தமிழ் உரை-ஒலி மாற்றி – கட்டற்ற மென்பொருள் – IITM – SSN கல்லூரி – நிறுவுதல்

IITM மற்றும் SSN பொறியியல் கல்லூரி இணைந்து தமிழுக்கு ஒரு சிறந்த உரை
ஒலி மாற்றியை கட்டற்ற மென்பொருளாக, மூல நிரலுடன், வெளியிட்டுள்ளன.
www.iitm.ac.in/donlab/tts/voices.php

அந்நிரலை இன்று வெற்றிகரமாக உபுண்டு கணினியில் நிறுவினேன்.

அதன் சோதனை ஓட்டத்தை இங்கே கேட்கலாம் –
soundcloud.com/shrinivasan/tamil-tts-demo

நிறுவுதலுக்கான விரிவான விளக்கம் இங்கே –
goinggnu.wordpress.com/2017/09/20/how-to-compile-tamil-tts-engine-from-source/

ஒரே கட்டளையில் எளிதாக நிறுவ, ஒரு நிரல் எழுதினேன். அது இங்கே
github.com/tshrinivasan/tamil-tts-install

தற்போதைக்கு ஒரு பத்திக்கு மட்டுமே உரையை ஒலியாக மாற்றுகிறது. விரைவில்
பல பத்திகளை படிக்க வைக்க முயல்வேன்.

பிறகு, விக்கிப்பீடியா முதல் மின்னூல்கள் வரை அனைத்தையும் கேட்க இயலும்.

தமிழர்களின் பன்னெடுங்காலக் கனவை நனவாக்கி, கட்டற்ற மென்பொருளாக
வெளியிட்ட,  IITM மற்றும் SSN பொறியியல் கல்லூரிக் குழுவினர்
அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.

%d bloggers like this: