முத்து

லினக்ஸ் மின்ட் அடிப்படை -நச்னு நாலு கட்டளைகள்

லினக்ஸ் மின்ட் பயன்படுத்தத் தொடங்கிய தொடக்க நாட்களில் கணினி பற்றிய தகவல்கள்(OS, Processor, RAM ஆகியன பற்றி) எப்படி, எங்கே பார்ப்பது எனத் தேடிக் கொண்டிருந்தேன். அவற்றின் சுருக்கம் தான் இங்கே! சின்னச் சின்ன சில கட்டளைகளைத் தெரிந்து கொண்டாலே போதுமானது! பல செய்திகளைத் தெரிந்து கொள்ள முடியும். டெர்மினலைத் திறந்து கொள்ளுங்கள். கட்டளை #1:…
Read more

இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி வகுப்பு – வேலை இழந்து திரும்பி வரும் அயலகத் தமிழர்களுக்கு முன்னுரிமை

கொரோனா தொற்றுக் காலத்தில் தொடர்ந்த ஊரடங்கு காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.  இந்த நேரத்தில் சவுதி, மலேசியா முதலிய நாடுகளில் குறைந்த கூலிக்கு வேலைக்குப் போன பட்டப்படிப்பு முடிக்காத பல தமிழர்கள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள் என்னும் செய்தி தொடர்ந்து செய்தித்தாள்களில் வந்த வண்ணம் இருக்கின்றன.  தாயகம்…
Read more

Dark Pattern – ஓர் அறிமுகம்

முதலில் Dark Pattern என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். நாம் எல்லோருமே இணையத்தில் பல தளங்களைப் பயன்படுத்துகிறோம். அலைபேசியில் பல செயலிகளைப் பயன்படுத்துகிறோம். இந்தத் தளங்கள், செயலிகள் – நமக்குத் தெரியாமலே நம்மை ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுத்துவது தான் Dark Pattern என்பது! அதென்ன நமக்குத் தெரியாமலே நம்மை ஏதாவது ஈடுபடுத்துவது என்பது?…
Read more

லினக்ஸ் மின்டில் செலினியம் வெப் டிரைவர்,பயர்பாக்ஸ் டிரைவர் – பைத்தானுக்கு நிறுவுவது எப்படி?

செலினியம் திட்டப்பணி செய்வதில் தொடக்க நிலையில் இருப்பவர்கள், செலினியம் வெப் டிரைவர், பயர்பாக்ஸ் டிரைவர் ஆகியவற்றை லினக்ஸ் மின்டில் நிறுவுவது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். லினக்சில் மென்பொருள் நிறுவல் என்பது மிக மிக எளிமையான ஒன்று. டெர்மினலைத் திறந்து கொள்ளுங்கள். 1. நீங்கள் ஏற்கெனவே pip3 நிறுவியிருந்தால் நேரடியாக இரண்டாம் படிக்குப்…
Read more

கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?

கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் போது ரொம்ப முக்கியமானது – அந்த மென்பொருளைப் பற்றி என்னென்ன தெரியும் என்று எழுதி வைப்பது. ஏன் இப்படி எழுதி வைக்க வேண்டும்? நாம் வேலை செய்யப்போவது கட்டற்ற மென்பொருள் அல்லவா! அதனால் பலரும் பங்களிக்க வருவார்கள். அப்படிப் பங்களிக்க வருபவர்களுக்கு உதவியாக, 1. மென்பொருள் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது? 2….
Read more

பைத்தான் ரிஜெக்ஸ் – 7 – ஒரு கோப்பில், மின்னஞ்சலில் உள்ள மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடிப்பது எப்படி?

நம்மிடம் ஒரு கோப்பு(File) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கோப்பில் நிறைய தகவல்கள் இருக்கின்றன. அந்தத் தகவல்களில் ஒரு சில மின்னஞ்சல் முகவரிகளும் இருக்கின்றன. அந்த மின்னஞ்சல் முகவரிகள் மட்டும் நமக்கு வேண்டும். இதைப் பைத்தான் ரிஜெக்ஸ் பயன்படுத்திச் செய்யப் போகிறோம். இந்த வேலையில் இரண்டு படிகள் இருக்கின்றன. 1. கோப்பைத் திறந்து பைத்தான்…
Read more

பைத்தான் ரிஜெக்ஸ் – 6 – வார்த்தை, வாக்கிய எண்ணிக்கை

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது, ஒரு வரியில் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றன என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது, ஒரு பத்தியில் எத்தனை வாக்கியங்கள் இருக்கின்றன ஆகியனவற்றைத் தான்! ரிஜெக்சுக்குப் போவதற்கு முன்பு, சில அடிப்படை கருத்துகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்” – இந்த வாக்கியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதில்…
Read more

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இமெயில் முகவரி ஹேக் செய்யப்பட்டதா?

தலைப்புக்குப் பதில் சொல்வதற்கு முன்னர் – உங்களிடம் ஒரு கேள்வி! “உங்களுடைய மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா? இல்லையா?” என்று எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? “அட! ஆமா! எப்படிக் கண்டுபிடிப்பது?” என்று யோசித்தீர்கள் என்றால் – உங்களுக்குத் தான் இந்தப் பதிவு. மின்னஞ்சல் முகவரி ஹேக் செய்யப்பட்டதை எப்படிக் கண்டுபிடிப்பது? மின்னஞ்சல் முகவரி ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிப்பது…
Read more

பைத்தான் ரிஜெக்ஸ் 5 – கடவுச்சொல்லைக் கண்டுபிடிப்பது எப்படி?

கடவுச்சொல் எழுதுவதில் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளங்களில் கொடுத்திருப்பார்கள். சிலர் எட்டெழுத்துகளாவது குறைந்தது இருக்க வேண்டும் என்பார்கள். சிலர், கட்டாயம் எண்கள் கலந்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். சிலர், பெரிய எழுத்தும் சின்ன எழுத்தும் கலந்திருக்க வேண்டும் என்பார்கள். சிலர் மேலே சொன்ன எல்லாமே இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். இவற்றிற்குரிய பைத்தான் நிரல் எழுதுவது எப்படி?…
Read more

பைத்தான் ரிஜெக்ஸ் – 4 – தேதியை உறுதிப்படுத்துவது எப்படி?

இதற்கு முன்பு, தொலைபேசி எண்கள், அலைபேசி எண்கள் ஆகியவற்றை எப்படிச் சோதிப்பது என்று பார்த்துவிட்டோம். இப்போது நம் முன்னால் உள்ள கேள்வி – ஒரு தேதி – சரியான தேதி என்று தான் பைத்தான் ரிஜெக்ஸ் மூலம் எப்படி உறுதிப்படுத்துவது என்பதைத் தான்!  தேதியை எப்படி எழுதுவோம் – பொதுவாக நாள்/மாதம்/ஆண்டு என்பதை, dd/mm/yyyy எனும்…
Read more