முத்து

பைத்தான் ரிஜெக்ஸ் 5 – கடவுச்சொல்லைக் கண்டுபிடிப்பது எப்படி?

கடவுச்சொல் எழுதுவதில் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளங்களில் கொடுத்திருப்பார்கள். சிலர் எட்டெழுத்துகளாவது குறைந்தது இருக்க வேண்டும் என்பார்கள். சிலர், கட்டாயம் எண்கள் கலந்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். சிலர், பெரிய எழுத்தும் சின்ன எழுத்தும் கலந்திருக்க வேண்டும் என்பார்கள். சிலர் மேலே சொன்ன எல்லாமே இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். இவற்றிற்குரிய பைத்தான் நிரல் எழுதுவது எப்படி?…
Read more

பைத்தான் ரிஜெக்ஸ் – 4 – தேதியை உறுதிப்படுத்துவது எப்படி?

இதற்கு முன்பு, தொலைபேசி எண்கள், அலைபேசி எண்கள் ஆகியவற்றை எப்படிச் சோதிப்பது என்று பார்த்துவிட்டோம். இப்போது நம் முன்னால் உள்ள கேள்வி – ஒரு தேதி – சரியான தேதி என்று தான் பைத்தான் ரிஜெக்ஸ் மூலம் எப்படி உறுதிப்படுத்துவது என்பதைத் தான்!  தேதியை எப்படி எழுதுவோம் – பொதுவாக நாள்/மாதம்/ஆண்டு என்பதை, dd/mm/yyyy எனும்…
Read more

பைத்தான் ரிஜெக்ஸ் 3 – ஒன்றுக்கு மேற்பட்ட அலைபேசி எண்களை எப்படிச் சோதிப்பது?

முந்தைய பதிவில் தொலைபேசி எண் இருக்கிறதா என்பதைப் பார்த்தோம். அதைப் பார்க்கும் போது நண்பர் ஒருவர், 91 என்று நாட்டுக் குறியீட்டுக்குப் பதிலாகச் சில நேரங்களில் நாம் சுழி(0) கொடுப்போமே! அதை உங்கள் நிரல் கையாளுமா? என்று கேட்டிருந்தார். சிலர் 91 என நாட்டுக்குறியீடு கொடுப்பார்கள். சிலர், சுழி(0) கொடுப்பார்கள். ரிஜெக்சில் இதை எப்படிக் கையாள்வது?…
Read more

பைத்தான் – ரிஜெக்ஸ் – 2 – தொலைபேசி எண்களை எப்படிச் சோதிப்பது?

முந்தைய பதிவில் அலைபேசி எண்கள் பார்த்தோம் அல்லவா! இப்போது நாம் ரிஜெக்ஸ் முறையில் தொலைபேசி எண்களைச் சோதிப்பது எப்படி என்று பார்ப்போமா! முதலில் சில தொலைபேசி எண்களை எழுதுவோம். கீழ் உள்ள எண்களைப் பாருங்கள். 9144-22590000 – சென்னை எண் 91462-2521234 – திருநெல்வேலி எண் 9140-23456789 – ஐதராபாத் எண் 914562-212121 – சிவகாசி…
Read more

பைத்தான் – ரிஜெக்ஸ்(Regex) – 1

பைத்தானில் ரிஜெக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாதே என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கான சரியான பதிவு தான் இது.  பைத்தான் ரிஜெக்ஸ் பார்ப்பதற்கு முன்னர், ஓர் எண், அலைபேசி எண்ணா எனக் கண்டுபிடிக்க, பைத்தானில் நிரலைப்பார்த்து விடுவோமே! def isPhoneNumber(text): if len(text) != 10: return False for i in range(0, 9):…
Read more

விசுவல் ஸ்டூடியோ கோடியம் – கோட் – வேறுபாடு என்ன?

விசுவல் ஸ்டூடியோ கோட்(Visual Studio Code) என்பதன் திறந்த மூல வடிவம் தான் விசுவல் ஸ்டூடியோ கோடியம்(Visual Studio Codium) .  இல்லையே! விசுவல் ஸ்டூடியோ கோட்(VS Code) என்பதே கட்டற்ற மென்பொருள் தானே! என்று யோசிப்பவர்களா நீங்கள்! நானும் உங்களைப் போலத் தான் இன்று வரை நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று ஸ்வேச்சா பயிற்சிப்பட்டறையில் விசுவல்…
Read more

உங்களுக்கு Dark Pattern பற்றித் தெரியுமா? ஸ்வேச்சா – நாள் 7

இன்று காலை VS Codium மென்பொருள் நிறுவல் இருந்தது. VS Codium என்பது VS Code மென்பொருளின் கட்டற்ற வடிவம் என்பதை விரிவாகச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்து HTML, CSS வகுப்புகளும் நடந்தன. பிற்பகலில் இரஞ்சித் ராஜ் – தரவு, தரவின் முக்கியத்துவம், தரவுகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றிப் பேசினார். இந்திய அரசின் தரவுகளைப்…
Read more

ஸ்வேச்சா நாள் 6 – கிட்லேப் ஓர் அறிமுகம்

திட்டப்பணி செய்வதற்குப் பதிப்பு மேலாண்மை கருவியின் தேவை என்ன? திட்டப்பணி செய்ய ஒரு குழுவை உருவாக்கிவிட்டோம். பிறகு ஒவ்வொருவரும் திட்டப்பணியில் வேலை செய்யத் தொடங்குவோம் அல்லவா! இவற்றை எல்லாம் எப்படி ஒருங்கிணைப்பது? ஒவ்வொருவரும் தனித்தனி வேலை செய்வதை ஒருங்கிணைப்பதே பெரிய வேலை. சில சமயங்களில் ஒரே வேலையில் (அல்லது ஒரு நிரலில்) பலரும் இணைந்து வேலை…
Read more

கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு – மாநாட்டுக் குறிப்புகள்

இரண்டு நாட்களாக இயங்கலையில் நேரலையில் களை கட்டியிருந்த கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு இன்று மாலையுடன் இனிதே நிறைவு பெற்றது. மாநாட்டுக் குறிப்புகள்: 1) திறமூலத் தமிழ் நிரல் தொகுப்பில் தொடங்கிய அமர்வுகள், தமிழ் இணையக் கல்விக் கழக அமர்வில் நிறைவடைந்தன. மொத்தம் பதினோரு அமர்வுகள். 2) ஒவ்வோர் அமர்வும் தித்திக்கும் தேனாக இருந்தது. நேரலையில்…
Read more

ஸ்வேச்சா நாள் 5: சமூகத்திற்குப் பயன்படும் திட்டப்பணிகள்

இன்று ஸ்வேச்சா பயிற்சிப்பட்டறையின் ஐந்தாவது நாள். நேற்று தனித்தனி அணிகளை உருவாக்கினார்கள். நான் இருப்பது பதினோராவது அணி. அதற்கெனத் தனியே கட்செவி(வாட்சப்) குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. அணி உறுப்பினர்களாகவே தனியாக இணைந்து இந்தக் குழுவை உருவாக்கியிருக்கிறார்கள். காணொளி இயங்கலையில் பிக் புளூபட்டன், விவாதங்களுக்கு discuss.swecha.org, படிப்பதற்கு மூடுல்(moodle) என எல்லாவற்றிலும் கட்டற்ற மென்பொருட்களை எவ்வித சமரசத்திற்கும் இடம்…
Read more