இல் ஒரு திறந்த மூல திட்டத்துக்கு எவ்வாறு பங்களிப்பது என்பதை படிப்படியாக விளக்கும் பயிற்சி

கிட்ஹப் (GitHub) இல் திறந்த மூல திட்டத்துக்கு பங்களிப்பது இழு கோரிக்கை (pull request) மூலம் நடைபெறுகிறது. இழு கோரிக்கை என்பது அடிப்படையில் ஒரு குறுநிரல்தான். இது மேலும் தகவலை உள்ளடக்குகிறது மற்றும் உறுப்பினர்கள் அதை வலைத்தளத்தில் விவாதிக்க வழி செய்கிறது. டேவிட் கப்போலா (Davide Coppola) எவ்வாறு பங்களிப்பது என்பதை படிப்படியாக இந்தப் பயிற்சியில் விளக்குகிறார். 

நீங்கள் பங்களிக்க விரும்பும் திட்டத்தை தேர்வு செய்யவும்

புதிய பங்களிப்பாளர்களை திட்டத்தில் சேர ஊக்குவிக்க சில நேரங்களில் திட்ட பராமரிப்பாளர்கள் எளிதான பணிகளை முன்வைக்கின்றனர். எடுத்துக்காட்டாக “எளிதான திருத்தம் (easy fix)” என்று அடையாளமிட்ட வழு.

பங்களிப்பது எப்படி என்று பாருங்கள்

நீங்கள் திட்டத்துக்கு எப்படி பங்களிக்க வேண்டுமென்று பராமரிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர் என்று விளக்க குறிப்புகள் மற்றும் கோப்புகள் உள்ளனவா என்று பாருங்கள்.

திட்டத்தை கவைத்தல் (forking)

திட்டத்தை கவைத்தல் ஒரு தனிப்பட்ட நகலை உருவாக்குகிறது. இது உங்கள் கிட்ஹப் தன்விவரக்குறிப்பில் தோன்றும்.

கவைத்த திட்டத்தின் நகலி (clone) எடுங்கள்

திட்டத்தை நகலி எடுத்தால் உங்கள் கணினியில் ஒரு அடைவை உருவாக்கும். இது திட்டம் மற்றும் அதைக் கண்காணிக்கும் கிட் (git) பதிப்பு கட்டுப்பாடு பயன்படுத்தும் எல்லாக் கோப்புகளையும் கொண்டுள்ளது.

கிளை ஒன்றை உருவாக்கவும்

உங்கள் அம்சம் அல்லது பிழைத்திருத்தத்தில் பணி தொடங்குவதற்கு முன், உங்களுடைய எல்லா வேலைகளையும் செய்ய உங்கள் கணினியில் ஒரு கிளை உருவாக்க வேண்டும்.

உங்கள் பங்களிப்பை தயார் செய்யுங்கள்

அடுத்து குறிப்பிட்ட ஒரே ஒரு அம்சம் அல்லது பிழைத்திருத்தத்தில் மட்டுமே கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது.

ஒரு இழு கோரிக்கையை அனுப்புங்கள்

வேலையை முடித்து நன்றாக சோதித்துப் பார்த்தபின் கிட்ஹப் இல் உங்கள் கவைத்த களஞ்சியத்தை இழு கோரிக்கையாக அனுப்புங்கள்.

%d bloggers like this: