க்னு/லினக்ஸ் நிறுவல் விழா 2013 (GNU/Linux Install Fest 2013)

சென்னையை மையமாய்க் கொண்ட இந்திய க்னு/லினக்ஸ் (ILUGC) குழுவின் முனைப்பால், கணிணி பயனாளர்களுக்கு க்னு/லினக்ஸ் இயங்குதளங்களை முயற்சித்துப் பார்க்க சிறப்பானதொரு வாய்ப்பினை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

இந் நிகழ்வு 2013 ஆகஸ்டு மாதம் முழுதும் நடைபெற உள்ளது. (August 1 – 31 , 2013).

க்னு/லினக்ஸ் இயங்குதளங்களை உங்கள் வீட்டுக் கணிணிகளில் முயற்சிக்க இந்த நிறுவல் விழாவினை நடத்துகிறோம்.  எங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள  GNU/Linux Users Group Chennai www.ilugc.in பக்கம் செல்லுங்கள்

நீங்கள் ஏற்கனவே க்னு/லினக்ஸ் பயன்படுத்தினாலோ, பலர் க்னு/லினக்ஸ் பயன்படுத்த வேண்டும் என்ற ஆவல் உள்ளவராகவோ இருந்தால்.. தயக்கம் வேண்டாம்.. வாங்க… பதிவு செய்து  bit.ly/gnulinux-installfest சங்கத்தில் இணையுங்கள்!!

விழா நோக்கம்:

க்னு/லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவ உதவுவதன் மூலம், மக்களிடையே க்னு/லினக்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அவர்களின் க்னு/லினக்ஸ் பற்றிய மனக்கலக்கத்தை நீக்குதல்.

நீங்கள் ஏன் முயற்சிக்க வேண்டும்?
க்னு/லினக்ஸ் நிறுவி முயற்சிக்க அருமையான ஐந்து காரணங்கள்:
1. சுதந்திரம்
2. நச்சு நிரல் (Virus, Malware & Spyware) பற்றிய கவலை இல்லை
3. விலையில்லா இயங்குதளம்
4. சமூகம், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு அருமையான குழுக்களின் ஆதரவுடன் ஏதேனும் நன்மை செய்தல்
5. உங்களுக்கு மிகவும் பிடித்த பகிர்ந்தளிப்புடன் விளையாடலாம்.
இதற்கு மேலும் காரணங்கள் வேண்டுமா?? இதைப் பாருங்க! www.whylinuxisbetter.net/

‘இப்ப பயன்படுத்தும் விண்டோஸை (Windows) விட முடியாது!! ஆனாலும், க்னு/லினக்ஸ் முயற்சிக்க விரும்புகிறேன்’ என்கிறீர்களா? கவலையை விடுங்க!! நம்ம நண்பர்கள் அதைப் பார்த்துக்குவாங்க!!

உங்களுக்கு க்னு/லினக்ஸ் நிறுவ உதவுவதற்காக நன்கு அனுபவமுள்ள தன்னார்வல நண்பர்கள் காத்துக் கொண்டிருக்கிறனர். ‘நிறுவல் விழா ஆர்வலர்கள்’  ilugc.in/content/install-fest-2013-volunteers  பக்கம் சென்றால், அவர்களின் விவரம் கிடைக்கும். உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நண்பரை அணுகி நீங்களும் லினக்ஸ் பயன்படுத்துங்கள்.

க்னு/லினக்ஸ் நிறுவுங்க…. கொண்டாடுங்க!!

தொடர்பிற்கு:
சிவகார்த்திகேயன் <seesiva AT gmail DOT com>
ஸ்ரீனிவாசன் <tshrinivasan AT gmail DOT com>

%d bloggers like this: