Information Technology

OpenRAN என்றால் என்ன

தற்போது உலகெங்கிலும் உள்ள தன்னிச்சையான(arbitrary ) கணினிகளுடன் இணைக்கும் திறன்கொண்ட திறன்பேசியை( smartphone) சொந்தமாக வைத்திருப்பவர்களும் பயன்படுத்து பவர்களும் கண்டிப்பாக இந்த வானொலிமூலம் அணுகுதலிற்கான வலைபின்னல்களின் (RAN) பயனாளராவார்கள். நம்முடைய கைபேசி தொடர்பு வழங்குநரால் இந்த RAN வழங்கப்படுகிறது, மேலும் இது நம்முடைய திறன் பேசிக்கும் தகவல் தொடர்பு வழங்குநருக்கும் இடையிலான கம்பியில்லா இணைப்புகளைக் கையாளுகிறது….
Read more

சேவையகமற்ற கணினிக்கு மாற வேண்டுமா (மேககணினி தொழில்நுட்பம்)?

அடிப்படையில், சேவையகமற்ற கணினி என்பது மேககணினியை செயல்படுத்திடு கின்ற ஒரு மாதிரி-கணினி யாகும், அங்கு மேககணினி வழங்குநரால் கணினியின் வளங்கள் தேவைக்கேற்ப ஒதுக்கப்படுகின்றன, இது வாடிக்கையாளர்களின் சார்பாக சேவையகங்களையும் கவனித்துக்கொள்கிறது. எனவே, பயன்பாட்டிற்கு ஏற்றவாறு பின்புலத்தில் சேவைகளை வழங்குகின்ற வழிமுறையாகவும் இதனைக் குறிப்பிட லாம். இதன் நன்மை என்னவென்றால், சேவைகளைப் வழங்குகின்ற நிறுவனங்களானவை பயனாளர்கள் பயன்படுத்தி…
Read more

நேரடி ஒளிபரப்பின்(Live Streaming) பயன்கள்

தற்போது இணையத்தின் துனையுடன் கல்வி,பணிமேம்பாடு, பொருட்களை கொள்முதல்செய்தல், பொழுதுபோக்கு தகவல் தொடர்பு, உறவினர்களுடனும் நண்பர்களுடனும் தொடர்புகொள்ளுதல் என்பன போன்ற வரம்பற்ற வசதிவாய்ப்புகளை பெறுகின்றஅளவிற்கு நம்முடைய வாழ்க்கைவசதி மிக மேம்பட்டுவருகின்றது அதிலும் நாம் என்ன செய்யவேண்டுமென நினைக்கின்றோமோ அதனை எந்தநேரத்திலும் எந்தவிடத்திலிருந்தும் இணையத்தின் வாயிலாக செயற்படுத்தி பயன்பெறமுடியும் என்ற அளவிற்கு வளர்ந்துவிட்டோம். அவ்வாறன தற்போதைய தொழில்நுட்பவளர்ச்சியினால் உயர்ந்துள்ள…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 28. மொழித் தொழில்நுட்பத்தில் வளங்கள் மிகுந்த மொழியாகத் தமிழை உயர்த்துவோம்

இயல் மொழியியலில் அண்மைய தொழில்நுட்பக் கலை பற்றிய ஆய்வு, தொகுதி 13-14 இலிருந்து கீழ்க்கண்ட மேற்கோள் எடுக்கப்பட்டது. “மொழித் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் பெறக்கூடிய நன்மைகள் இவை. கணினிகளின் பயன்மை (usability) அதிகரிக்கிறது. மேலும் கணினி பயன்பாட்டில் பாமர மக்கள் தன்மேம்பாடு பெறவும் (empowering) வழிவகுக்கிறது.” தமிழின் கடந்த முதன்மைத்துவத்தை மீண்டும் பெற முயல்வோம் 1805…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 27. உணர்வு பகுப்பாய்வும் சமூக ஊடகங்களும்

உணர்வு பகுப்பாய்வு (sentiment analysis) அல்லது கருத்து சுரங்க வேலை (opinion mining) என்பது ஒரு பேச்சாளரின் அல்லது எழுத்தாளரின் மனோபாவத்தைத் தீர்மானிப்பது. ஒரு தலைப்பைப் பற்றியோ அல்லது ஒரு ஆவணத்தை ஒட்டுமொத்தமாகவோ ‘நேர்மறை (positive)’ அல்லது ‘எதிர்மறை (negative)’ என்று கணிக்கிறோம். இம்மாதிரி நேரெதிரான இரண்டு தன்மைகள் இருந்தால் அவற்றை முனைவு (polarity) என்று…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 26. சொற்பிழைத் திருத்தி

தமிழுக்குச் சொல்திருத்தியே தேவையில்லை என்றொரு கருத்து ஆங்கிலத்தில் உச்சரிப்பை வைத்து எழுத்துக்கோர்வை சொல்ல முடியாது. ஆகவே எழுத்துப்பிழைகள் நிகழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. தமிழிலோ எப்படி உச்சரிப்போ அப்படியே எழுதுகிறோம் (Phonetic language). ஆகவே தமிழுக்குச் சொல்திருத்தியே தேவையில்லை என்றொரு கருத்து நிலவுகிறது.   ஆனால் மயங்கொலி என்று சொல்லப்படும் ல-ள-ழ, ண-ந-ன, ர-ற ஆகியவற்றில் எது…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 25. தமிழ் – ஆங்கிலம் இயந்திர மொழிபெயர்ப்பு

இயந்திர மொழிபெயர்ப்புக்கு மூன்று வகையான அணுகல்கள் உள்ளன. இவை விதி சார்ந்த இயந்திர மொழிபெயர்ப்பு (Rule-Based Machine Translation – RBMT), புள்ளிவிவர இயந்திர மொழிபெயர்ப்பு (Statistical Machine Translation – SMT) மற்றும் கலப்பு (Hybrid) இயந்திர மொழிபெயர்ப்பு. விதி சார்ந்த இயந்திர மொழிபெயர்ப்பு விதி சார்ந்த இயந்திர மொழிபெயர்ப்பில் இந்த இரண்டு வகைகள்…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 24. இயல்மொழி ஆய்வு கருவித் தொடரி

இயல்மொழி ஆய்வில் எந்தவொரு வேலையை நிறைவேற்றவும் பல பணிகளை ஒன்றன்பின் ஒன்றாகச் செயல்படுத்த வேண்டும். எந்தவொரு சிறிய வேலைக்குக் கூட பெரும்பாலும் கீழ்க்கண்ட பணிகள் இன்றியமையாதவை: வாக்கியங்களைப் பிரித்தல் சொற்களைப் (நிறுத்தற் குறிகளையும் சேர்த்து) பிரித்தல் சொல்வகைக் குறியீடு செய்தல் அடிச்சொல்லையோ, தண்டுச்சொல்லையோ பிரித்தெடுத்தல் இதன் பின்னர், தேவையைப் பொருத்து, சார்புநிலைப் பிரிப்பியை வைத்து கிளைப்பட…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 23. சார்புநிலை பிரிப்பி, சுட்டுப்பெயர் தீர்வு, தலைப்பு பிரித்தெடுத்தல்

சார்புநிலை பிரிப்பி இயல்மொழியைப் புரிந்து கொள்வது கடினமானது!  “I saw a girl with a telescope” என்ற வாக்கியத்தைப் பாருங்கள். தொலைநோக்கி வைத்திருந்த பெண்ணை நீங்கள் பார்த்தீர்களா அல்லது நீங்கள் தொலைநோக்கி மூலம் பார்த்தீர்களா? இது ஆங்கில எடுத்துக்காட்டு. எனினும் தமிழிலும் இதே பிரச்சினை உள்ளது. “ஜெயலலிதாவைத் திருப்திப்படுத்தும் ஆர்வத்தில் சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள்…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 22. அடிச்சொல், தண்டுச்சொல் மற்றும் சொற்பகுப்பாய்வு

பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை முன்னிப் புணர்ப்ப முடியும் எப்பதங்களும் நன்னூல். பதவியல் – 133 (13 ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல்) சொற்பகுப்பியல் (morphology) சொற்கள் எப்படி சிறிய அலகுகளால் உருவாக்கப்படுகின்றன என்ற சொல் கட்டமைப்பு ஆய்வை சொற்பகுப்பியல் அல்லது உருபனியல் என்று சொல்கிறோம்….
Read more