Python

பைத்தான் ரிஜெக்ஸ் – 6 – வார்த்தை, வாக்கிய எண்ணிக்கை

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது, ஒரு வரியில் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றன என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது, ஒரு பத்தியில் எத்தனை வாக்கியங்கள் இருக்கின்றன ஆகியனவற்றைத் தான்! ரிஜெக்சுக்குப் போவதற்கு முன்பு, சில அடிப்படை கருத்துகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்” – இந்த வாக்கியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதில்…
Read more

பைத்தான் ரிஜெக்ஸ் 5 – கடவுச்சொல்லைக் கண்டுபிடிப்பது எப்படி?

கடவுச்சொல் எழுதுவதில் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளங்களில் கொடுத்திருப்பார்கள். சிலர் எட்டெழுத்துகளாவது குறைந்தது இருக்க வேண்டும் என்பார்கள். சிலர், கட்டாயம் எண்கள் கலந்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். சிலர், பெரிய எழுத்தும் சின்ன எழுத்தும் கலந்திருக்க வேண்டும் என்பார்கள். சிலர் மேலே சொன்ன எல்லாமே இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். இவற்றிற்குரிய பைத்தான் நிரல் எழுதுவது எப்படி?…
Read more

பைத்தான் ரிஜெக்ஸ் – 4 – தேதியை உறுதிப்படுத்துவது எப்படி?

இதற்கு முன்பு, தொலைபேசி எண்கள், அலைபேசி எண்கள் ஆகியவற்றை எப்படிச் சோதிப்பது என்று பார்த்துவிட்டோம். இப்போது நம் முன்னால் உள்ள கேள்வி – ஒரு தேதி – சரியான தேதி என்று தான் பைத்தான் ரிஜெக்ஸ் மூலம் எப்படி உறுதிப்படுத்துவது என்பதைத் தான்!  தேதியை எப்படி எழுதுவோம் – பொதுவாக நாள்/மாதம்/ஆண்டு என்பதை, dd/mm/yyyy எனும்…
Read more

பைத்தான் ரிஜெக்ஸ் 3 – ஒன்றுக்கு மேற்பட்ட அலைபேசி எண்களை எப்படிச் சோதிப்பது?

முந்தைய பதிவில் தொலைபேசி எண் இருக்கிறதா என்பதைப் பார்த்தோம். அதைப் பார்க்கும் போது நண்பர் ஒருவர், 91 என்று நாட்டுக் குறியீட்டுக்குப் பதிலாகச் சில நேரங்களில் நாம் சுழி(0) கொடுப்போமே! அதை உங்கள் நிரல் கையாளுமா? என்று கேட்டிருந்தார். சிலர் 91 என நாட்டுக்குறியீடு கொடுப்பார்கள். சிலர், சுழி(0) கொடுப்பார்கள். ரிஜெக்சில் இதை எப்படிக் கையாள்வது?…
Read more

பைத்தான் – ரிஜெக்ஸ் – 2 – தொலைபேசி எண்களை எப்படிச் சோதிப்பது?

முந்தைய பதிவில் அலைபேசி எண்கள் பார்த்தோம் அல்லவா! இப்போது நாம் ரிஜெக்ஸ் முறையில் தொலைபேசி எண்களைச் சோதிப்பது எப்படி என்று பார்ப்போமா! முதலில் சில தொலைபேசி எண்களை எழுதுவோம். கீழ் உள்ள எண்களைப் பாருங்கள். 9144-22590000 – சென்னை எண் 91462-2521234 – திருநெல்வேலி எண் 9140-23456789 – ஐதராபாத் எண் 914562-212121 – சிவகாசி…
Read more

பைத்தான் – ரிஜெக்ஸ்(Regex) – 1

பைத்தானில் ரிஜெக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாதே என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கான சரியான பதிவு தான் இது.  பைத்தான் ரிஜெக்ஸ் பார்ப்பதற்கு முன்னர், ஓர் எண், அலைபேசி எண்ணா எனக் கண்டுபிடிக்க, பைத்தானில் நிரலைப்பார்த்து விடுவோமே! def isPhoneNumber(text): if len(text) != 10: return False for i in range(0, 9):…
Read more

ஓப்பன்-தமிழ் வெளியீடு – வரிசை எண் 0.97

ஒப்பன்-தமிழ் வரிசை எண் v0.97 வணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே, இன்று ஓப்பன்-தமிழ் நிரல் தொகுப்பு வரிசை எண் 0.97 வெளியீடு அறிவிக்கிறோம். இதில் புதியன, சென்ற 2019-நவம்பர் மாதம் கழித்து வந்த மேம்பாடுகளாகியன, கீழ்வருமாறு.இதனை பெற $ pip install –upgrade open-tamil==0.97 என்று கட்டளை கொடுக்கலாம். 1 புதிய மேம்பாடுகள்: மாத்திரை கணித்தல்…
Read more

பைத்தான் : திட்டப்பணி வழிகாட்டு – இலவச இயங்கலை நிகழ்ச்சி

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் பயிலகம் – நியூஸ் 18 இணைந்து பைத்தான் வகுப்புகளை இயங்கலையில் எடுத்து யூடியூபில் பதிவேற்றியிருப்பது உங்களுக்குத் தெரிந்தது தான்! அந்த வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பைத்தான் திட்டப்பணி வழிகாட்டு நிகழ்ச்சிகள் நாளை முதல் இரு வாரங்களுக்குத் தொடங்குகின்றன. பயிலகம் பயிற்றுநருடன் கணியம் சீனிவாசன், கலீல் ஆகியோரும் வழிகாட்டிகளாக இணைந்து…
Read more

பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறை

பயிலகமும் நியூஸ் 18 தமிழ்நாடும் இணைந்து தமிழில் பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறையை நடத்தவிருக்கின்றன.  வகுப்புகள் வரும் மே 6ஆம் நாளில் வகுப்புகள் தொடங்குகின்றன.  தினமும் ஒரு மணிநேரமாக (காலை 7.30 இல் இருந்து 8.30) , ஒரு மாதம் இந்த வகுப்புகள் நடக்கவிருக்கின்றன.  வகுப்புகளின் பதிவுகள் – யூடியூப் தளத்தில் பயிலகம்…
Read more