gretl எனும் பயன்பாடு ஒருஅறிமுகம்

gretl என சுருக்கமாக அழைக்கப்படும் குனு பின்னடைவு, பொருளாதார அளவியல் கால-தொடர்களின் நூலகம் (Gnu Regression, Econometrics and Time-series Library)என்பது சி நிரலாக்க மொழியில் எழுதப்பட்ட பொருளாதார அளவீட்டு பகுப்பாய்விற்கான ஒரு குறுக்கு-தள பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு ஆகும். இது இலவசமென்பொருள் அறக்கட்டளையால் வெளியிடப்பட்ட தொரு இலவச, திற மூல பயன்பாட்டு மென்பொருளாகும் . இது குனு பொது மக்களின்பொது உரிமத்தின் (GPL) அனுமதி விதிமுறைகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ளதால் நாம் அதை மறுபகிர்வு செய்யலாம் அல்லது நமக்குத்தேவையானவாறு மாற்றி பயன்படுத்தலாம்.

இதனுடைய வசதிவாய்ப்புகள் பின்வருமாறு

இது எளிதான உள்ளுணர்வு இடைமுகம் கொண்டது , least squares , அதிகபட்ச வாய்ப்பு, GMM; ஒற்றை சமன்பாடும் அமைவு முறைகளும் என்பன போன்ற பல்வேறு வகையான மதிப்பீட்டாளர்களை கொண்டது. ARIMA, பலவகையான ஒரே மாதிரியான வரைபட வகை மாதிரிகள், VAR களும் VECM களும் (கட்டமைப்பு VAR கள் உட்பட), அலகு-மூலங்களும் நாணய ஒருங்கிணைப்பு சோதனைகளும் , Kalman வடிகட்டி போன்ற கால வரிசை முறைகளின் கணக்கீட்டினை கொண்டது . logit, probit, tobit, மாதிரி தேர்வு, இடைவெளி பின்னடைவு, எண்ணிக்கையும் கால தரவுகளுக்கான மாதிரிகளும் போன்ற வரையறுக்கப்பட்ட சார்பு மாறிகளை கொண்டது ,கருவி மாறிகள் உள்ளிட்ட, probit GMM- அடிப்படையிலான இயக்கநேர பலக மாதிரிகள் குழு-தரவு மதிப்பீட்டாளர்கள் ஆகிய கணக்கீடுகளை கொண்டது இதில்வெளியீட்டு மாதிரிகள் LaTeX கோப்புகளாக, அட்டவணை அல்லது சமன்பாடு வடிவத்தில் இருக்கும் .இது பரந்த அளவிலான நிரலாக்க கருவிகளையும் கணித செயலிகளுடனும் கூடிய ஒருங்கிணைந்த சக்திவாய்ந்த ஸ்கிரிப்டிங் மொழி (ஹான்ஸ்ல் என அழைக்கப்படுகிறது) ஆகும், இது நல்ல தரமான Gnuplot எனும் வரைகபடங்களுக்கான வரைகலை பயனாளர் இடைமுகம்(GUI) கட்டுப்படுத்தியை கொண்டுள்ளது.

இதனுடைய தரவுகளையும் முடிவுகளையும் GNU R, GNU Octave, Python, Julia, Ox , Stataஆகியவைகளுடன் எளிதாக பரிமாறிக்கொள்ளும் வசதிகளை கொண்டது . MPI வழியாக இணையாக செயல்படுத்தல் செய்கின்றது .இதுகலப்பு நேர-தொடர் அதிர்வெண்களுக்கான ஆதரவு (MIDAS) அளிக்கின்றது. LIBSVM வழியாக இயந்திர கற்றலுக்கான ஆதரவினை அளிக்கின்றது இதனுடைய முக்கிய செயல்பாட்டைத் தவிர, பல துணை நிரல்களும் ஏராளமான பங்களிப்பு செயல்பாடு தொகுப்புகளுடனும் கிடைக்கின்றன. .

இது சொந்த எக்ஸ்எம்எல் தரவுக் கோப்புகள்; காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட மதிப்புகள்; எக்செல், குனுமெரிக் , திறந்த ஆவண பணித்தாள்; Stata .dta
கோப்புகள்; SPSS .sav கோப்புகள்; Eviews பணிக்கோப்புகள்; JMulTi தரவு கோப்புகள்; சொந்த வடிவமைப்பு பைனரி தரவுத்தளங்கள் (கலப்பு
தரவு அதிர்வெண்கள் , தொடர் நீளங்களை அனுமதிக்கிறது), RATS 4 தரவுத்தளங்கள் ஆகிய தரவுவடிவங்களை இதுஆதரிக்கின்றது.

%d bloggers like this: