Flowblade – லினக்ஸ் இயங்குதளங்களுக்கான நேரிலா ஒளிதோற்றப் பதிப்பான்

Flowblade என்பது லினக்ஸ் இயங்குதளங்களுக்கான அதிவிரைவு, நேரிலா, பல்தட ஒளிதோற்றப் பதிப்பான் ஆகும். இதனைக் கொண்டு நாம் ஒலி, ஒளிக் கூறுகளை எளிதில் திருத்தி அமைக்கலாம். இந்தப் பயன்பாட்டு மென்பொருள் தொகுப்புக் காட்சிகளைப் படமாக்கவும், படங்களைத் தொகுக்கவும், ஒலி நாடாக்களைத் தெளிவுப்படுத்தவும் பயன்படுகிறது.

 

Flowblade படக் கருத்தியல் (film based paradigm ) முறையைப் பின்பற்றுவதால் ( ஓர் ஒளித் தொகுப்புக்கு பின் மற்றொன்றை வைப்பதைப் போன்ற அமைப்பு), இது முன்னர் நீங்கள் பயன்படுத்திய OpenShot மற்றும் Kdenlive ஆகியவற்றை விட நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும்.

 

என் கருத்தின் படி, இது ஒரு சிறந்த மென்பொருள் என்றே சொல்லுவேன். இது அதிவிரைவாகச் செயல்படுவது மட்டுல்லாமல், அதிக வினைத்திறனும் கொண்டு வியக்கவைக்கும் படி இருக்கிறது (அல்லது) இதன் அதிவிரைவான செயல்பாடும், வினைத்திறனும் வியக்கவைக்கும் படி இருக்கிறன. இது விரைவில் உபுண்டு மற்றும் டெபியன் களஞ்சியங்களில் சேர்க்கப்படலாம்.

 

சில சிறப்பம்சங்கள்

 

  • இடையில் சேர்த்தல் மற்றும் கத்திரித்தல் : இரண்டு வகையான மாற்றுதல், இரண்டு வகையான கத்திரித்தல் மற்றும் நான்கு வகையான சேர்த்தல் ஆகியவற்றை நீங்கள் Flowblade இல் செய்யலாம்.

  • இது மட்டுமன்றி, timeline-இல் ஒளி, ஒலி நாடாக்களை இழுத்து வந்து அமர்த்தலாம் (drag n drop ).

  • ஒளிக் கூறுகளை நீங்கள் பெரிதாக்கலாம், சிறிதாக்கலாம், மாற்றியமைக்கலாம், கலவை செய்யலாம். வேண்டுமானால், அசைவூட்டம் கூட கொடுக்கலாம்.

  • ஒரு படத்தை எவ்வாறு வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம். அதன் நிறத்தை மாற்றலாம், திரிபு செய்யலாம், கலங்கலாக மாற்றலாம்.

  • ஒலி நாடாக்களை எதிரொலிக்கச் செய்யலாம், நிறுத்தி வைக்கலாம். அதனைத் தனித் தனியாகப் பிரித்து ஒலி மாற்றம் கூட செய்யலாம்.

Flowblade பொதுவாகப் பயன்படுத்தப்படும் அனைத்து ஒலி, ஒளி மற்றும் படக் கோப்பு வடிவங்களையும் ஏற்று கொள்ளும். JPG, PNG மற்றும் SVG முதலிய படங்களும்,. mp4 , h264 , Theora , mpeg2 போன்ற ஒளி வடிவங்களும், mp3 , ac3 போன்ற ஒலி வடிவங்களும் ஏற்றுக்கொள்ள படும்.

Flowblade பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் – code.google.com/p/flowblade/downloads/list

ஸ்ரீராம் இளங்கோ

காரைக்குடியில் பிறந்து, தமிழுடன் வளர்ந்து, சிதம்பரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 19 வயது பொறியியல் மாணவன். எனக்கு மொழிகள் மேல் அலாதி பிரியம் உண்டு. ஆங்கிலத்தை நான் சுவையான மொழியாக கருதினாலும் எனக்கு பேச சொல்லி கொடுத்த தமிழை ஒரு போதும் மறந்தது இல்லை. இணையத்தில் என் தாய்மொழி இரண்டவது பிறப்பை சந்தித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு துரும்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி துணிகிறேன்.

எனது வலைத்தளம் – www.sriramilango.co.nr

மின்னஞ்சல்: sriram.04144@gmail.com

%d bloggers like this: