Tamil

எளிய தமிழில் IoT 15. தரக் கட்டுப்பாடும் தர உறுதியும்

சந்தையில் போட்டிபோட்டு விற்பனை செய்வதற்கு நிறுவனங்கள் உத்தரவாதம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு பாகம் தரக்குறைவாக இருந்து உடைந்து விட்டால் இலவசமாக மாற்றிக் கொடுக்க (warranty claims) வேண்டிவரும். மேலும், தொழிற்சாலையிலேயே பாகங்கள் தரக்கட்டுப்பாட்டில் நிராகரிக்கப்பட்டால் (rejection) அல்லது மறுசெயற்பாட்டுக்கு (rework) அனுப்ப வேண்டி வந்தால் வீண் செலவுதானே. இம்மாதிரி நிராகரிப்புகள், மறுசெயல்பாடுகள் மற்றும் உத்தரவாத காலத்தில்…
Read more

எளிய தமிழில் IoT 14. சோதனைகள் செய்யத் திறந்த வன்பொருட்கள்

நாம் முழுத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன் குறைந்த செலவில் கருத்துருவை நிரூபிக்க (proof-of-concept) முடிந்தால் நல்லது. இதற்கு வன்பொருட்கள் குறைந்த விலையில் இருக்க வேண்டும். மேலும் மற்றவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வு காண்கிறார்கள் என்று தெரிந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மன்றங்களில் நாம் கேள்வி கேட்டால் பதில் கிடைக்கவும் வாய்ப்புள்ளது….
Read more

எளிய தமிழில் IoT 11. நோட்-ரெட் – விதிகள் அமைத்தல் மற்றும் மானிப்பெட்டி

நோட்-ரெட் (Node-Red) விதிகள் அமைத்தல் பொருட்களின் இணையத்தின் அடிப்படை செயல்பாடுகளை நாம் விதிகளின் மூலம் தான் இயக்கப் போகிறோம். எடுத்துக்காட்டாக, வெப்ப உணரி ஒரு அளவுக்கு மேல் காட்டினால் நாம் சூடேற்றியை அணைக்க ஒரு விதியை அமைக்கலாம். இம்மாதிரி பல எளிய மற்றும் சிக்கலான விதிமுறைகளை நாம் அமைக்க வேண்டியிருக்கும். நோட்-ரெட் இல் படத்தில் கண்டவாறு…
Read more

எளிய தமிழில் IoT 10. வரைபடக் கட்டுப்படுத்தி – திறந்த மூல நோட்-ரெட்

IoT செயற்பாட்டுமேடை (platform) அல்லது கட்டுப்படுத்தி (controller) IoT செயற்பாட்டுமேடை அல்லது கட்டுப்படுத்தி என்பது சாதனங்களை மேலாண்மை செய்யவும் மற்றும் தரவுகளைத் திரட்டி, சேமித்து வைத்து, பகுப்பாய்வு செய்து மானிப்பெட்டியில் வரைபடங்களாகப் பார்க்கவும் வழி செய்யும் மென்பொருள். சந்தையில் பல IoT செயற்பாட்டுமேடைகள் உள்ளன, அவற்றின் செயல்பாடு மிகப்பெரிய அளவில் வேறுபடுகிறது. எல்லா IoT செயற்பாட்டுமேடைகளும்…
Read more

எளிய தமிழில் IoT 9. IoT யை இணையத்துடன் இணைப்பது உசிதமல்ல

சாதனங்கள் விற்பனையாளர்களும், மேகக் கணிமை நிறுவனங்களும் IoT தரவை நேரடியாக இணையத்துக்கு அனுப்ப ஊக்குவிக்கின்றனர். அறிக்கைகளையும், கட்ட வரைபடங்களையும் உங்கள் உலாவிகளிலும், திறன்பேசிகளிலும் உடன் பார்க்க வசதியாக இருக்கும் என்றும் ஆசை காட்டுகிறார்கள். ஆனால், பொருட்களின் இணைய சாதனங்கள் கிஞ்சித்தும் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் மிகப்பெரிய தாக்குதல்கள் பல ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. பாதுகாப்புக்கான அடிப்படை நடவடிக்கைகளை…
Read more

கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை – ஆவணப்படம்

‘கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை’ என்ற இந்த ஆவணப் படத்தை அதன் இயக்குனர் வெ.பி. வினோத் குமார் அவர்கள் யாவரும் எங்கும் இலவசமாகப் பகிரும் வகையில் Creative Commons Attribution license உரிமையில் வெளியிட்டுள்ளார். அவருக்கும், இதற்கான முன்னெடுப்புகளைச் செய்த நண்பர் அன்வர் அவர்களுக்கும் பல்லாயிரம் நன்றிகள். காண்க – github.com/KaniyamFoundation/CreativeCommonsAnnouncements/issues/39

எளிய தமிழில் IoT 8. ஸிக்பீ, ஸிவேவ் சாதனங்களை MQTT யுடன் இணைத்தல்

நம்பத்தகுந்த இணைப்புகள் இல்லாத இடங்களில் MQTT யின் தகவல் வெளியிடு (Publish) –  சந்தா சேர் (Subscribe) என்ற கருத்தியலைப் (paradigm) பயன்படுத்துவது உசிதம் என்று முன்னர் பார்த்தோம். ஸிக்பீ மற்றும் ஸிவேவ் சாதனங்கள் சந்தையில் பரவலாகக் கிடைப்பதால் இவற்றை MQTT யுடன் பயன்படுத்த முடிந்தால் நல்லது. ஆகவே நாம் ஸிக்பீ மற்றும் ஸிவேவ் நுகர்வி…
Read more

எளிய தமிழில் IoT 7. திறந்த மூல MQTT நுகர்விகளும் (Clients) வழங்கிகளும் (Servers)

திறந்த மூல மென்பொருட்களை நல்ல தரத்தில் தயார் செய்து, மேம்படுத்தி, தொடர்ந்து பராமரித்து வருவதில் லினக்ஸ், அபாச்சி, மோசில்லா (ஃபயர்ஃபாக்ஸ்), டாகுமெண்ட் (லிபர்ஆபீஸ்) போன்ற சில அறக்கட்டளைகள் முன்னணியில் உள்ளன. இவற்றில் எக்லிப்ஸ் அறக்கட்டளையும் (Eclipse Foundation) முக்கிய பங்கு வகிக்கின்றது. உணரிகளிலும் இயக்கிகளிலும் நாம் MQTT நுகர்வி மென்பொருளை நிறுவவேண்டும். இந்த நுகர்வி மூலம்…
Read more

எளிய தமிழில் IoT 6. தகவல் தரவு வரைமுறைகள் (Messaging data protocols)

அனுப்பும் தகவல் மிகச் சுருக்கமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அதன் சாராம்சத்தைப் புரிந்து கொள்வதில் எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது. இதற்கு அனுப்புநருக்கும் பெறுநருக்கும் இடையில் ஒரு உடன்பாடு தேவை. இதையே தகவல் தரவு வரைமுறை என்று சொல்கிறோம். கீழ்க்கண்ட வரைமுறைகளைப் பல நிறுவனங்கள் முன்வைத்தார்கள்: வளங்கள் குறைந்த பயன்பாட்டு வரைமுறை (Constrained Application…
Read more

எளிய தமிழில் IoT 5. குறைசக்தி (Low power) கம்பியில்லாத் தொடர்பு

கம்பியில்லாத் தொடர்பு (wireless communication) அமைக்க வைஃபை (WiFi), ஸிக்பீ (ZigBee), ஸிவேவ் (Z-Wave), லோரா (LoRa), புளூடூத் (Bluetooth), குறைசக்தி ப்ளூடூத் (Bluetooth Low Energy) போன்ற பல தொழில்நுட்பங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தொலை தூரம், குறை தூரம், உள்ளரங்கு, வெளிப்புறம் போன்ற வெவ்வேறு IoT தேவைகளுக்குப் பொருத்தமானவை. நமக்கு மின்கலனை சிக்கனமாகப் பயன்படுத்த…
Read more