எளிய தமிழில் Computer Vision 7. கட்டற்ற திறந்தமூல பைதான் மென்பொருட்கள்

படங்களை வைத்து எந்த வேலை செய்ய வேண்டுமென்றாலும் நாம் எண் சார்ந்த செயல்பாடுகள், அதிலும் குறிப்பாக அணி (array), தளவணி (matrix) சார்ந்த செயல்பாடுகள் வெகுவாகச் செய்யவேண்டியிருக்கும் என்று முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இதற்கு நமக்கு அணி மற்றும் தளவணிகளைக் கையாளும் நிரலகங்கள் தேவை.

பைதான் நிரல் மொழியில் வேலை செய்யும்போது நாம் பகுப்பாய்வு செய்யவேண்டிய படத்தை ஸ்கிமேஜ் (Skimage) பயன்படுத்தி ஏற்றலாம், நம்-பை (Numpy) பயன்படுத்தி செயல்படுத்தலாம் மற்றும் மேட்பிளாட்லிப் (Matplotlib) பயன்படுத்திக் காட்டலாம். இவற்றைப் பற்றி விவரமாகப் பார்ப்போம்.

நம்-பை (Numpy)

நம்-பை பயன்படுத்தி இடஞ்சார்ந்த வடிகட்டுதல் (spatial filtering or masking)

நம்-பை பயன்படுத்தி இடஞ்சார்ந்த வடிகட்டுதல் (spatial filtering or masking)

நம்-பை என்பது பைதான் மொழியில் எண் சார்ந்த செயல்பாடுகளுக்கு மிகவும் உகந்த நிரலகமாகும். படம் என்பது அடிப்படையில் படவலகுகளைத் தரவாகக் கொண்ட நம்-பை அணிதான். எனவே, துண்டாக வெட்டுதல் (slicing), வடிகட்டுதல் (masking) மற்றும் அட்டவணைப்படுத்தல் (indexing) போன்ற அடிப்படை நம்-பை செயல்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு படத்தின் படவலகு மதிப்புகளை நம் தேவைக்குத் தக்கபடி மாற்ற இயலும்.

சை-பை (Scipy)

இது அனைத்து இயற்கணித செயல்பாடுகளையும் கொண்டுள்ளது. மேலும் பலபரிமாண நம்-பை அணிகளில் வேலைசெய்யும் செயல்பாடுகளையும் வழங்குகிறது. 

ஸ்கிமேஜ் (Skimage or scikit Image)

இது பைதான் எண் மற்றும் அறிவியல் நிரலகங்களான நம்-பை மற்றும் சை-பை உடன் ஒன்றிணைந்து செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. பகுதிப் பிரிப்பு (segmentation), வடிவியல் மாற்றங்கள் (geometric transformations), வண்ண வகைகளைக் கையாளுதல் (color space manipulation), பகுப்பாய்வு (analysis), வடிகட்டுதல், உருவவியல் (morphology), அம்சம் கண்டறிதல் (feature detection) மற்றும் பலவற்றிற்கான வழிமுறைகள் இதில் அடங்கும்.

இமேஜ்மேஜிக் (ImageMagick)

இந்த மென்பொருள் முக்கியமாக படங்களைக் கையாள பல கட்டளை-வரி இடைமுகப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக இது 4:3 படங்களை சிதைக்காமல் 16:9 படங்களாக அளவுறு மாற்றம் செய்ய முடியும்.

பில்லோ (Pillow or Python Imaging Library – PIL)

  • வடிகட்டுதல் (masking) மற்றும் ஒளிபுகுதன்மையைக் கையாளுதல் (transparency handling)
  • மங்கலாக்குதல் (blurring), உருவ வரம்பு கண்டறிதல் (contour detection), மென்மையாக்குதல் (smoothing) மற்றும் விளிம்பு கண்டறிதல் (edge finding) போன்ற பட வடிகட்டுதல். படத்தை மேம்படுத்துதல், தெளிவாக்குதல் (sharpening), ஒளிர்வு, மாறுபாடு, வண்ணம் போன்றவற்றை சரிசெய்தல். 
  • படங்களின்மேல் உரைகளை எழுதுதல் போன்ற மற்றும் பல. 

மேட்பிளாட்லிப் (Matplotlib)

வரைபடங்கள், கோடுகள் மற்றும் வளைவுகளை வரைதல் போன்ற வேலைகளுக்கு மேட்பிளாட்லிப் ஒரு நல்ல வரைகலை நிரலகமாகும்.

நன்றி

  1. Using Numpy to mask an image – Stackoverflow

இத்தொடரில் அடுத்த கட்டுரை: ஓபன்சிவி (OpenCV) மென்பொருள் 

ஓபன்சிவி (OpenCV). ஓபன்சிவி பைதான் (OpenCV Python). வரைகலை செயலக இடைமுகம் (GPU interface). ஆன்டிராய்டு திறன்பேசியில் ஓபன்சிவி (OpenCV on Android).

ashokramach@gmail.com

%d bloggers like this: