சுதந்திர மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் – வித்தியாசம்

“கட்டற்ற மென்பொருள் கருத்தியல் பற்றிய ஒரு கலந்துரையாடல்” என்ற தலைப்பில் “ப்ரீ சாப்ட்வேர் பௌண்டேஷன் தமிழ்நாடு”வின் மின்னாடல் குழுவில் இருந்து ஒரு இழையின் மொழி பெயர்ப்பு.
அன்புள்ள நண்பர்களே,
உங்களுக்கு முன்பே, கட்டற்ற/சுதந்திர மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றிய வித்தியாசம் தெரிந்திருக்கலாம், இதை பற்றி நான் எளிமையாக ஏன் இந்த வித்தியாசம் மிக முக்கியம் என்று என்னுடைய கருத்துகளை பகிர்ந்துகொள்கிறேன்.
அடிப்படையில் கட்டற்ற/சுதந்திர மென்பொருள் [ Free Software ] தன் வழியில் வரும் அனைத்து மென்பொருளும் கட்டற்று இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது, ஆனால் திறந்த மூல மென்பொருள் [Open Source Software ] தன் வழி வரும் மென்பொருள் கட்டுபடுத்துத்தபடுவதை அனுமதிக்கிறது.
இதனால் என்ன?

திறந்த மூல மென்பொருள் அதன் வழி வரும் மென்பொருள் பகிர்வை நிறுத்தும் சாத்தியத்தை உருவாக்குகிறது. இது திறந்த மூல மென்பொருள் கருத்தியல் அனுமதிப்பதால் நிகழ்வதாகும். இதே கட்டற்ற மென்பொருள் கருத்தியலை கொண்டு உருவாக்க பட்ட உரிமத்தின் படி, அதன் வழி வரும் மென்பொருளின் பகிர்வை எந்த வகையிலும் நிறுத்தமுடியாது.
திறந்த மூல மென்பொருள் மூலம், ஒரு சமூகத்தால் உருவாக்கபட்ட ஒரு திட்டத்தை கட்டுப்படுத்தி, வர்த்தக நோக்குடன் அந்த திட்டத்தின் பலன்களை சமுகத்திற்கு சரியாக சென்றடையாமல் செய்ய இயலும்.  திறந்த மூல மென்பொருளின் கருத்தியல் இந்த செயலை அனுமதிக்கிறது. இது சுதந்திர அறிவு பரிமாற்றத்தை கட்டுப்படுத்தும் செயலாக உருமாறுகின்றது.
இங்கே குறிப்பிட வேண்டியது என்னவென்றால், ஒருவரால் கட்டற்ற மென்பொருள் மூலம் பணம் பெற முடியும் அதே சமயம் மக்கள் மற்றும் சமூகத்துக்கு சொந்தமான சுதந்திர அறிவு பரிமாற்றமும் தடையின்றி நடைபெறும்.

உங்கள் எல்லோருக்கும் கட்டற்ற மென்பொருள் இயக்கம், இருகின்றது என்ற காரணம் தெரிந்திருக்கும். அது சுதந்திர அறிவு பரிமாற்றத்தை கட்டுபடுத்தும் தனியுரிமை மென்பொருளுக்கு ஒரு மாற்றாக உள்ளது. ஆனால் மேலே கூறப்பட்ட விளக்கங்களை பார்க்கும்போது, திறந்த மூல மென்பொருள் பின் நாட்களில் தனியுரிம மென்பொருளின் புதிய உருவாக மாற வாய்ப்புள்ளதாக உணர்கிறேன்.

 

இப்போதைக்கு தனியுரிமை மென்பொருள் அளவுக்கு திறந்த நிலை மென்பொருள் தீமை விளைவிக்கக்கூடியது இல்லை. ஆனால் வருங்காலத்தில் தனியுரிமை மென்பொருட்கள் தன் முக்கியத்துவத்தை இழக்கும்போது, திறந்த மூல தொழில்நுட்பம், சுதந்திர  அறிவு பகிர்விற்கு பெரும் இடையுறாக இருக்கும். அதனால் தான் திறந்த மூல மென்பொருளை “வருங்கலத்தின் தனியுரிம மென்பொருள்” என்று குறிப்பிடுகிறேன்.

சமுகத்தில் எதெல்லாம் அறிவின் இயற்கையான பரவலை தடுக்கிறதோ அது சமுதாயத்திற்கு தீமையனதாக மாறுகின்றது. மாணவராக, ஆசிரியராக, பணியாளராக மற்றும் சீரமைப்பாளராக தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாம், இந்த விஷயத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுப்பது நம் கடமையாகும்; அந்த நிலைப்பாடு மக்களின் பக்கம், சமுதாயத்தின் பக்கம் மற்றும் சுதந்திர அறிவு பரிமாற்றத்தின் பக்கம் இருக்கவேண்டும்.

இந்த சூழலில், நாம் மற்றொரு சொல்லான கட்டற்ற மற்றும் திறந்த நிலை மென்பொருள்(FOSS) பற்றி ஆலோசிப்போம்.
பலர் FOSS என்னும் சொல்லை ஒரு சமரசமாக பயன்படுத்துகிறார்கள். இதை பயன்படுத்துவதன் மூலம் இருதரப்பையும் திருப்திபடுத்த நினைக்கின்றனர். ஆனால், கட்டற்ற மென்பொருள் மற்றும் திறந்தநிலை மென்பொருள் அடிப்படையில் வேறுபட்ட பொருள் கொண்டது. இரண்டையும் ஒன்றாக சேர்ப்பது என்பது அர்த்தமற்ற ஒன்று. சமுதாயத்தை வழிநடத்தும் ஒவ்வொரு சீரமைபாளரும்,  தாங்கள் உபயோகிக்கும் வார்த்தைகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டும் என்பது அவர்களின் கடமை, ஏனெனில் அவைகளே அந்த சமுதாயத்திற்கு வழிகாட்டும்  வரையறையாகின்றன. நாம் FOSS என்னும் சொல்லை பயன்படுத்துவதனால், மக்களை குழப்பிக்கொண்டிருக்கிறோம். இது அவர்களை தவறாக கட்டற்ற மென்பொருள் மற்றும் திறந்தநிலை மென்பொருள் ஆகிய இரண்டும் ஒன்று என எண்ண வைக்கிறது.
ஆகையால் கட்டற்ற மென்பொருள் மட்டுமே, அறிவு சமுகத்தை சார்ந்தது என்ற நிலைப்பாட்டை நினைவில்கொள்வோம்.

 

மொழி பெயர்ப்பு: அருண் பிரகாஷ், செயற்குழு உறுப்பினர், ப்ரீ சாப்ட்வேர் பௌண்டேஷன் தமிழ்நாடு
மூலம்: fsftn.org/pipermail/mailinglist_fsftn.org/2012-May/001276.html
இதை போன்ற கலந்துரயாடல்களில் பங்குபெற “ப்ரீ சாப்ட்வேர் பௌண்டேஷன் தமிழ்நாடு”வின் மின்னாடல் குழுவில் இணையவும்.
www.fsftn.org

சொல் களஞ்சியம் :
கட்டற்ற/சுதந்திர மென்பொருள் : Free Software
கருத்தியல் : Ideology
ப்ரீ சாப்ட்வேர் பௌண்டேஷன் தமிழ்நாடு : Free Software Foundation, Tamil Nadu
மின்னாடல் குழு: Mailing List
இழை: Thread
திறந்த மூல மென்பொருள் : Open Source Software
வழியில் வரும்: Derivative
தனியுரிம மென்பொருள் : Proprietary software

 

%d bloggers like this: